GHETI FISH MEAL
(சமையல் குறிப்பு அல்ல )
FISH எல்லோரும்
அறிந்த ஒரு சொல்
இந்தச் சொல்லை
GHETI
என்று எழுதலாமா ?
எழுதலாம் என்று சொல்வது நானல்ல
அறிஞர் பெர்னார்ட் ஷா
அதற்கு அவர் சொல்லும் விளக்கம்
ROUGH, TOUGH
இந்த சொற்களில் GH
F என்று
உச்சரிக்கப்படுகிறது
BECAUSE
இந்தச் சொல்லில்
E
I ஒலியில்
வருகிறது
TI
SH ஓசையில்
வருவது
NATION
என்ற சொல்லில்
கூட்டிப்பார்த்தால்
GHETI= FISH
அறிஞர் பிழையாகச் சொல்லுவாரா ?
ஆங்கிலம் ஒரு இயல்பு சாராத மொழி-
Unnatural language
(தமிழ் போல் இயல்பான மொழி அல்ல) என்பதை ஷா இப்படி வேடிக்கையாகச் சொல்வாராம்
இதற்கான மிகச் சில
எடுத்துக்காட்டுகள்
FISH என்றால்
மீன்
MEALS என்றால்
சாப்பாடு
ஆனால்
FISH MEAL
என்பது மீனிலிருந்து செய்யப்படும் பயிர்களுக்கான ஒரு உரத்தைக்
குறிக்கும்
INJUSTICE
என்ற சொல்
JUSTICE
என்ற சொல்லின் எதிர்ச்சொல்
ஆனால்
INFLAMMABLE,
FLAMMABLE
இரண்டும் எதிர்ச்சொற்கள் அல்ல . ஒரே பொருள் கொண்டவை
BUT- பட் PUT பட்டல்ல
புட்
FOOT - (f)புட் NOON நுன்
அல்ல நூன்
LEAD –
ஒரே சொல்லுக்கு லீட் , லெட் என இரண்டு ஒலிகள்
இருபத்தி ஆறே எழுத்துக்கள், உயிர் எழுத்துக்கள் ஐந்தே ஐந்து
பொருளில், ஒலியில் நிறைய முரண்பாடுகள் கொண்ட மொழி உலகெங்கும் பரவலாகப்
பயன்பாட்டில் உள்ளது
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த செம்மொழி
பனிரெண்டு உயிரெழுத்துக்கள் பதினெட்டு மெய்யெழுத்துக்கள் ,
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல், பொருள், யாப்பு, அணி இப்படி
எல்லாவற்றிற்கும் தெளிவான விதிகளுடன் இலக்கணம் வகுக்கப்பட்ட நம் மொழி
தமிழ் நாட்டிலேயே மெல்ல மறக்கப்பட்டு வருகிறது
தனித்தமிழில் எழுத, பேச முயற்சித்தால் அவனை வேறு படுத்திப் பார்க்கும்
மன நிலை
இந்த நிலையும் மாறும் என நம்புவோம்
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment