ரமளான் பதிவு 11
ஜக்காத்
12032025 புதன்
250 பவுன் தங்கம் ஒரு ஆண்டுக்கு மேலாக இருநதால் எத்தனை கிராம் தங்கம் ஜககாத்து கொடுக்க வேண்டும் விடை
50 கிராம
சகோ சீராஜூதீன் முதல் சரியான விடை
ஷர்ம தா
மெ க ராஜ்
நெய்வேலி ராஜா &
ஷி ரீன் பாரூக்
வசதி படைதவருக்கு ஜக்காத் கட்டாயக் கடமை
வசதி = 87 1/2 கிராம் தங்கம் இருக்க வேண்டும் அது ஒரு ஆண்டுக்கு மேலாக இருக்க வேண்டும்
ஒரு கிராம் ரூபாய் 8000/ என்றால் ஏறத்தாழ 7 லட்சம் மதிப்பில் தங்கம்,வெள்ளி ,பணம் எது இருந்தாலும் ஒரு ஆண்டுக்கு மேலாக
கடன்கள் போக இருக்கும் முழுத் தொகைக்கும் 2 1/2 %
எதற்கெல்லாம் ஜக்காத் கிடையாது ?
1 குடி இருக்கும் வீடு – அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும்
அதில் உள்ள பயன் படுத்தும் பொருட்கள்(Furniture TV etc ) எவ்வளவு விலை உயர்ந்ததாக
2 சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனங்கள் எத்தனை இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும்
3 விற்பனைக்கு அல்லாமல் உள்ள வெற்று மனைகள் ,தரிசு நிலங்கள்
4 அடமானத்தில் இருக்கும்
அ )நகைகள் (அண்மையில் கேள்விப்பட்டது ) ,
ஆ ) வீடு
5 நாம் கடனாகக் கொடுத்திருக்கும் தொகை
யாருக்குக் கொடுக்க வேண்டும் ?
ஏழைகள் , தேவை உள்ளவர்கள் ,அவர்களுக்குப் பொறு,ப்பானவர்கள்
இறைவனின் பாதையில் உழைப்பவர்கள்
கடனை அடைக்க வசதி இல்லாதவர்கள்
இஸ்லாத்தில் புதிதாக இணைபவர்கள்
வழிப்போக்காகள் – அவர்கள் செல்வந்தார்களாய் இருக்கலாம்
பயணத்தின்போது பணம் பொருளை இ ழ ந்திருக்கலாம்
கைதிகள்
இது) இறைவன் விதித்த கடமையாகும்; குரான் 9:60
ஜக்காத் ஆண்டு முழுதும் கொடுக்கலாம்
புனித ரமளான் மாதத்தில் கொடுப்பது அதிக சிறப்பு
ஏன் ஜக்காத் கொடுக்க வேண்டும் ?
ஜக்காத் வெறும் தர்மம் மட்டும் அல்ல
சமுதாயத்தில் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வை ஓரளவு சமன் செய்யும் அமைதியான சமூகப் புரட்சி
செல்வம் படைத்த அனைவரும் முறையாக கணக்கி ட்டு சரியான முறையில் பகிர்ந்து அளித்தால் சமுதாயத்தில் வறுமை என்பதே இருக்காது
குரானில் மிக அதிகமாக வலியுறுத்தப்படும் தொழுகை பற்றி சொல்லும்போதெல்லாம்
தொழுங்கள் ஜகாத் கொடுங்கள் என்றே வருகிறது
ஜக்காத் முறையாகக் கொடுக்காதவர்களுக்கு கடும் தண்டனை பற்றியும் குரான் எச்சரிக்கை செய்கிறது
உலகிலேயே மிக அதிகமான தொகை தருமம் செய்யப்படுவது ஜக்காதில்தான்
estimated to range from $200 billion to $1 trillion.from Rs. 16,60,000 Crore to
eighty lakh crore rupees,
இந்தியத் திரு நாட்டில்
While there's no precise data available, estimates suggest that a significant amount of Zakat,
potentially between Rs 7,500 crore and Rs 40,000 crore annually,
is collected and distributed in India, primarily to the poor and for religious education.
