Sunday, 9 March 2025

ரமளான்பதிவு 9 தொழுகை (1) 1032025 திங்கள்

 




ரமளான்பதிவு 9

தொழுகை (1)
1032025 திங்கள்
\
ஈமான் பற்றிப் பாரத் தோம்
மற்ற கடமைகளில் குரானில் மிகவும் வலி யுறுத் தி சொல்லப்படு ம் பொதுக் கடமை எது
விடை
தொழுகை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
மெஹராஜ்
ஷர்மதா &
ஷிரீன் பாருக்
திரு மறையில் 80 க்கும் அதிகமான இடங்களில் “தொழுகை” வருகிறது
மேலும் தொழுகையை நிலை நாட்டுங்கள் , சக்காத்துக் கொடுங்கள் என்று பல இடங்களில் வருகிறது
நிலை நாட்டுங்கள் என்பதன் மூலம் ஜமாத் -கூட்டுத் தொழுகை – வலியுறுத்தப் படுகிறது---அதில் நன்மை பல மடங்கு அதிகமாகிறது
கூட்டுத் தொழுகை என்றால் பள்ளிவாசலுக்குப் போக வேண்டும் என்று இல்லை
வீட்டில் இரண்டு பேர் இருந்தால் கூட ஜமாத்தாகத் தொழுகலாம்
ஜமாத் தொழுகை சமூகத்திலும் குடும்பத்திலும் ஒற்றுமை உணர்வை வளர்க்கும்
உடலுக்கும் மனதுக்கும் ஆனமாவுக்கும் மிகச் சிறந்த பயிற்சியான தொழுகை , இறைவனுக்கும் நமக்கும் இடையில் ஒரு நேரடி உரையாடலாக இருக்கிறது
தக்பீர் கட்டும்போதே உலக சிந்தகனைகளை உதறி பிட்டு தொழுகையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்
சொல்வது எளிது செய்வது மிகவும் சிரமம்
அமைதி நிலவும் தஹஜ்ஜத், பஜ் ர் தொழுகைகளில் இது ஓரளவு சாத்தியம்
நாம் நிற்பது அகில உலகின் இறைவன் முன் எனும் எண்ணம் , அச்சம் மனதில் தோன்றி விட்டால் ஓரளவு ஓர்மைவரும் இந்த ஓரமை இல்லாவிட்டால் தொழுகை நிறைவேறுமா என்ற கவலை வேண்டாம்
தவறு செய்யவே படைக்கபட்ட நாம் ஒருபுறம் , எந்தத் தவறு சத்தனை முறை செய்தாலும் மன்னிக்கும் இறைவன் ஒருபுறம் என ஒரு அழகான கட்டமைப்பில் உலகம் இருக்கிறது
தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும்
சில இறை வசனங்கள் – தொழுகை பற்றி
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வணிகத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்
107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளர்களுக்குக் கேடுதான்.
ۙ‏
107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும் அசிரத்தையாகவும்) இருப்பார்கள்.
107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்கவே தான் தொழுகிறார்கள்.
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான், அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான், ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்;-------
; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன் (73:20 தஹஜ்ஜத் தொழுகை பற்றி )
9:18 பள்ளிவாசல்களை முழுமையான இறை நம்பிக்கை கொந்தர்வகளே நிர்வாகிக்கவேண்டும் என்று சொல்கிறது
நன்னெறி என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை.
------- தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்() இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). 2:177
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.2:43
"மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக" (என்றும்) கூறினர்.3:43
22:77. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூஉ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும், உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நன்மையே செய்யுங்கள்.
வசனம் 11:114 ஐந்து வேளை தொழுகை பற்றிச் சொல்கிறது
நபி மொழிகள் (ஹதீஸ்) சில
சிறந்த அமல் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில்(பாங்கு சொன்னவுடன்) ) தொழுவது
.
ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும்
யார் தொழுவதை விட்டுவிட்டாரோ அவர் இறை நம்பிக்கை ஆற்றவறாய் காஃபிராகி விட்டார்.
தொழுகை நாளையும் தொடரும இறைவன் நாடினால்
இன்றைய வினா
எத்தனை வயதில் தொழுவது கட்டாயம்
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
09 ரமளான் (09) 1446
10032025 திங்கள்
1. சர்புதீன் பீ

No comments:

Post a Comment