ரமளான் பதிவு 2
நபி ஆதம் அலை
03032025 திங்கள்
அந்த சிறப்புப் பெற்ற நபி யார் ?
விடை நபி ஆதம் அலை
சரியான விடை எழுதி வாழ்தது பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் –முதல் சரியான விடை
மெகராஜ்
தல்லத்
ஷ ர்மதா
ஷி ரீன் பாரூக் &
கத் தீபு மாமூ னா லெப்பை
உலகின் முதல் மனிதர் முதல் நபியும் கூட
நாம் இதுவரை பாடித்த வரலாறு சொல்லும் செய்திகள் பலவற்றிலிருந்து குரான் சொல்லுஉண்மைகள் மாறுபடுகின்றன
குறிப்பாக குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் ,அவன் காட்டுமிராண்டியாக
மொழி இல்லாமல் ஆ ஊ என்று கத்திக்கொண்டிருந்தான் என்றெல்லாம் குரானில் எங்கும் சொல்லப்படவில்லை
முதல் மனிதனே நபிதானே !
55:3. மனிதனைப் படைத்தான்.368
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
15:26 ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
32:7 அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
இனி நபி ஆதம் அலைபற்றி கூடிய மட்டும் குரான் வசனங்கள் அடிப்படையில் பார்ப்போம்
குரான் வசனங்களை அப்படியே வெட்டி ஓட்டுவது (cut and paste ) மிகவும் எளிது ,பிழைகளும் வராது ஆனால் பதிவு மிக நீளம் ஆகி வி டும்
எனவே குரான் வசனங்களின் கருத்தை மட்டும் எழுதுகிறேன்
அதில் பிழை வராமல் பாதுகாக்கவும் பிழை வந்தால் மன்னிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
முதல் மனிதன், முதல் நபி ஆதம் அலை அவர்கள் இறைவனின் திருக்கரங்களால் களிமண்ணிலிருந்து உருவாக்கபபட்டது ,பிறகு இறைவன் அவருக்கு உயிரூட்டியது ,இதெல்லாம் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும்
வானவர்கள் மனிதனைப்படைப்பது வீண் குழப்பத்தை உண்டு பண்ணும் என எதிர்ப்பு தெரிவிரிக்க அதற்கு இறைவன் உங்களுக்குத் தெரியாதது எனக்குத் தெரியும் என்று சொல்கிறான்
மேலும் மனிதனுக்கு உயிரூட்டியதும் அவனுக்கு வானவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்யவேண்டும் என கட்டளை இடுகிறான்
எல்லோரும் அடிபணிக்கிறார்கள் இப்லீஸைத் தவிர .
நெருப்பில் இருந்து படைக்கபட்ட நான் மனிதனுக்கு அடி பணிய மாட்டேன் என்கிறான்
இதனால் அவன் வானுலகை விட்டு தூக்கி எரியப்படுகிறான்
நான் தீயவற்றை நல்லவை போல காண்பித்து மனித குலத்தை வழிகேட்டில் ஈடு படுத்துவேன் என சூளுரைக்கிறான் இப்லீஸ்
அப்படி வழிகெட்ட மக்களுக்கு கொடிய நரகம் உறுதி என்கிறான் இறைவன்
ஆதமுக்கு ஒரு வாழ்க்கைத் துணையை அருளிய இறைவன் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை அவர்கள் உண்ணக்கூடாது என எச்சரிக்கிறான்
இப்லீஸ் எனும் சைத்தானின் சூழச்சியால் அவர்கள் அந்தக்
கனியைப் பு சிக்க அதன் காரணமாக அவர்கள் இருவரையும் இறைவன் (சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்;
, “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று இறைவன் சொல்கிறான்
*ஆதம் அலை யின் துணைவியின் பெயர் குரானில் எங்கும் குறிப்பிடப்பட்டவில்லை
மேலும் ஆதமின் விலா எலும்பில் இருந்து ஹவவா Eve படைக்கபட்டதாக பைபிள் சொல்கிறது
இது போல நேரடியாக குரான் சொல்லவில்லை
ஆனால் பல நபி மொழிகள் இதை உறுதி செய்கின்றன
(ஆதமும் ஹவ்வாவும் உலகின் வேறு வேறு பகுதிகளில் இறக்கப்பட்டதாகவும்
பின்னர் நபி ஆதம்(அலை) அவர்கள் ஹவ்வா(அலை) அவர்களை தேடிச் சென்று மக்கா அருகிலுள்ள முஜ்தலீபா (Muzdalifah) என்ற இடத்தில் ஹவ்வா(அலை) அவர்களை சந்தித்தார்கள்.என்றும் சொல்லப்படுகிறது ட முஜ்தலீபா என்பது ஹஜ்ஜிக்கு செல்லக் கூடியவர்கள் ஒன்று சேர வேண்டிய இடங்களில் ஒரு இடமாகும். முஜ்தலீபா என்ற சொல் இஜ்தலபா(Izdalafah) என்ற அரபி வார்த்தையில் இருந்து வந்தது, இதன் அர்த்தம் அணுகுதல் என பொருட்படும். அதாவது அந்த இடத்தில் நபி ஆதம் (அலை) அவர்கள் அணுகியதால் (சந்தித்ததால்) முஜ்தலீபா(Muzdalifah) என பெயர் வந்து இருக்கலாம்—இது பற்றி குரானில் குறிப்பு ஏதும் இல்லை )@@@@
ஆதமின் இரண்டு மகன்கள் பற்றி குரான் சூரா 5 : 27-31 இல் வருகிறது
;. அவ்விருவரும் (ஒப்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (பின்னவர்) "நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்" என்று கூறினார். அதற்கு (முன்னவர்) "மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று கூறினார்.
அன்றியும், "நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்" (என்றும் கூறினார்).
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்;. அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),
(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று. ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவர்க்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்;. அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் "அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை. வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்.
)ஆதமின் மக்கள் பெயர் : காபில், ஹாபில்
ஒரு பெண்ணை திருமணம் முடிக்க ஏற்பட்ட போட்டியில் உலகின் முதல் கொலை
இது பற்றி குரானில் குறிப்பு இல்லை @@@)
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
உலகில் அப்போது இருந்த ஒரே இணை ஆதமும் அவர் துணைவியும் தான்.
எனவே திருமணம் என்பது உடன் பிறந்த சகோதரன் சகோதரிகளுக்கு இடை யில் தான் இருக்க முடியும்
( சீ சீ இதென்ன அசிங்கம் என்று சிலரின் முகம் எண்கோணல் ஆவது தெரிகிறது
அந்த சிங்க வாரிசுகள்தான் நாம்_) .
இறைவனின் -பிரதிநிதியான ஆதம் அவர்களின் வழியில் வந்த நாம் அனைவரும் இறைவனின் பிரதி நிதிகளே
இது எவ்வளவு பெரிய சிறப்பு !!
இதை உணர்ந்து சிந்திப்போம் செயல்படுவோம்
(பதிவு மிக நீளமாகி விட்டது )
இன்றைய வினா
வேதம் அருளப் பெற்ற நபிகள் யார் யார் ? என்ன என்ன வேதங்கள் ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
02 ரமளான் (09) 1446
03032025 திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment