ரமளான் பதிவு 29
சூ ரா 24 சொல்லும் தனி மனித, சமூக ஒழுகக நெறிகள் எவை ?
விடை
சூரா 24, அந்-நூர் தனிமனித ஒழுக்க நெறிகளைப் பற்றி அதிகம் பேசுகிறது. இந்த சூரா ஒரு தனிமனிதன் எப்படி ஒழுக்கமாக வாழ வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், ஒருவர் மற்றவருடன் எப்படி பழக வேண்டும் என்பதையும் கூறுகிறது. இந்த சூரா சமூகத்தில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
திருமணத்திற்கு புறம்பான உறவுகள்: சூரா 24 திருமணத்திற்கு புறம்பான உறவுகளைக் கடுமையாக கண்டிக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
கண்ணியமான நடத்தை:
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் மற்றும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். 24:3031
வீட்டிற்குள் நுழையும் ஒழுங்கு: ஒருவரின் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறது. 24:27
புறம் பேசுதல்: மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதையும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதையும் இது கண்டிக்கிறது.
சாட்சிகள்: ஒரு குற்றச்சாட்டை நிரூபிக்க நான்கு சாட்சிகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது.
சமூக ஒழுக்கம்:
சூரா 24 தனிமனித ஒழுக்கத்தை மட்டும் பேசாமல் சமூக ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறது.
தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக ஒழுக்கம் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் சமூக ஒழுக்கம் தானாகவே சரியாக இருக்கும். ஒருவர் மற்றவருடன் எப்படி பழக வேண்டும் என்பதையும் கூறுகிறது
ஆண் பெண் உறவில் ஒழுக்கக் கேடுகளுக்கு உரிய தண்டனைகள்
பொய்யாக சான்று சொல்வோருக்கு உள்ள தண்டனைகள்
பிறர் வீடுகளுக்குள் நுழைய அனுமதி, கணவன் மனைவி இருக்கும் அறைக்குள் நுழைய அனுமதி, விருந்துக்குச் செல்லும் ஒழுங்கு .
ஆணும் பெண்ணும் கூடும் கூட்டங்களில் ஒழுங்குகள்
இறைவனே இவ்வுலகிலும் அவ்வுலகிலும் ஒளியாக விளங்குகிறான் இறைவனை வழிபட நம்பிக்கை உடையோர் கூடும் இடங்களில் இவ்வொளி காணப்படும்
தகுதி உள்ளோர் திருமணம் செய்து கொள்ளவேண்டும்
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர், அவர்களது சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
24:15. இதனை நீங்கள் (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்கு (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் சொல்(லித் திரி)கின்றீர்கள்; இன்னும், இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள்; ஆனால், அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய(பாவமான)தாக இருக்கும்.
24:58. நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களான அடிமைகளும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன்வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், (மேல் மிச்சமான) உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் உச்சிப்பொழுதிலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும் - ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும்; இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல் கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் சுற்றி (வந்து) கொண்டிருப்பவர்கள்: இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
24:59. இன்னும், உங்களிலுள்ள குழந்தைகள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்களும் அவர்களுக்கு முன்னுள்ள (மூத்த)வர்கள் அனுமதி கேட்பதுபோல் அனுமதி கேட்கவேண்டும்; இவ்வாறே, அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
நெய்வேலி ராஜா
இன்றைய வினா
குரான் சூ ரா 112,
113 114
இவற்றின் சிறப்பு என்ன >
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
28 ரமளான் (09) 1446
29 032025 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment