ரமளான் பதிவு 21
சுரா 11 ஹூத்
22032025 சனிக்கிழமை
“தங்கள் முடி நரை த் துக்கொண்டே போகிறதே ஏன்[
நபி ஸல் அவர்கள்
“ சூரா -----,& அதன் கருத்துக்களை ஒத்த பிற சூராக்களும் என் தலை முடியை நரைக்க வைத்து விட்டன “
என்கிறார்கள்
இந்த உரையாடலில் குறிப்பிடப் படும் சூரா எது ?
விடை
11. ஸூரத்து ஹூது
11. ஸூரத்து ஹூது
மக்கீ, வசனங்கள்: 123
“அச்சமூட்டி எச்சரித்தல்”
இது குரான் முழுதும் பரவி வரும் ஒரு செய்தி
அது இந்த சுறாவில் நபி ஸல் அவர்களின் முதுமையை விரைவு படுத்தும் அளவுக்கு நிறைய இருக்கிறது
இறை வழியை மறந்து இறை தூதர்களை அவமதித்த சமுதாயங்கள் அழிக்கபட்ட வரலாறுகள் விரிவாகவே சொல்லப்படுகின்றன
எந்த அளவுக்கு என்றால் பொருள் உணர்ந்து இந்த சுறாவை ஒதும்போது மடை திறந்து வரும் வெள்ளம் நம்மை மூழ்கடிடக்து விடுமோ என்ற அச்சம் உண்டாகுமாம்
குறிப்பாக
நூஹ் நபியின் கூட்டம் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது
நபி மார்
ஹூதுடைய ஆத் கூட்டம்
, ஸாலிஹுடைய கூட்டம்
லூத்துடைய கூட்டம் '
ஷுஐபைபின் மத்யன்' கூட்டம்
இவைகள் அழிக்கப்பட்டதை இறைவன் நபி ஸல் அவர்களுக்கு அறிவிக்கிறான்
11:101. அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும், அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்துகொண்டார்கள்;
11:6
இவ்வுலகில் எந்த உயிருக்கும் உணவளிக்க இறைவன் மறப்பதில்லை என்கிறது
حَنِيْذٍ
11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "சாந்தி உண்டாவதாக!" என்று கூறினார்கள்
11:118. உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை;) எனவே, அவர்கள் எப்போதும் மாறுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.
11:121. நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக! "நீங்கள் உங்களுடைய நிலையிலேயே செயல்படுங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்."
11:122. "நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அவ்வாறே) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்."
11:123. வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; அவனிடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்; நீர் அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக! ஆகவே, நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.
இன்றைய வினா
உமர் ரலி அவர்களின் மனதை மாற்றி இஸ்லாத்துன மிகத் தீவிர ஆதரவாளர் ஆக்கியது எந்த சூ ரா ?
அந்த சூரா வின் பெயர் எதைக்குறிக்கிறது?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
21 ரமளான் (09) 1446
22032025 சனிக்கிழமை
சரபுதீன் பீ
No comments:
Post a Comment