நாம் நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை 17.22 கோடி
பிறகு ஏன் நாம் இன்னும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய சமுதாயமாகவே இருக்கிறோம் ?
எனக்கு புரியாத புதிர்
புரிந்தவரகள் சொல்லலாம்
(நோன்பு கிறக்கத்தில் ஒரு இனிய கற்பனை
நம் நாட்டில் ஆண்டு ஜக்காத் தொகை 40000 கோடி வரை போகிறது
அதில் பாதி 20000 கோடி
அதை வைத்து ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சமாக 20 லட்சம் குடும்பதுக்கு செலவழித்து அவர்கள் வாழ்க்கைத் தரம் எல்லா வகையிலும் முன்னேற வழி காட்டி ஏழ்மை நிலையை விட்டு உயர்த்துகிறோம்
20 லட்சம் குடும்பம் என்றால் ஒரு கோடி மக்கள்
10 கோடி மக்கள் வறு மை. யில் வாடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் 10 ஆண்டுகளில்
"வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்,
என்ற நிலை உருவாக்கிவிடும் )
ஈரான் நாட்டில் இப்படி ஒரு அமைதியான சமுதாயப் புரட்சி நடந்து நாடு செழிப்படைந்ததாக கேள்விபட்டி ருக்கிறேன்
இது போன்ற திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறைதான் தடையாக இருக்கும்
ஆனால் நிதி நிறையவே இருக்கிறத
தேவை ஒரு தன்னலமற்ற செயல் திறன் படைத்த (கலாம் போன்ற )ஒரு தலைமை
அது கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும்
அதற்குள் நாம் ஒவ்வொருவரும் தனியாகவோ குழுவாகவோ இணைந்து ஆண்டுக்கு ஒரு குடும்பததையாவது முன்னேற்ற முயற்சிக்கலாம்
சொல்வது எளிது ஆனால் செயல் என்பது மிக சீரமாமன ஒன்று . . குறிப்பாக பயனாளிகள் இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்
}உன்னால் முடிந்த அளவு பணத்தை கொடுத்து விட்டு நீ போய்விடு . தொழில் செய்கிறேனா இல்லை பிரியாணி வாங்கி சாப் பிடுகிறேனா என்பது என பாடு “ இதுதான் பெரும்பாலோர் எண்ணம் .
தங்கம் , பணம் இதற்கெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஜக்காத் கொடுக்க வேண்டும்
அதாவது ஒருவரிடம் 100 பவுன் நகை இருந்து அவர் ஆண்டுதோறும் முறையாக ஜக்காத் கொடுத்து வந்தால் 40 ஆனசுகளுக்கு முன்பே 100 பவுன் கரைந்து போய் விடும்
செலவம் ஒரு சிலரிடம் குவியாமல் பகிர்ந்து அளிக்கப்பட இஸ்லாம் காட்டும் எளிய , கட்டாய வழி
கூடிய மட்டும் ஜக்காதை நேரடியாகக் கொடுங்கள்
வசூல் செய்து பகிர்வதிலும் நிறைய தவறுகள் நடக்கிறதாம்
மேலும் முடிந்தால் ஒரு ஆண்டு ஜக்காதை ஒரே ஒருவருக்குக் கொடுத்து அவ ர் பொருளாதாரத்தில் முன்னேற கழி
காட்டுங்கள்
குறிப்பாக படிப்பு நிறைவு அடையும் நிலையில் உள்ள தேவை[ப்படும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டம் வாங்க
உதவுங்கள்
ஒருவர் படித்து நல்ல பணியில் சேர்ந்து விட்டால் அந்தக் குடும்பமே மேன்மை அடையும்
இன்றைய வினா
ஜக்காத் ,சாதக்கா என்ன வேறுபாடு ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
11 ரமளான் (09) 1446
12 032025 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment