Sunday, 23 March 2025

ரமளான் பதிவு 23 • சுரா 73 முஜ்ஜம்மில் • 24 032025 கிங்கள்

 




ரமளான் பதிவு 23

• சுரா 73 முஜ்ஜம்மில்
24 032025 கிங்கள்
• இரவையும் பகலையும்நீங்கள் ( மனிதர்கள் ) சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள்
• என்ற கருத்துள்ள திருமறை வசனம் எது ?
• விடை
• சுரா 73 முஜ்ஜம்மில் வசனம் 20
• சரியான விடை எழுதிய சகோ
• ஷர் ம தா வுக்கு
• வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
20 வசனங்கள் கொண்ட இந்த சூரா வின் முதல் வசனத்தில் வரும்
போர்வை போர்த்தியவர்
என்ற சொல் பெயராக அமைகிறது
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்,
அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்.
ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்.
(ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்,
ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்
; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்;
இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்;
அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்,
நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.(73:20)
முதல் 19 வசனங்கள் சிறிது சிறி தாய் இருக்கின்றன
வசனம் 20 மிக நீள மாக ஒரு பாரா அ;ளவுக்கு இருக்கிறது
அந்த வகை யில் ஒரே வசனத்தில் அமைந்த ருக்கு எனும் சிறப்பைப் பெறுகிறது
தஹஜஜத எனும் இரவு சிறப்புத் தொழுகை பற்றி சற்று விரிவாக சொல்கிறது இந்த சூரா
இரவு முழுதும் தொழுக வேண்டும் என்பது போல சொல்லும் 19 வசனங்களில் இருந்து மாறுபட்டு எளிதாகத் தொழ சொல்கிறது வசனம் 20
ஜக்காத் , சதக்கா இறைவனுக்குக் கொடுக்கும்
அழகிய கடன் என்று சொல்லப்படுகிறது
சில வசனங்கள்
-73:4 --------குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் 7ஓதுவீராக
73:6நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
73:8------(இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
73:4அந்நாளில்(தீர்ப்பு நாளில் ) பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும்.
73:17எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
73:18
அதில் வானம் பிளந்து விடும் அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்
• இன்றைய வினா
-----------மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் இறைவனுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்."
எந்த திரு மறை வசனத்தின் பகுதி இது ?
• இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
• நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
• 23 ரமளான் (09) 1446
• 24032025 திங்கள்
• சரபுதீன் பீ

No comments:

Post a Comment