ரமளான் பதிவு 19
சூரா 55 அ ர்ரஹ்மான்
20 032025 வியாழன்
, கண்ணியம் ,மிக்க இறைவனின் முகம் மட்டுமே இவ்வுலகில்
என்ற பொருள் கொண்ட வசனம் வரும் சூரா எது ?
விடை
சூரா 55 அ ர்ரஹ்மான் வசனம் 26, 37
55:26. (பூமியாகிய) இதன் மீது உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே.
55:27
55:
ۚ
55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்
சரியான விடை எழுதி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்பெறுவோர்
சகோ
ஷ ர்மதா &
முதல் சரியான விடை
சீரா. ஜூ தீன்
சுராஹ் அர்ரஹ்மான் (55)பற்றி சில குறிப்புகள் மட்டும்
1 குர்ஆனில் இறைவனின் திருப் பெயர் ஒன்றை தலைப்பாகக் கொண்ட ஒரு சூராஹ் இது
2 மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி ஒன்றாக இறைவன் பேசுவது போல் இந்த சூராஹ் அமைந்துள்ளது
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.(55:33)
மேலும்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
என்ற ஆயத்து மொத்தமுள்ள 78 ஆயத்துகளில் 31தடவை வருகிறது
3சூராஹ் முழுதும் பண்டைய அரபு மொழியில் ஸஜ்(refrain ) என்ற கவிதை உரைநடை அமைப்பில் உள்ளது
எனவே படிக்க, கேட்கமிக இனிமையாகவும் ,மனனம் செய்ய மிக எளிதாகவும் இருப்பதாகச் சொல்வார்கள்
78 வசனங்கள் அதில் ஒரே வசனம் திரும்பத் திரும்ப வரும் 31 போக மீதம் 47 இல் சிலவற்றைப் பார்ப்போம்
55:3. அவனே மனிதனைப் படைத்தான்.
55:4. அவனே, மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தைக் கற்றுக்கொடுத்தான்
இறைவன் எதையும் முழுமையாக அழகாகப் படைக்கிறான் என்று குரான் சொக்கிறது
அதோடு மேலே சொன்னஇரண்டு வசனங்களையும் சேர்த்து ப் பார்த்தால்
கு ர ங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற கொள்கை காணாமல் போய் விடுகிறது
பேச்சு விளக்கம் என்பது தெளிவான பேச்சை குறிக்கிறது என்பது அறிந தவர்கள் கருத்து
எனவே மனிதன் மனி தானாகத்தான் பிறந்தான்
அவன் ஆ ஊ என்று கத்தாமல் தெளிவாகப் பேசினான் என்பது குரானில் இறைவன் சொல்வது
55:33. ஜின், மனிதக் கூட்டத்தாரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், வல்லமை(யும் நம் அதிகாரமும்) இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
இந்த வசனம் விண் வெளிப் பயணம் பற்றியது என்கிறார்கள்
மறுமை பற்றி
55:37. எனவே, மறுமை வரும் நேரம் அப்பொழுது வானம் பிளந்துவிடும் போது, அது (உருகி ஓடுவதில்) எண்ணெயைப் போல் (சிவப்பில்) ரோஜா நிறமாகிவிடும்.
55:60. நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
இந்த சூராவுக்கு அமைப்பின் அடிப்படையில் ஒரு சிறப்புப் பெயர்
அது
குரானின் அழகு
அலங்காரம்
இன்றைய வினா
தூய்மை இல்லாதவ ர்கள் திருமறை கு ரானைத் தொடக்கூ டாது
வன [பொருள் படும் வசனம் குரானின் எந்த சுறாவில் வருகிறது ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
19 ரமளான் (09) 1446
20032025 புதன்
சரபுதீன் பீ
No comments:
Post a Comment