Thursday, 20 March 2025

ரமளான் பதிவு 20 சுரா 56 வாக்கியா 21032025 வெள்ளி

 



ரமளான் பதிவு 20

சுரா 56 வாக்கியா
21032025 வெள்ளி
தூய்மை இல்லாதவ ர்கள் திருமறை கு ரானைத் தொடக்கூ டாது
எ ன [பொருள் படும் வசனம் குரானின் எந்த சுறாவில் வருகிறது ?
விடை
சுரா 56: வாக்கியா வசனம் 79
. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜூதீன்
முதல் சரியான விடை &
ஷர்மதா
ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
மக்கீ, வசனங்கள்: 96
96 வசனங்கள் என்றாலும் பெரும்பாலும் சின்ன சின்ன வசனங்கள்
ஆனால் சொல்லும் செய்தி மிகப் பெரிது – மறுமை நாள் பற்றியது
துவக்கமே அந்த நாள் பற்றி ஒரு அ ச்ச உணர்வை ஏ ற்படுத்துவயதாக இருக்கிறது
56:1. மாபெரும் நிகழ்ச்சி (யான இறுதி நாள்) ஏற்பட்டால்,
56:2. அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
56:3. அது தீயோரைத் தாழ்த்திவிடும்; நல்லோரை உயர்த்திவிடும்.
56:4. பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது,ۙ‏
56:5. இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது.
56:6
56
56:6. பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
சுவனத்து வாசிகளுக்குக்கு அவர்கள் இம்மையில் செய்த நன்மைகளுக்குப் பரிசாகக் கிடைக்கும் சுக வாழ்வு
அதற்கு மாறாக மனம் போன போக்கில் வாழ்ந்து மறுமை எல்லாம் கிடையாது
என்று இறுமாந்து திரிந்தவர்கள் சந்திக்கும் கடும் தண்டனை
எல்லாம் மிக விரிவாக சொல்லப்படுகிறது
56:51. அதற்குப் பின்னர்: பொய்யர்களாகிய வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்-
ٍۙ‏
56:52. 'ஜக்கூம்' (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
56:53. ஆகவே, அதைக்கொண்டே வயிறுகளை நிரப்புபவர்கள்.
ِ‌ۚ‏
56:54. அப்பால் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
56:55. பின்னும், தாகமுள்ள ஒட்டகம் குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.
56:56. இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
Play Copy WordByWord தஃப்சீர் 56:57
56:57. நாமே உங்களைப் படைத்தோம்; எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்பவேண்டாமா?
என்று கேட்கும் இறைவன் மேலும் சொல்கிறான்
56:63. (பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
َ‏
56:64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
56:65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம்; அப்பால், நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
இன்னும் விளக்கமாக மேகங்கள் மழை பொழிவதும், ,அந்த நீர் உப்பாக இல்லாமல்
குடிக்கும்படி இருப்பதும்
மரத்தில் நெருப்பு உண்பாவதும்
கரு உருவாவதும்
மனிதனின் மரணமும்
தன் ஆணைப்படியே என இறைவன் தெளிவாக்குகிறான்
இதக்கெல்லாம் மேல்
ۙ‏
56:61. (அன்றியும், உங்களைப் போக்கிவிட்டு) உங்களைப் போன்றோரைப் பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத (உருவத்)தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
என்கிறான்
இதைப் படிக்கும்போது எனக்கு (சரியோ தவறோ) ரோபோ எனும் எந்திர மனிதனும் செயற்கை நுண்ணறிவும் நினைவில் வந்தன
திரு மறை பற்றி
56:77. நிச்சயமாக, இது சிறப்பு மிக்க குர்ஆனாகும்.
56:78. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:79. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்.
56:80. அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
என்று சொல்லி
56:81
56:96. எனவே, (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் (துதி) செய்வீராக!
என்று சொல்லி நிறைவு செய்கிறான் இறைவன்
இன்றைய வினா
“தங்கள் முடி நரை த் துக்கொண்டே போகிறதே ஏன்[
என நபித்தோழர் ஒருவர் கேட்க
நபி ஸல் அவர்கள்
“ சூரா -----,& அதன் கருத்துக்களை ஒத்த பிற சூராக்களும் என் தலை முடியை நரைக்க வைத்து விட்டன “
என்கிறார்கள்
இந்த உரையாடலில் குறிப்பிடப் படும் சூரா எது ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
20 ரமளான் (09) 1446
21032025 வெள்ளி
சரபுதீன் பீ

No comments:

Post a Comment