வண்ணச் சிதறல் 4
வண்ணக்கனவுகள்
திரைப்படங்களில் வரும் கனவுக்காட்சிகள் பார்ப்போரின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
மிக ஆடம்பரமான அரங்குகள் வண்ண வண்ண உடைகள் இனிமையான பாடல் காட்சிகள் என்று திரைத்துறையின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்
கனவு பெரும்பாலும் எனக்கு வருவதில்லை எப்போதாவது வரும் கனவுகளுக்கும் பொருள். பலன் தேடி அலைவதில்லை
கனவுகளுக்குப் பொருள் உண்டு, பெருமானார் நபி சல் அவர்கள் தினமும் தன தோழர்களின் கனவுகள் பற்றிக் கேட்டு அதற்கு பலன் சொல்வார் என்று படித்திருக்கிறேன்
வாழும், வாழ்ந்த வாழ்க்கைக்கே பொருள் புரிந்ததா என்பதே புரியவில்லை பிறகு ஏன் எப்போதாவது வரும் கனவுகளுக்குப் பொருள் காண முயற்சிக்க வேண்டும் ?
ஒரு சில கனவுகள் எனக்குத் திரும்பத்திரும்ப வந்ததுண்டு .எந்தக்கால கட்டம் என்பது நினைவில் இல்லை
காலில் சக்கரம் பதித்தது போல் ஒற்றைக்காலில் சந்தடி இல்லாத தெருவில் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறேன், போகப்போக வேகம் கூடுகிறது ஒரு கட்டத்தில் விமானம் தரையில் இருந்து எழும்புவது போல்மெதுவாக மேலே போய்ப் பறக்கிறேன்,
இது ஒரு காலத்தில் அடிக்கடி வந்த கனவு
இன்னொரு கனவு:
குடும்பத்துடன் நீண்ட பயணம் போகிறேன். .விமானப் பயணமா தொடருந்தா பேருந்தா என்பது தெளிவாக இருக்காது . ஒரு இடத்தில் எப்படியோ குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறேன்.
என்னை விட்டு அவர்கள போனது போலும் அவர்களை விட்டு நான் போனது போலும் மாறி மாறி வரும்
அவர்களைத்
தேடி அலையும்போது விழிப்பு வந்து கனவு கலைந்து விடும்
இதுவும் பல்லாண்டுகளுக்கு முன் நான் அடிகடி கண்ட கனவு
மூன்றான்டுகளுக்கு முன்பு ஒரு கனவு தொடர்ந்து சில இரவுகள் வந்தது
அதில் என் உடலத்தை நான் தெளிவாகப் பார்க்கிறேன்
இன்னொரு அண்மைக் கனவு
பரந்து. விரிந்த மணல் பரப்பு. அதில் நான் நடந்து போகிறேன். காலை உறுத்தாத பட்டுப் போல் மென்மையான மணல் பரப்பு.. தொலைவில் தொள தொளவென வெள்ளை உடையனிந்த ஒரு முதியவர் என்னை வா வா என்று அழைக்கிறார்
இவர் ஏன் நம்மை அழைக்கிறார் என்று முனுமுனுத்தாலும் மறுக்க முடியாமல் அவரை நோக்கிப் போகிறேன்
என்னை ஆரத்தழுவி வாழ்த்துகிறார்
என் உடல் உள்ளத்தில் இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி பொங்கி வழிகிறது.
அணுவின் அமைப்பு
பென்சீன் வடிவம்
தையல் ஊசியின் கண் போன்ற பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கனவுகள் பெரிதும் உதவியிருக்கின்றன.
கனவில் தெளிவு கண்டவர்கள்
கணித மேதை இராமனுசம் ஒளியின் வேகத்தை அறிந்த .ஐன்ஸ்டீன் போன்றோர்
பல்லாண்டுகளுக்கு முன் துறையூரில் நான் பணியாற்றியபோது கண்டது ஒரு மறக்க முடியாத குறிப்பிடத்தக்க கனவு
ஒரு தர்கா கனவில் வருகிறது. பச்சைக் கொடிகள் மினராக்கள் எல்லாம் மிகத்தளிவாகத் தெரிகின்றன
தர்காக்களுக்கு போவதை விரும்பாத நான் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பணிநிமித்தமாக டணிக்கம்பட்டி என்ற ஊருக்கு சில நாட்களாய்ப் போய் வந்து கொண்டிருந்தேன்
கனவுக்கு அடுத்த நாள் பேருந்து வழக்கத்துக்கு மாறான பாதையில் போக வழியில் நான் கனவிவ் கண்ட அதே தர்காவை புலிவலம் என்ற ஊரில் பார்த்து வியப்படைந்தேன்
இன்னும் ஒரே ஒரு நிகழ்வை சொல்லி கனவைக் கலைக்கிறேன்
இது மிக அண்மையில் நான் கண்ட கனவு
ஒரு விருந்துக்குப் போய்க்கொண்டிருந்த என்னை வழிமறித்த நண்பர் ஒருவர் தன் உணவு விடுதிக்கு அழைத்துச் செல்கிறார் நான் விருந்துக்குப் போகவேண்டும் என்று சொல்லியும் தட்டு நிறைய பச்சை சிவப்பு மஞ்சள் என பல நிறங்களில் மிகச் சுவையான இனிப்புகளை வைத்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார் .சுவையில் மயங்கி நானும் சாப்பிட்டு விடுகிறேன்
வெள்ளரிக்காய் துண்டு ஒன்றில் வெண்ணெய் பனிக்கட்டி தடவி
இதைச் சாப்பிடுங்கள் . விருந்துண்ணப் போவதற்குள் அடுத்த பசி வந்து விடும் என்கிறார் .அதோடு கனவு கலைந்து விடுகிறது.
இ( க )டைச்செருகல்
பிள்ளைப் பருவத்தில் அடக்கி வைக்கப்பட்ட நிறைவேறாத ஆசைகள் எண்ணங்களின் வெளிப்பாடே கனவு என்கிறார் உளவியலின் தந்தை சிக்மன்ட் ப்ராய்டு
இது உங்களுக்குப் பொருந்துகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்
இறைவன் நாடினால்
மீண்டும்
ச ந்திப்போம்
வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com