கம்பன்
ஒரு நாள் வயல் வரப்பில் நடந்து போகும்போது ஏற்றப்பாட்டு ஓன்று காதில் விழுகிறது --
மூங்கில்
இலை மேலே தூங்கும் --
ஆலிலை
மேல் கண்ணன் தூங்குவது தெரியும் `
மூங்கில்
இலை மேல் தூங்குவது யாரென்று அறிய அடுத்த வரியைக் கேட்க கம்பர் காத்து நிற்க,
ஏற்றக்காரருக்குப் பசி எடுக்கவே பாட்டை அப்படியே விட்டு விட்டு இறங்கி சாப்பிடப்
போய்விட்டார்.
அடுத்த
வரி என்னவென்று ஏற்றக்காரரிடம் கேட்க மனம் வரவில்லை . கவிச்சக்கரவர்த்தி அல்லவா ?
எனவே
ஏற்றக்காரர் சாப்பிட்டு முடித்து, சற்று
இளைப்பாறி திரும்ப ஏற்றத்தில் ஏறும் வரை கம்பர் பொறுமை காக்கிறார்.
ஏற்றக்காரர்
பாட்டைப்பாடுகிறார் :
“மூங்கில்
இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும்
பனி நீரை வாங்கும் கதிரோனே “
“ஏற்றப்பாட்டுக்கு
எதிர் பாட்டு இல்லை “
என்று
மனதளவில் பாராட்டுகிறார் கவிச்சக்கரவர்த்தி
இது
ஒரு செவி வழிச் செய்தி
இந்த
இலக்கிய நயம் மிகுந்த வரிகளை திரைப்பாடலில் புகுத்தியது கவிஞர் கண்ணதாசனின் கவித்திறன்
மரங்கள்
காற்றில் உரசிக்கொல்வதை
தோளோடு
தோள் சேர்த்து நிதமும் சுகம் பெறும் மரங்கள் என்று கற்பனையை ஓட்ட கவிஞரால்
மட்டும்தான் முடியும்
இந்தப்பாடலுக்கு
இசை நாம் அதிகம் அறியாத பீ.எஸ் திவாகர் என்பது இன்னுமொரு சிறப்பு
மிகச்சிறிய
இப்பாடலை தன் இனிய இசையால் மேலும் மிளிர வைக்கிறார் திவாகர்
சுசீலாவின்
தேன் குரல், (ஒல்லி ) விஜயாவின் நடனம் காடு அருவி என காட்சி அமைப்பு எல்லாம் நம்மை
மெய் சிலிர்க்க வைக்கின்றன
படம்
காட்டு ராணி (1965)
பாடல்
கவியரசு கண்ணதாசன்
இசை
பீ. எஸ். திவாகர்
பாடியவர்
பீ. சுசீலா
மூங்கில்
இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும்
பனி நீரை வாங்கும் கதிரோனே
தோளுடன் தோள் சேர்த்து
நிதமும் சுகம் பெரும் மரங்களிலே
வாயுடன் வாய் சேர்த்து
கொஞ்சி வாழ்ந்திடும் பறவைகளே
நிதமும் சுகம் பெரும் மரங்களிலே
வாயுடன் வாய் சேர்த்து
கொஞ்சி வாழ்ந்திடும் பறவைகளே
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி
நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
எனக்கொரு
சிறகில்லையே
ஏங்கும்
இளமைக்குத் துணையில்லையே
குளிருக்கு
நெருப்பில்லையே
பெண்ணின்
குணத்துக்கு மனம் இல்லையே
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி
நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
அன்றொரு
நாள் வந்தான்
அவனை இன்று
வரை காணேன்
பறவை எனும்
தோழி
அவனைப்
பார்த்தால் வரச்சொல்லடி
மூங்கில்
இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும்
பனி நீரை வாங்கும் கதிரோனே
)https://youtu.be/ujtBl7RKFEA
வாவ்! அருமை. இத்தனை நாள் முதல் வரி மட்டும் ஹம் செய்துகொண்டிருப்பேன். முழுப்பாடல் தெரியாது. நன்றி.
ReplyDelete