Saturday, 22 March 2025

ரமளான் பதிவு 22 சுரா 20 தாஹா 23 032025 ஞாயிறு





 ரமளான் பதிவு 22

சுரா 20 தாஹா
23 032025 ஞாயிறு
, , . /
உமர் ரலி அவர்களின் மனதை மாற்றி இஸ்லாத்தின் மிகத் தீவிர ஆதரவாளர் ஆக்கியது எந்த சூ ரா ?
அந்த சூரா வின் பெயர் எதைக்குறிக்கிறது?
விடை
சூரா (20)தாஹா
தாஹா" என்பது இரண்டு அரபு எழுத்துக்களின் கலவையாகவும் கருதப்படுகிறது, இதற்கு பல மறைமுகமான பொருள்களும் உண்டு என்று சொல்லப்படுகிறது.
, "தாஹா" என்ற சொல்லின் உண்மை பொருள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
29 சூராக் களின் து வக்கத்தில் இது போல பொருள் தெரியாத அரபு எழுத்துக்களின் கலவைகள் வருகின்றன
(எ –டு ) அ லி ப் லாம் மீம் , ஹா மீம் ,
பொருள் தெரியாத அரபு எழுத்துக்களின் கலவைகள்
ḥurūf muqaṭṭaʿāt என்று சொல்லப்படுகின்றன
தாஹா என்பது நபி ஸல் அவரகளின் பெயர் அல்லது அவர்களைக் குறிக்கும் சொல் என்பது தவறு
முழுமையான சரியான விடை அனுப்பிய சகோ
சிராஜூதினுக்கு
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
சூரா (20)தாஹா என்று சரியாகச் சொன்ன சகோ ஷர் ம தா வுக்கு பகுதி பாராட்டுக்கள்
உமர் ரலி அவர்கள் இஸ்லாத்தின் தீவிரமான எதிர்ப்பாளராக இருந்தார்கள்
யாராவது இஸ்லாம் பற்றிப் பேசினாலே வெட்டுவேன் என்று திரிந்தார்கள்
தன் சகோதரியே இஸ்லாத்தை தழுவிய செய்தியை கேள்விப்பட்டு போன வேகத்தில் சகோதரியை தாக்கி விட்டார்
பின்னர் சகோதர பாசத்தில் மனம் அமைதி அடைந்து தான் வரும்போது ஏதோ ஓதும் ஒலி காதில் விழுந்தது அது என்ன என்றூ கேட்க அது இறைவன் அருளிய மறை ,அதை தூய்மையாய் இருந்தால்தான் தொட முடியும் என்று சொல்ல போய் உடல் சுத்தி செய்து வந்து சூரா தாஹாவை
ஓதுகிறார்
கண்களில் நீர் வழிய “இது சத்திய வேதம் “ என்று சொல்லி இஸ்லாத்தில் இணைந்து மிகச் சிறந்த கலிபாக்கலில் ஒருவாரானது வரலாறு (மிகச் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன் )
இந்த சூரா மொத்தம் 135 வசனங்களை உடையது ஒன்றிலிருந்து நூறு வரையான வசனங்கள் முழுவதும் நபி மூசா( அலை) அவர்களைப் பற்றியும் அவர்தம் செயல்பாடு அவருக்கு இறைவன் அளித்த நற்பாக்கியம் பற்றியும் முழுமையாக கூறுகிறது.
மீதி 101 இல் இருந்து 135 வரை உள்ள வசனங்களில் ஆதம் (அலை)அவர்களின் வரலாறு
மேலும்
முஹம்மது (ஸல்) நபிகளாருக்கு ஐந்து வேளை தொழுகையை பற்றிய அறிவிப்பை ( வசனம் 130) மும் சொல்கின்றன
சில வசனங்கள் மட்டும்
20:2(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை
20:6வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
ٰ﴿20:19﴾ (இறைவன்) "மூஸாவே! அதை (கைதடியை) நீர் கீழே எறியும்" என்றான்.
அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார், அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
20:21 (இறைவன்) கூறினான்: "அதைப் பிடியும், பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்."
.
20:22"இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடுமஅது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும்.
"(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.
20:49(இதற்கு ஃபிர்அவ்ன்) "மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?" என்று கேட்டான்.
"ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறனே அவன்தான் எங்கள் இறைவன்" என்று கூறினார்.
20:51"அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?" என்று கேட்டான்.
20:52"இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது என் இறைவன் தவறுவதுமில்லை மறப்பதுமில்லை" என்று (மூஸா பதில்) சொன்னார்
20:65"மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?" என்று (சூனியக்காரர்) கேட்டனர்.
20:66அதற்கவர்; "அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
20:68"(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!" என்று நாம் சொன்னோம்.
20:69"இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்" (என்றும் கூறினோம்).
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - "ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்" என்று கூறினார்கள்.
இன்னும்; "நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!" என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
20:78மேலும் ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்தான்; ஆனால் கடல் அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது.
20:128இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
20:130ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.
20:132 (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
20:135(நபியே! "இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பார்களே! ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார்? நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று நீர் கூறுவீராக.
• இன்றைய வினா
இரவையும் பகலையும்நீங்கள் ( மனிதர்கள் ) சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள்
என்ற கருத்துள்ள திருமறை வசனம் எது ?
• இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
• நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
• 22 ரமளான் (09) 1446
• 23032025 ஞாயிறு
• சரபுதீன் பீ

No comments:

Post a Comment