ர
மளான் பதிவு 3
தா வூத் நபி
04032025 செவ்வாய்
வேதம் அருளப் பெற்ற நபிகள் யார் யார் ? என்ன என்ன வேதங்கள் ?
விடை
நபி மூஸா – தவ்ராத் வேதம் (Torah ) -ஈஸா நபி -இஞ்ஜீ ல் ((Bible) தாவூத் நபி –ஜபூர் (Zabur)
முகமது நபி -குரான் (Quran )
சரியான விடை எழுதி வாழ்தது , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
மெ கராஜ்
சர்மதா
தல்லத்
ஷி ரீன் பாரூக் &
கத் தீபு மாமூ னா லெப்பை
தாவூத் நபி பற்றி பல குறிப்புகளும் , அவருக்கு அருளபட்ட ஜபூர் வேதம் பற்றி சில குறிப்புகளும் குரானில் காணப் படுகின்றன
அவர் நபியாகவும் ரசூலாகவும் இருந்தார்
(இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று குழப்பிக் கொள்ளாமல் இரண்டும் ஒன்றே என்று வைத்துக்கொள்வோம் )
மேலும் அரசராகவும் ஆட்சி செய்தார்
அவருக்கு இறை செய்தியான வஹீ அறிவிக்ப் பட்டது
ஜபூர் வேதமும் அருளப் பெற்றது
அவருக்கு ஆழந்த அறிவையும் சரியான நியாயத் தீர்ப்பு வழங்கும் திறனையும் இறைவன் கொடுத்திருந்தான்
படை கலன்கள் செய்யும் திறமை கொண்ட அவருடைய வீரத்துககு சான்று அரக்க உருவம் கொண்ட கோலியத்தை போரில் வென்று உயிரைப் போக்கியது
இவர் இறைவனைப் புகழ்ந்து பாடும்போது மலைகளும் பறவைகளும் இவரோடு சேர்ந்து பாடுமாம்
ஒரு வழக்கில் தவறான தீர்ப்பு சொன்ன நபி தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்து இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்
அதற்கு மறுமொழியாக இறைவன்
. ஆகவே, நாம் அவருக்கு அக் குற்றத்தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய அந்தஸ்தும், அழகிய இருப்பிடமும் உண்டு. (
3(8:25(
என்று அவரை மேன்மைப்படுத்து கிறான் அந்த சுரா 3(8
(சாத் ) தாவூத் சூரா என்று சொல்லப்படுகிறது
அரசாட்சி அதிகாரம் வழங்கபட்ட ஒரு சில நபிகளில் தாவுதும் ஒருவர்
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இவரைப் பற்றி பல நபி மொழிகளும் இருக்கின்றன
ஒன்றே ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்
“இறைவனுக்கு மிகவும் பிடித்தமான து தாவுத் நபியின் தொழுகை , நோன்பு இரண்டும்
ஒவ்வொரு இரவிலும் 1/3 நேரம் தொழுவார்
ஒருநாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற் பார் “
நபி மொழி
ஜபூர் வேதம் பற்றி ஒரு சில குரான் வசனங்கள் இருக்கின்றன
ஆனால் அந்த வேதம் என்ன சொல்கிறது என்ற விளக்கம் ஏதும் இல்லை
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;.
இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
— திருக்குர்ஆன் 4:163[6]
உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்;
இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
— திருக்குர்ஆன் 17:55[7]
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
— திருக்குர்ஆன் 21:105[8]
வாயை மூடி அமைதி காயத்தால் மேன்மை பெறலாம்
என்று இந்த வேதத்தில் வருவதாக எங்கோ படிததாக நினைவு
பைபிளின் ஒரு பகுதியான சங்கீதம் Psalm ஜபூர் வேதம் என்று சொல்லப்படுகிறது
பறவைகள், விலங்குகளுடன் உரையாடும் ஆற்றல் பெற்றவர் காற்றையும் ஜீன்களையும் தன் கட்டுப்பாட்டில் வைதிருந்தவர்
இப்படி பல அரிய ஆற்றல்களை பெற்ற நபி சுலைமான் அவர்களின் தந்தை நபி தா வுத் ஆவார்
இன்றைய வினா
ஜோனா ,
ஜோப்
இவர்கள் யார் ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
03 ரமளான் (09) 1446
04032025 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment