ரமளான் பதிவு 4
யூனுஸ் நபி
05032025 புதன்
விடை
ஜோனா ,யூனுஸ் நபி
ஜோப் அய்யூப் நபி இவர்களின் பைபிளில் வரும் ஹீப்ரு மொழிப் பெயர்கள்
சரியான விடை எழுதி வாழ்தது , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
தல்லத்
ஷி ரீன் பாரூக் &
கத் தீபு மாமூ னா லெப்பை
மீனால் விழுங்கபட்ட நபி யூனுஸ் என்பது பலரும் அறிந்த ஒரு செய்தி
அவரைபயற்றி குரான் வசனங்கள் அடிப் படையில் பார்ப்போம்
தம் சமுதாயடக்தை எச்சரிக்கை செய்து வழி காட்ட இறைவன் அனுப்பிய நபி அவர்
அவர் தப்பி ஓடி ஒரு கப்பலில் ஒளிந்து கொள்கிறார்
அவர் எதற்காக ஓடி ஒளிகிறார் என்பது பற்றி குரானில் குறிப்பு இல்லை
கற்றறிந்தோ ர் தரும் விளக்கம்
இறைவனின் அனுமதி இன்றி தம் சமுதாயத்துக்கு ஒரு கெடு விதிக்கிறார் :
மூன்று நாட்களுக்குள் நீங்கள் திருந்தாவிட்டால் உங்களுக்கு பெரும் கேடு வந்து சேரும்
என்று
அந்த மூன்று நாட்கள் கூட த்திராமல் தம் சமுதயாத் தினரிடம் சி னம் கொண்டு அவர்களை விட்டு வெளியேறுகிறார்
இதற்கும் அவர் இறைவனிடம் அனுமதி பெறவில்லை
தம் தவறை உணர்ந்த அவர் அனுமதி இன்றி தப்பி ஓடும் அடிமை போல ஓடி ஒளிகிறார்
அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் பயணிகளையும் கப்பலையும் காப்பாற்ற யாராவது ஒருவரை இறக்கி ஆக வேண்டும்
சீட்டுக் குலுக்கி பார்ததில் யூசுப் நபியின் பெயர் வருகிறது
எனவே அவர் கடலுக்குள் தூக்கி எறியப்படுகிறார்
அங்கு ஒரு பெரிய மீன் தவறு செய்த அவரை விழுங்கி விடுகிறது
மீன் வயிற்றுக்குள் இருந்தபடி நபி இடைவிடாமல் இறைவனை வணங்கி வாழ்த்திக் கொண்டிருந்தார்
அதன் காரணமாக இறைவன் அருளால் மறுமை நாள் வரையில் மீன் வயிற்றில் இருக்காமல் நோயுற்றநிளையில் ஒரு வெட்ட வெளியில் அதிலிருந்து வெளியே ற்றபட்டார்
அங்கு ஒரு சுரைக்கொடியை மு ளைக்க வைத்து இறைவன் அவருக்கு நிழல் கொடுக்கிறான
இவ்வளவுதான் குரான் சொல்வதும் அதற்கு விளக்கமும்
நபியே தவறு செய்தாலும் இறைவனின் கடுமையான தண்டனை
உறுதி
அது போல தவறை உணர்ந்து வருந்தி மன்னிப்புக் கே ட்டால் எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும் இறைவனின் மன்னிப்பு உண்டு என்பதை யூனுஸ் நபியின் வரலாறு நமக்குத் தெளிவு படுத்துகிறது
இன்றைய வினா
நபி ஓபரஹீம் அவர்களுக்குக்கு வானவர்கள் கொண்டு வந்த நற்செய்தி என்ன ?
இன்னொரு பணிக்காக வும் அந்த வானவர்கள் வந்தார்கள்
அது என்ன பணி ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
0 4 ரமளான் (09) 1446
05 032025 புதன்
சர்புதீன் பீ
(மீனின் வயிற்றுக்குள் மனிதன் உயிர் வாழ் வது என்பது நம்ப முடியாத ஒன்று என்று சிலர் வாதிடுகிறார்கள்
இங்கிலாந்து நாட்டில் விபத்து ஒன்றில் ஒரு மீ னவர் 100 டன் எடை உள்ள மிகப் பெரிய மீனின் வயற்றுக்குள் போய்விடுகிறார்
60 மணி நேரம் சென்று அவர் உயிருடன் மீட்கப் படு கிறார்
இறைவனின் தூதரான ஒரு நபி உயிரோடு மீண்டு வந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை (Towards understanding Quran )
No comments:
Post a Comment