ரமளான் பதிவு 10
தொழுகை 2
11032025 செவ்வாய்
, பருவ வயதை அடைந்தவுடன் தொழுகை கடமையாகிறது.
இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.
பருவ வயது: பொதுவாக,
ஆண்கள் 12 முதல் 15 வயதிலும், பெண்கள் 9 முதல் 15 வயதிலும் பருவ வயதை அடைகின்றனர்
7 வயதில் தொழுகும்படி சொல்ல வேண்டும் ,தக்க வயது வந்து விட்டால் அடித்துத் தொழ வைக்கவேண்டும் என ஒரு நபி மொழி இருக்கிறது
எனவே 7 என்ற விடையைத் தவிர மற்ற விடைகளை சரி என்று சொல்லலாம்
சரியான விடை சொல்லி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
ஷி ரீன் பாரூக்
ஷ ர்மதா
முயற்சிக்த சகோ மெ கராஜ் , பாபடி க்கு நன்றி
முன்குறிப்பில் சொன்னது போல தொழுகை , ஜக்காத் ,ஹஜ் இவற்றை ஹதீஸ் எனும் நபி மொழிகளின் உதவியின்றி விளங்கிக் கொள்ள முடியாது
அதில் சிறு ,மாறுபாடுகள் வருவது இயல்பே
எடுத் துக்காட்டாக
கூட்டுத் தொழுகை யில் இ மா ம் அல்ஹம்து சூரா ஓதி யபின் ஆமீன் என்பதை சில பள்ளிகளில் உரக்கச் சொல்வார்கள்
வேறு சில பள்ளிகளில் மெதுவாகச் சொல்வர்கள்
இரண்டுமே சரிதான்
எனவே இதில் அதிகம் சிந்தித்து குழப்பிக் கொள்ளாமல் நாம் செய்வது சரிதான் என்ற மன உறுதியோடு தொடர்ந்து செய்யலாம்
தவறூ என்று தெளிவாகத் தெரிந்தால் திருத்திக்கொள்ளலாம்
தொழுகை பற்றி சில நடை முறை விளக்கங்கள் (சில படிதவை
சில காதில் விழுந்தவை )
தொழுகும்போது ஒரு ஐயம் தோன்றும்
இது இரண்டாவது இல்லை மூன்றாவது ர க்க த் தா என்று
இரண்டா இல்லை மூன்றா என்று ஐயம் வந்து விட்டால் இரண்டு என்று வைத்துக்கொண்டு தொடர்ந்து தொழுக வேண்டும்
மூன்றா நான்கா என்று வந்தால் மூன்று என்று வைத்துக் கொள்ள வேண்டும்
அதாவது ஒரு ர க்க த் அதிகமாக தொழுதால் அதற்குள்ள கூடுதல் நலன் கிடைக்கும்
ஒன்று குறைந்து விட்டால் தொழுகையே நிறைவேறாமல் போய்விடும்
ஜமாத் தொழுகைக்கு பள்ளிக்குப் போகும்போது ஏற்கனவே தொழுகை நடந்து கொண்டிருந்தால் தக்பீர் கட்டிக்கொண்டு ஜமாத்தில் சேர்ந்து விட வேண்டும்
இமாம் குனிந்து ருக்ககூவுக்குப்போய் நிமிர்வாதற்கு முன்பு ஜமாத்தில் சேர்ந்து விட்டால் அந்த ர க்க த் தொழுததாக கணக்காகும்
இல்லாவிட்டால் அந்த ர க்க த்தை தொழுக வேண்டும்
தாமதமாக வந்தவர்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது இமாம் சலாம் கொடுக்கும்போது சலாம் கொடுக்காமல் எழுந்து விட்டுப்போனவற்றைத் தொழுது பிறகு சலாம் கொடுக்க வேண்டும்
தொழும்போது ஓலு முறிந்து விட்டது என்று தெளிவாகி விட்டால்
தொழுவதை நிறுத்தி விட்டு ஓலு செய்து விட்டு வந்து மீண்டும் புதிதாகத் தொழ வேண்டும்
ஜமாத் தொழுகையில் ஒருவர் மயங்கி விழுந்து விட்டால் அருகில் உள்ள இரண்டு, மூன்று பேர் தங்கள் தொழுகையை நிறுத்தி விட்டு
மயங்கியவரை மீட்டு எடுத்து அவருக்கு முதல் உதவி செய்து தேவைபட்டால் மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டும்
ஜமாத் தொழுகை தொடரும
உதவி செய்தவர்கள் புதிதாகத் தொழ வேண்டும்
தொழுகையில் ஸஜ் தா செய்யும்போது கைகளின் உள்ளங்கைப் பகுதி மட்டுமே தரையில் பட வேண்டும்
கை முழுவதும் தரையில் படக்கூடாது
பயணத் தொழுகையில் லுகர் அசர் இ ஷா தொழுகைகளின்
4 ர க்க த்தை 2 ஆக தொழுகலாம் . இது கஸ்ர் தொழுகை எனப்படும்
மேலும் லுகர் அசர் இரண்டையும் ஒரே நேரத்தில்---- லுகர் /அசர் நேரத் தில் தொழுக லாம்
இதே போல மகரிப் இ ஷா வையும் சேர்த்துத் தொழுகலாம்,
ஜம்மு கஸ்ர் என்று இது சொல்லப் படும்
இன்னும் நிறைய எழுதலாம்
எல்லாவற்றிற்கும் ஒரு கால ,நீள வரையறை இருக்கிறது
எனவே இதோடு தொழுகையை நிறைவு செய்யுமுன் உடல் சுத்தம் பற்றி மிகச் சில செய்திகள்
சாப்பிடுமுன் கை கழுவுதல் , நகம் வெட்டுதல் போன்ற பலவற்றை கற்றுக் கொடுத்தது இஸ்லாம்
தொழுகைக்கு சுத்தம் செய்யும்போது காதின் பின்புறம் ,மூக்குத் துளை , பிடரி போன்ற பல உறுப்புகள் நீரால் சுத்தம் செய்யப்படுவது பல உடல், மன நோய்களைத் தடுக்கிறது
சிறுநீர் கழித்தவுடன் சுத்தம் செய்வது இஸ்லாத்தின் சிறப்பு
இதை எல்லாம் தாண்டி
முஸ்லிம்கள் சுத்தமாக இருக்கமாட்டார்கள்
என்ற பரவலான பேச்சு தவறாகப் பரப்பப் படுகிறது
கட்டாயக் குளிப்பின்போது தொண்டையில் நீர் படும்படி gorgle செய்ய வேண்டும்
இன்றைய வினா
250 பவுன் தங்கம் ஒரு ஆண்டுக்கு மேலாக இருந்தால் எத்தனை கிராம் தங்கம் ஜககாத்து கொடுக்க வேண்டும் ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
10 ரமளான் (09) 1446
11032025 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment