ரமளான் பதிவு 15
/ஹஜ்
1603 2025 ஞாயிறு
வீடுகளுக்குப் பின்புறமாக நுழைவது நன்மையல்ல,
எந்த குரான் வசனத்தின் பகுதி இது ?
விடை
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; "அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
இந்த வசனம் அரபு நாட்டில் அப்போது பரவலாக இருந்த இரண்டு மூடப் பழக்கங்களை சாடுகிறது
ஒன்று நிலவின் வளர பிறை தேய் பிறை கிரகணம் இவற்றின் அடிப்படையில்
சகுனம் பார்ப்பது
(இன்றும் அது தொ டர்கிறது )
வளரபிறை தேய்பிறை இவை காலத்தை மாதங்களை கணக்கிடவே என்று இறைவன் தெளிவு படுத்துகிறான்
அடுத்து வினாவில் உள்ளது
அந்தக்கால அரபு நாட்டு மக்கள் ஹஜ் பயணத்தை நிறைவு செய்து வீடு திரும்பும்போது வீட்டின் முன் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள்
மாறாக பின் வாசல் வழியிலோ ,சன்னல் வழியாகவோ நுழைவார்கள்
முதலில் சரியான விடை எழுதிய சகோ
சிராஜூதீனுக்கும்
அடுத்து அனுப்பிய ஷர்மதாவுக்கும்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
வசனத்தை மட்டும் குறிப்பிட்ட சகோ
கதீபு மாமூனா லெப்பை க்கு நன்றி
ஹஜ் பற்றி எழுது முன் மன தில் ஒரு குழப்பம்
ஹஜ் என்றால் காபா பற்றி எழுத வேண்டும்
நபி இப்ராஹீம் குடும்பம் பற்றி எழுத வேண்டும்
நீளம் அதிகமாகி விடுமே
வழக்கம்போல இறைவன் மேல் பாரத்தை சுமத்தி விட்டு எழுதத் துவங்கி விட்டேன்
முதலில் இறை வசனங்கள் சில
“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்குங்கள். “
இது இறைவனின் ஆணை ( 2:196 )
(பொருள் வசதிகியும் உடல் நலமும் உள்ளவர்களுக்கு ஹஜ் கட்டாயக் கடமை
இதில் எந்த குழப்பத்துக்கும் இடமில்லை
இவ்வளவு செலவழிகக வேண்டுமா என்ற தயக்கம்
பலருக்கு
அரிசி விலை 100% கூடி விட்டது , கறி மீன் விலை எறிக்கொண்டே போகிறது என்று வாங்காமல் விடுகிறோமா ?
பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெறூமுன்னே போய் வருவது நல்லது
இறைவன் நாடினால்)
நபியே உலக மக்களை ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ள அழையுங்கள் என இறைவன் நபி இப்ராகிமீடம் சொல்ல “ இந்தப் பாலை நிலத்திற்கு யார் எப்படி வருவார்” என அவர் கேட்க
அழைப்பது மட்டும்தான் உங்கள் பணி
வரவைப்பது என் பொறுப்பு என இறைவன் சொல்கிறான்
“மேலும், மக்களுக்கு ஹஜ் [புனித யாத்திரை] பற்றி அறிவிப்பீராக
; அவர்கள் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் ஏறியும், ஒவ்வொரு தொலைதூரப் பாதையிலிருந்தும் உங்களிடம் வருவார்கள்”. ( 22:27 )
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு உலகெங்கிலும் உள்ள மக்கள் நாள் தோறும் ஆண்டு தோறும் இன்று வரை லட்சக் கணக்கில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்
காபா அமைந்துள்ள இப்ராஹிமின் பள்ளத்தாக்கு தாவரங்களோ தண்ணீரோ இல்லாமல் தரிசாக இருந்தது. அல்லாஹ் நபி இப்ராஹிமுக்கு தனது குடும்பத்தை அங்கேயே குடியேறக் கட்டளையிட்டான்.
இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இப்ராஹிம் தனது மனைவி ஹாஜரையும் அவர்களின் குழந்தை மகன் இஸ்மாயிலையும் அங்கேயே குடியமர்த்தி, "எங்கள்
“இறைவனே, இதைப் பாதுகாப்பான நகரமாக ஆக்கி, அதன் மக்களுக்குப் பழங்களை வழங்கு..." (அல்-பகரா 2:126) என்று பிரார்த்தனை செய்தார்
அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்று, ஜம்ஸம் கிணற்றை வெளியே கொண்டு வந்து, மக்களுக்கு உணவளித்தான்
இன்று வரை மக்காவில் எல்லா வகையான கனிகளும்ஆண்டு முழுதும் கிடைப்பது கண்கூடாகக் காணும் இறை அற்புதம்
அதே போல ஜம்ஸம் தண்ணீர்
"உண்மையில், மனிதகுலத்திற்காக நிறுவப்பட்ட முதல் [வழிபாட்டு] வீடு பக்காவில் இருந்தது - இது பாக்கியம் பெற்றதாகவும், உலக மக்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தது" (ஆலி-இம்ரான் 3:96).
"மனிதகுலத்திற்காக நிறுவப்பட்ட முதல் வழிபாட்டு வீடு" என்ற சொற்றொடர் இஸ்லாமிய மரபில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
மேலும், நாம் அந்த வீட்டை மக்கள் திரும்பிச் செல்லும் இடமாகவும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கியதையும் (நம்பிக்கையாளர்களே) நீங்கள் இப்ராஹீம் இருந்த இடத்திலிருந்து தொழுகைக்கான இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் (நினைவில் கொள்ளுங்கள்) நாம் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரிடம், "தவாஃப் செய்பவர்களுக்கும், (அங்கு) தங்கியிருப்பவர்களுக்கும், (குனிந்து) வணங்குபவர்களுக்கும், (தொழுகைக்காக) என் வீட்டைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கட்டளையிட்டோம். ( 2:125 )
நிச்சயமாக, அஸ்-சஃபாவும், அல்-மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் ஒன்றாகும். எனவே, எவர் இந்த இல்லத்திற்கு ஹஜ் செய்கிறாரோ அல்லது உம்ரா செய்கிறாரோ, அவர் அவற்றுக்கிடையே நடப்பதில் எந்தக் குற்றமும் இல்லை. மேலும், யார் தன்னார்வமாக நன்மை செய்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான். ( 2:158 )
------------"எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் (நல்லதை)யும், மறுமையிலும் (நல்லதை)யும் வழங்குவாயாக, மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக" ( 2:201 ).
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்குக் கனவை உண்மையாகக் காண்பித்தான். அல்லாஹ் நாடினால், நீங்கள் (தலைமுடியை) மழித்துக்கொண்டும், கூந்தலைக் குட்டையாக்கிக் கொண்டும், (யாருக்கும்) பயப்படாமலும், மஸ்ஜிதுல் ஹராமில் பாதுகாப்பாக நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிந்திருந்தான், அதற்கு முன்பே (சமீபத்தில்) ஒரு வெற்றியை ஏற்பாடு செய்திருக்கிறான். ( 48:27
இன்றைய வினா
புனித இடங்களைச் சுற்றி வலம் வரும் முறை நாம் ஊர் கோவில்களில்
இருக்கிறது
புனித காபாவில் தவாஃப் சுற்றம் செய் முறையில் அதிலிருந்து ஒரு மாறுதல் இருக்கிறது
அது என்ன ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளையும் ஹஜ்ஜில் சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
15 ரமளான் (09) 1446
15 032025 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment