ரமளான் பதிவு 17
திருமறை பற்றி திருமறை
18 032025 செவ்வாய்
கொய்னாபு என்றால் என்ன? ஹஜ்ஜுக்குப் போனவர்கள் இந்த சொல்லைக் கேட்டிருக்கலாம் .
விடை
ஒரு இந்தோனேசிய நாட்டின் காலைச் சிற்றுண்டி
நமது இட்லி போல ஆவியில் வெந்த ஒரு மாவுப் பண்டம்
உருவத்திலும் நிறத்திலும் போண்டா போல இருக்கும்
காபாவில் காலைத் தொழுகை தொழுது விட்டு வெளியே வரும்போது இந்தோனேசியப் பெண்கள் கொய்னாபு என்று கூவி விற்றுக்கொண்டிருப்பார்கள்
உள் நுழைவதற்கு முன்
1 கொய்னாபு வுக்கும் இன்றை ய பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
2 ஹஜ் பற்றி இன்னமு ம் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது
குர்பான் ,நபி இப்ராஹீம் பற்றி எல்லாம் இறைவன் நாடினால் ஹஜ் பிறை சிறப்பு பதிவுகளில் பார்ப்போம்
இனி
திருமறை பற்றி திருமறை
குரானின் பல இ டங்களில் குரான் பற்றி சொல்லப்படுகிறது
அவற்றின் மையக் கருத்து
1 இது இறைவனால் படைக்கபட்டது
2 இதில் மாறுபாடுகள் , முஎதியாதை ரண் பாடுகள் ஏதும் இல்லை
3 இது உண்மையை மட்டுமே எடுதுரை க்கும சத்திய வேதம்
4 படைடக்த இறைவனே இதைப் பாதுகாத்து வருகிறான்
5 இது உலக மக்களுக்கு வழி காட்டும் ஒளியாக ஒரு அருட்கொடையாக இருக்கிறது
6 இது போன்ற ஒரு வேதத் தை
, ஒரு சிறு பகுதியைக் கூட யாரும் படைக்க முடியாது
7 இது அ னைத்து செயதிகளையும் தெளிவாக விளக்கும் ஒரு முழுமையான நூல்
8 ஒரு எச்சரிக்கை , உதவி ,பாதுகாப்பு
• வெற்றி:மகிழ்ச்சி:அமைதி:நன்மை:
பொருள் புரிந்து அரபு மொழியில் படி த்தால் குரானின்மாண்பு பெருமை முழுதாக ஓரளவு விளங்கும்
நமக்கு( 69 வயதுக்குமேல் அ லி ப் பே. படித்த எனக்கு) அதற்கெல்லாம் வாய்ப்பு மிக மிக குறைவு
.
இன்றைய வினா:
114 சூறாக்களில்
ஒரு சூரா பற்றி மட்டும்
இன்னொரு சூராவில் குறிப்பு வருகிறது
அந்த சூறாக்கள் எவை ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
17 ரமளான் (09) 1446
18 032025 செவ்வாய்
சரபுதீன் பீ
No comments:
Post a Comment