Monday, 24 March 2025

ரமளான் பதிவு 24 சுரா 62 ஜூமுஆ 25 032025 செவ்வாய

 



ரமளான் பதிவு 24

சுரா 62 ஜூமுஆ
25 032025 செவ்வாய
-மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் இறைவனுக்குப் பிமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்."
எந்த திரு மறை வசனத்தின் பகுதி இது ?
சூ ரா 62: ஜூமுஆ வசனம் 6
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்62:6
(இதே கருத்து சூரா:-2சூரத்துல் பக்ரா(பசு மாடு) வசனம்:-94 லிலும் வருகிறது)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஷர் ம தா முதல் சரியான விடை&
சிராஜூதீன்
தொடர்ந்து அடுதக வசனம்
62:7ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்
என்று உண்மையை உரைக்கிறது "
62:8
நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும், ----------
மேலும் வேதம் அருளப்பெ ற்றும் அதைப் பின் பற்றாதவர்களை இறைவன் பொதி சுமக்கும் கழுதையோடு ஒப்பிடுகிறான்
62:5
எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும், எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
வசனம் 9,10
வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகை (ஜுமுஆ) விதிகளை சொல்கிறது
62:9
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் ----------
62:10
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
நிறைவு வசனம் பற்றி ஒரு செய்தி
வெள்ளிக்கிழமை தொழுகைக்கா மக்கள் கூடியிருக்கிறார்கள் . நபி ஸல் அவர்கள் உரை யாற்றிக்கொண்டிருக்கும்போது
ஒரு வணிக்கக்கூட்டம் பலத்த தாரை தப்பட்டை ஒலியுடன் வருகிறது
அதைக்கேட்டதும் தொ ழுகைக்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் கலைந்து வேடிக்கை பார்க்கவும் வணிகப் பொருட்களை வாங்கவும் சென்று விடுகிறது
12 பேர் மட்டுமே எஞ்சி யிரு நதார்கள்
அதையொட்டியே இந்த வசனம் அருளபெற்றதாம்
62:11
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர்.
மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்
, மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
62:1
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
இன்றைய வினா
உங்களை சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்
என்ற கருத்து
எந்த திரு மறை வசனத்தில் வருகிறது ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
24 ரமளான் (09) 1446 ==
25 032025 செவ்வாய்
சரபுதீன் பீ

No comments:

Post a Comment