ரமளான் பதிவு 7
இத்ரீஸ் நபி
08032025 சனிக்கிழமை
விடை
இத்ரீஸ் நபி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா முதல் சரியான விடை
சீராஜூதீன் &
கத்தீபு மாமூணா லெப்பை
இத்ரீஸ் நபியின் பெயர் குரானில் இரண்டு இடங்களில் மட்டுமே
வருகிறது
19:56 (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக(மிக்க சத்தியவானாக), நபியாக இருந்தார்
21:85 இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே
திருக்குர்ஆனில், இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது, அதில் இரண்டாவதாகக் குறிப்பிடப் பட்டவர் இத்ரீஸ் நபி ஆவார். இவர் வேதங்களை நன்கு கற்றவர், மக்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தவர் என்பதால், இத்ரீஸ் என அழைக்கப்பட்டார்.
பதிவு கரானின் அடிப்படையில் இருபபதால் இதற்கு மேல் சொல்ல ஒன்றும்இல்லை
இன்றைய வினா
ஈமான் என்றால் என்ன ?
மிக எளிதான வினா
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
07 ரமளான் (09) 1446
08032025 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment