Friday, 14 March 2025

ரமளான் பதிவு 14 நோன்பு 15032025 சனிக்கிழமை





 ரமளான் பதிவு 14

நோன்பு
15032025 சனிக்கிழமை
நிய்யத் என்றால் என்ன
நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும்.5 May 2020
சரியான விடை எழுதி வாளது பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷி ரீன் பாரூக் முதல் சரியான விடை
மெஹராஜ்
சீராஜூதீன் &
கதீபு மாமூனா லெப்பை
நோன்பு மாத த்தில் அடிக்கடி காதில் விழும் சொல்
நோன்பு திறக்கும் நிய்யத் ,நோன்பு வைக்கும் நிய்யத்
நிய்யத் மனதுக்குள் சொல்வதா ,உரக்க சொல்வதா
நிய்யத் சொல்லாவிட்டால் நோன்பு நிறைவே றுமா
நிய்யத் அரபியில்தான் சொல்லவேண்டுமா
இப்படிப் பலப்பல கருத்துப் பரிமாற்றங்கள்
எண்ணமே வாழ்வு என்பார்கள்
அது போல எண்ணமே செயல் என்பது இஸ்லாத்தில் ஒரு கோட்பாடு
நோன்பு மட்டுமல்ல
தொழுகை, சக்காத ,ஹஜ் என எல்லா செயல்களுக்கும் அடிப்படை எண்ணம்
அந்த எண்ணம்தான் நிய்யத்
மனதால் நினைத் தால் போதும் . நம் எண்ணம் இறைவனுக்கு தெரியும்
அந்த எண்ணத் தை மேலும் உறுதி செய்ய வாயால் சொல்லிக்கொள்வது நல்லது
நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். ஆக சடங்காக இல்லாமல் வணக்கம் என்ற எண்ணத்தில் செய்வதாகும். அதாவது நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
• கடமை:
"நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்" என ரமலான் நோன்பு குறித்து குர்ஆனில் (ஸூரத்துல் பகரா, 2:183) கூறப்பட்டுள்ளது.
ரமளான் மாதத்தின் சிறப்புகள்
குரான் சொல்வது இந்த ராமலன் மாதத்தி தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. .
ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழ ங்கினான்.
நோன்பு ஒரு சிறந்த புலனடக்கப் பயிற்சி:
மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் தவம் புரிந்து பெறும் புலனடக்கம் மீள எளிதாக இல்லறத்தில் இருந்தபடியே நோன்பில் வருகிறது
பசி இருக்கும் , பல்சுவை உணவும் இருக்கும் ஆனால் சாப்பிடமாட்டோம்
கொளுத்தும் வெய்யிலில் தொண்டை வறண்டிருக்கும் .கைக்கெட்டுவது போல தண்ணீர் இருக்கும் ஆனால் குடிக்க மாட்டோம்
அருகில் இருந்தும் தேவை ,ஆசை இருந்கும் தொட மறுக்கும் கட்டுப்படுதா ன் நோன்பு
மேலும் வசதி படைதவரும் பசி காகத்தை உணர வைத்து , இல்லாதகவர்
பற்றி சிந்திக்க வைக்கிறது
ஜக்காத்துப் போல இதுவும் ஒரு அமைதியான சமூக சீர் திருத்தம்
(நோன்பின் விதிகள், முறிப்பவை, முறிக்காதவை
பற்றி யெல்லாம் எழுத வேண்டடுமென்று தோன்றவில்லை , எழுதவில்லை)
இன்றைய வினா
வீடுகளுக்குப் பின்புறமாக நுழைவது நன்மையல்ல,
எந்த குரான் வசனத்தின் பகுதி இது ?
எதைக் குறிக்கிறது “
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
14 ரமளான் (09) 1446
15 032025 சனிக்கிழமை
சர்புதீன் பீ

No comments:

Post a Comment