Wednesday, 5 March 2025

ரமளான் பதிவு 5 நபி லூத் 06 032025 வியாழன்




 ரமளான் பதிவு 5

நபி லூத்
06 032025 வியாழன்
நபி இப் ரஹீம் அவர்களுக்குக்கு வானவர்கள் கொண்டு வந்த நற்செய்தி என்ன ?
இன்னொரு பணிக்காக வும் அந்த வானவர்கள் வந்தார்கள்
அது என்ன பணி ?
விடை
வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் நபி அவர்களுக்கு இறைவன் அருளால் அறிவு நிறைந்த ஒரு ஆண் பிள்ளை பிறக்கும் என்ற நற்செய்தி வானவர்கள் கொண்டு வந்தது
இன்னொரு பணி தீய செயல்களில் வாழும் லூத் சமுதாயத்தை அழிப்பது
சரியான விடை எழுதி வாழ்தது , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சி ராஜூதீன் முதல் சரியான விடை
ஷி ரீன் பாரூக் &
கத் தீபு மாமூ னா லெப்பை
அரை விடை சொன்ன
சகோ ஷர்மதாவுக்கு ½ பாராட்டு
தொடர்ந்து
லூத் நபி பற்றிய குரான் செய்திகளைப்பார்ப்போம்
நபி மார்கள் நூஹ், ஹூத் ,ஸாலிஹ் ,ஷூ அயப் வரிசையில் குரான் லூத் நபியை யும் குறிப்பிடுகிறது
இந்த நபிகள் ஒரு சமுதாயத்தை எச்சரிக்க செய்ய இறைவன் ஆணைப்படி வருகிறார்கள்
அந்த சமுதாய மக்களில் சிலர் நபி மார்கள் சொற்களை பின்பற்றுகிறார்கள்
மற் றவர்கள் நபி மார்களை கிண்டல் செய்து அவர்களை தண்டிக்க முயல்கிறார்கள்
அதனால் அவர்கள் அழிக்கப்படுகிறார்கள்
நபிமார் இஸ்மாயில் , யூனுஸ் போன்று நபி லூததும் மனித சமுதாயத்தில் மேன்மை பெற்றவாராய் இருந்தார் Arabic: ٱلْعَـٰلَمِينَ, romanized: al-'aalameen, lit. 'the worlds')
சில வானவர்கள் மனித உருவில் விருந்தினாராக நபி இப்ராஹீமிடம் வந்து நபிகள் துணைவி சாரா கருததரித்து இருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்
மேலும்இறைவன் ஆணைப்படி தவறு செய்யும் லூத் சமுதாயத்தை களிமண் மழை பொழியச் செய்து அழிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்
நபி லுத்தும் அவறைப்பின்பற்றுவோரும் காப்பாற்றப் படுவார்கள்
ஒரு நல்ல மனிதரான லுத்தின் துணைவியாக இருந்தும் அவரை நம்ப மறுத்த அந்தப்பெண் இரைமறுப்பாளர்களுக்கு ஒரு எடுதுக்காட்டாக இருக்கிறார் , அவருக்கு நரகம் உறுதி என இறைவன் சொல்கிறான்
வழிப்பறிக் கொள்ளை போன்ற பல தீய செயலகளோடு ஆண்கள் பெண்களுக்குப்பதில் ஆண்களை விரும்பும் கொடிய பாவத்தில் ஈடு பட்ட மக்களை நல்வழிப் படுத்த முயன்ற லூத் நபியை கிண்டல் செய்து ஊரிலிருந்து வீரட்டு வோம் என்று மிரட்டினர்
மூன்று வானவர்கள் அழகிய ஆண்கள் உருவில் லூதின் விருந்தினராக வருகிறார்கள்
அபர்களை தீயவர்களிடமிருந்து காப்பாற்ற தமக்கு வலிமை இல்லையே என நபி வருந்துகிறார்
விருந்தினர்களை தம்மிடம் ஒப்படைக்கும்படி ஊர் மக்கள் கேட்கிறார்கள்
நபி அவர்களுக்கு விருந்தினருக்குப் பதிலாக தம் பெண் மக்களை திருமணம் செய்து வைக்க முன் வருகிறார்
தீயவர்கள் பிடிவாதமாக உங்கள் விருந்தினர்தாம் தேவை என்கிறார்கள்
பின்பு வானவர்கள் தாங்கள் யார் என்பதை நபிக்கு சொல்கிறார்கள்
உங்களையும் உங்களைப் பின்பற்றி நடப்பவரையும் நாங்கள் காப்பாற்றுவோம்
என்கிறார்கள்
வானவர்கள் சொன்னபடி நபி தன் கூட்டக்தோடு இரவில் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஊரை விட்டு வெளியேறுகிறார்
அதிகாலையில் இறைவன் கட்டளை , சாபம் இறங்குகிறது
“ஊரை தலைகீழாக பு ரட்டி ப்போட்டு , குவியல் குவியலாக சுட்ட களி மண் கற்களை மழையாகப் பொழியச் செய்தோம் ?
என்கிறான் இறைவன்
தீய செயல்களுக்கு எவ்வளவு கடுமையான தண்டனை என்பதை இறைவன் உணர்த்துகின்றான் ,எச்சரிக்கிறான்
கண்டதே காட்சி ,கொண்டதே கோலம் எனாமல் உணர்ந்து திருந்தி
வாழ்வது நம் பொறுப்பு
இன்றைய வினா
குரானில் மிக அதிகமாக காணப்படும் நபியின் பெயர் என்ன ?
மிகக் குறைந்த இடங்களில் குறிப்பிடப்படும் நபி யார் “
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
05 ரமளான் (09) 1446
06 032025 வியாழன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment