ரமளான் பதிவு 13
,அனைவருக்கும் தருமம்
14032025 வெள்ளி
எந்த சமுதாயத்துக்கு தருமம் செய்தாலும் இறைவன் அதை ஏற்றுக்கொண்டு அதற்குரிய
என கோடி காட்டும் இறைவசனம் எது ?
விடை
இறை வசனம் 2:272
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை இறைவன் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. இறைவனின் அருளை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்
சரியான விடை எழுதிய சகோ
சீராஜூதீனு க்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இந்த வசனத்துக்கு மறை அறிஞர்கள் கொடுக்கும் விளக்கம் :
தம் மதம் சார்ந்த மக்களுக்கு செய்யும் தருமத்தை மட்டும்தான் இறைவன் ஏற்றுக்கொள்வான் , அதற்குரிய பலனைக் கொடுப்பான் என்ற ஒரு எண்ணம் இசுலாமிய மக்களிடம் இருந்தது. அந்தத் தவறான எண்ணத்தை நீக்குவதே இந்த வசனத்தின் நோக்கம் .
மக்களை நேர்வழியில் நடத்துவதை .இறைவன் தன் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறான் .எனவே அது பற்றிய சிந்தனையை நீங்கள் மறந்து விட்டு எல்லோருக்கும் தான தருமம் செய்யுங்கள் என்பது இதன் கருத்து
(Source - Towards understanding Quran)
நே ற்றை ய பதிவில்
பெரும் செல்வந்தன் காரூன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்
காரூன் வாழ்க்கை வரலாறு குரான் வசனங்களில்
(அல்குர்ஆன்: 28:76-82)
மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது
.
உறுதியாக , காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான செல்வங்களைக் கொடுத்திருந்தோம் –
அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன;
அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).
(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”.
இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா?
ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! கா
ரூனுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பேறு பெற்றவன்” என்று கூறினார்கள்.
கல்வி ஞானம் பெற்றவர்களே “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “வியப்புதான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு உணவு வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு அருள் செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; உறுதியாக ! நம்பிக்கை இல்லாதவர் (காஃபிர்கள்) மேன்மையடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28:76-82
இன்றைய வினா
நிய்யத் என்றால் என்ன >
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
13 ரமளான் (09) 1446
14 032025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment