முதுமையில் கல்
எண்ணப்பறவையில் சிறகடித்து வெளி நாடு போய் விடுங்கள் . அங்கு ஒரு
மாறுபட்ட இடத்தில் தங்கி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை அறிய உங்களுக்கு ஒரு
உள்ளூர் வழிகாட்டி தேவைப்படுகிறது
அப்படி ஒரு வழிகாட்டியாக ஒரு முதுமையே உருவு கொண்டது போல் ஒரு பெண்
வந்து நின்றால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் ?
அப்படி ஒரு நிகழ்வு எழுத்தாளர் சிவசங்கரிக்கு ஏற்பட்டது
மூத்த குடிமக்களுக்கு மிக உற்சாகத்தை தரும் அவரது பதிவு ;
சிவசங்கரி கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள அமெரிக்கா போயிருந்தபோது
அந்த நாட்டில் உள்ள சில
பாலைவனப்பகுதிகளில் தங்கி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிய
விரும்பினார்.
அவரை அமெரிக்காவுக்கு அழைத்தவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்து
கொடுத்தனர் . பாலைவனப்பகுதியில் தங்க ஒரு விடுதியில் உணவும் அறையும் ,
சுற்றுப்பயணத்துக்கு ஒரு மகிழுந்து, வழிகாட்ட ஒரு பெண் என எல்லாம் அமைததுக்கொடுத்தனர்
வழிகாட்ட வந்த பெண்மணியைபார்த்து சிவசங்கரிக்கு ஒரு குழப்பம் ,
தயக்கம் .
கை கால் முகம் எல்லாம் சுருக்கம் விழுந்த அந்தப் பெண்மணியின் வயது
எண்பதுக்கு மேல்.
நாம் மூன்று நாளும் நிறைய இடங்களுப் பயணித்து பலரை சந்திக்க எண்ணியிருக்கிறோம் .இவரது முதுமை
நம் அலைச்சலுக்கு ஈடு கொடுக்கமுடியுமா
என்ற ஐயம்
ஆனால் மூன்று நாட்களில் அவரது மன வலிமை, உடல் திறன் ,சுறுசுறுப்பு
அறிவு எல்லாம் பார்த்து அசந்து விட்டார். சிவசங்கரி
விசையுறு பந்தினைப்போல் மனம் வேண்டிய வழிச் செல்லும் உடல்
பெற்றிருந்தார் அந்த எண்பது வயது இளைஞி.
மாலை சுற்றுப்பயணம் முடிந்து களைத்துப்போய் திரும்பும்போது சிவசங்கரி
அவரிடம் நேரே உங்கள வீட்டுக்குப்போய் ஓய்வுதானே என்ற கேட்பார்
ஒருநாள் அவர் சொன்னது “ இல்லை இருபது குழந்தைகளுக்கு கேக் செய்து
தருவதாய்ச் சொல்லிஇருக்கிறேன் . அவர்கள் எனக்காக் காத்துக்கொண்டிருப்பர்கள் “
அடுத்த நாள்
“ ஒரு அனாதை இல்லத்தில் கணக்கு எழுதப்போக வேண்டும் “
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் இருந்தது சிவசங்கரி பயணம்
முடிந்து திரும்புகையில் அந்த முதிய இளைஞி
சொன்னது
“ உங்கள் வருகையால் எனக்கு ஒரு புதிய துறை பற்றி கல்வி கற்க ஒரு
தூண்டுதல், ஆர்வம் கிடைத்தது
சுற்றுப்பயணத்தில் சில பாலைவனச்
செடிகள் பற்றி நீங்கள் கேட்டபோது எனக்குத் தெரியாததால் நான் உங்களுக்கு
விளக்க முடியவில்லை
இப்போது அந்தச் செடிகள் பற்றிப்படிக்க பல்கலைக்கழகத்தில் பகுதி நேர
வகுப்பில் சேர்ந்திருக்கிறேன் “என்றாராம்
கற்றலில் உள்ள அதீத ஆர்வமும் அந்தப்பெண்ணின் இளமையான முதுமைக்கு
அடிப்படையோ !!
அடுத்து சிவகுமாரின் பதிவு
இவர் சில கருத்துக்களை மிக வலியுறுத்திச் சொல்கிறார்
காலை உணவை தவிர்ப்பது மிகப்பெரிய அளவில் உடல் நலக்குறைவை உண்டாக்கும்
என்கிறார்
இவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் அதிகாலை நேரத்தில் மென்பொருள்
பணியாளர்கள் பலர் அலுவலகத்துக்கு விரைவதை ஒரு வருத்தத்துடன் பார்க்கிறார்.
அந்த நேரத்தில் அவர்கள் வெறும் வயிறோடுதான் கிளம்பியிருப்பார்கள் .இது
நாற்பது வயதுக்கு மேல் உடல் நலம் சீர் கெட வழிவகுக்கும்
( இப்போது பள்ளி மாணவரிடையே காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம்
அதிகரித்து வருகிறது . இது பெற்றோர், கல்வியாளர்கள் , சமூக ஆர்வலர்கள் , அரசு
எல்லோரும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு மிகப் பூதாகரமான ஒரு நலப்பிரச்சனை)
ஆன்மாவுக்கு வயது ,முதுமை கிடையது எனவே ஆன்மீகத்தில் மனதை
செலுத்தினால் இளமைத் தோற்றம் பாதுகாக்கப்படும் என்பது இவர் கருத்து
அடுத்து இவர் மிக வலியுறுத்துவது உடல் பயிற்சி .-ஆசனங்கள, நடை,என்று
எதாவது ஓன்று
எதுவம் முடியவில்ல்லை , நேரமில்லை என்றால் சில நிமிடங்கள் ஆழ்ந்த
மூச்சுப்ப்பயிற்சி
இதற்கெல்லாம் மேல் எதையும், எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளும்
ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
இந்தத் தொடர் ஆர்வம் உடலையும் மனதயும் இளமையாக வைத்திருக்கும்
என்கிறார்
சிவகுமார், அமெரிக்க முதுமை இளைஞி இருவருமே தங்கள் வாழ்க்கை நடை
முறையில் பிறருக்கு பாடம் சொல்கிறார்கள்
எனவே இதெல்லாம் கதை என்று ஒதுக்கி விட முடியாது
எல்லாம் இறைவன் அருள் என்பது மறுக்க முடியாத உண்மை . இருந்தாலும்
நாமும் நம் பங்குக்கு சிறு முயற்சிகள் செய்து பார்க்கலாமே
வாழ் நாள் நீடிப்பு என்பது இப்போதெல்லாம் ஒரு அச்சுறுத்தும்
பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது
நல்ல உடல் நலம், ஓரளவு பொருளாதார வசதி இருந்தால் முதுமையையும்
சுவைத்து ரசிக்கலாம்
உடல் நலம் மன நலம் இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை . இரண்டையும்
நலமாக வைக்க மேலே சொன்ன இருவரின் சொற்களையும் வாழ்க்கையும் எடுதுக்காட்டாகக்
கொள்ளலாம்
முதுமையில் மிக நல்ல இனிய அதிக பொருள் செலவில்லாத பொழுதுபோக்கு இறை
வழி. இந்த வழியில் உடல் மனம் ஆன்மா மூன்றுமே திடம் பெறுகின்றன
இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் கோவில் பிரகாரத்தில் முறையாக
வலம் வருதல் , தோப்புக்கரணம் இரண்டும் நல்ல உடல்பயிற்சிகளாகும்
உள்ளம் ஒன்றி இறைவனை
வழிபட்டால் மனம், ஆன்மா திடமாகும்.
இசுலாமிய இறைவணக்கம் உடல், மனம் ஆன்மாவுக்கு வலிமை சேர்க்கும் ஒரு
மிகச் சிறந்த பயிற்சியாக அமைகிறது பள்ளியில் நடக்கும் கூட்டுத்தொழுகை ஒரு சமூகப்
பயிற்சியாக் இருக்கிறது
கிறித்தவர்கள் கடுமையான தியானம் மேற்கொள்கிறார்கள்
படிப்பு என்றால் பள்ளி, கல்லூரி , தொலை தூரக்கல்வியில் சேர்ந்துதான்
படிக்க வேண்டும் என்று இல்லை
சிறு சிறு நூல்கள் வாங்கிப் படிக்கலாம்..எது உங்களுக்குப் பிடிக்கிறதோ
அது பற்றிப் படிக்கலாம். மதம், அறிவியல், சமையல் , என எல்லா நல்ல செய்திகளையும் கற்றுக்கொள்ளலாம்
சிறு கதைகள் , புதினங்கள் (நாவல்) படிக்கலாம்..கடலை மடித்து வரும்
தாளில் கூட எதாவது ஒரு சிறிய செய்தி
இருக்கும்.
ராபின்சன் குருசோ என்ற ஆங்கிலப்புதினம் பள்ளி வகுப்புக்களில் துணைப்
பாடமாக வரும் .அதைப்படித்து பல செய்திகளை அறிந்து கொண்டதாய் மூதறிஞர் ராஜாஜி
சொன்னதாய் எதிலோ படித்தேன்
தொலைகாட்சி , தொலைபேசி உரையாடல் , கட்செவி முகநூல் இவற்றிற்கெல்லாம் ஒரு அளவு மட்டுமே
நேரம் ஒதுக்கி அதை மீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
இவையெல்லாம்.. நம் உடலையும் மனதையும் முடக்கிப்போடும் நேரம் கொல்லிகள். உருப்படியாக ஏதும் இல்லாமல் மணிக்கணக்காக தொலைக்காட்சி, கட்செவி
பார்த்துக்கொண்டே இருக்கலாம் இது ஒரு வகை
மனக்களைப்பை உண்டாக்கும்
எந்த வேலையையும் தொலைகாட்சி பார்ப்பதற்காக ஒத்திப்போடாதீர்கள்
.தொலைக்காட்சியை மூடி விட்டு உங்கள் பணியில் மனதை செலுத்துங்கள் தொலைக்காட்சித்
தொடர்களை நாள்கணக்கில் பார்க்காமல் விட்டாலும் பெரிய இழப்பு ஒன்றும் ஏற்படாது
பிறருக்கு நம்மால் முடிந்த சிறு உதவிகள், செய்வது நம் உற்சாகத்தை
பெரிதும் வளர்க்கும் பண உதவிதான் என்று இல்லை .வெய்யிலில் வரும் அஞ்சல் , தூதஞ்சல்
பணியாளருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுப்பதும் உதவிதான் மாணவர்களுகு படிப்பில் உண்டாகும் ஐயங்களை
தெளிவு படுத்துவதும் பெரிய உதவிதான்
அடுத்து சின்ன சின்ன தோட்ட வேலைகள் செய்வதும் செடிகளை பூக்களைப்
பார்ப்பதும் ஒரு சிலிர்ப்பையும் உற்சாகத்தையும் தரும்
எல்ல்லோருக்கும் ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம்தான் . பொழுது
போகவில்லை என்ற நிலையை மாற்றி பொழுது போதவில்லை என்ற நிலைக்கு வந்து விட்டால் இளமை
போல் முதுமையும் இனிமைதான்
இ (க)டைச்செருகல்
நம் நாடு வளரும் நாடா வளர்ந்த
நாடா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் நம் நாட்டில் சிலர்
குடிக்கும் ஒரு குவளை டீ மூன்று லட்சம் ( 3,00,000)ரூபாய் என்பது உண்மையா?
இறைவன் நாடினால்
அடுத்த
வாரம்
சந்திப்போம்
வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ReplyDeleteஅன்பிற்கும் மரியாதைக்குமுரிய சச்சா அவர்களுக்கு
வண்ணச் சிதறலான தங்களின் எண்ணச் சிதறல் அருமையாக இருந்தது.மிகப் பலனுடய பல விடயங்கள் நீங்கள் குறிப்பிட்டிருந்தாலும் என் நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல என்னை உறையச் செய்து திருத்தப் போகிற விஷயம்(இறைவன் நாடினால்)
^தொலைகாட்சி பார்ப்பதினால் உங்கள் வேலையை தாமதிக்காதீர்கள்"என்பதுதான்
இனி நான் கவனுமுடன் இருப்பேன்.
புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே
Delete[16:45, 1/14/2018] Meharaj 2: சர்புதீன் நலமா?
ReplyDeleteவீட்டில் எல்லோரும் நலமா?
எண்ணப் பறவை சிறகடித்து இப்ப கடலூருக்கு வந்து விட்டது.
உன் எழுத்துக்கள் படித்து மிகவும் சந்தோஷம்.
நானும் ஜோதியும்
சிவசங்கரியையும்
மேரிக்கோவையும் பற்றி
பேசிய விஷயங்களையே
உன் எழத்தில படிக்க மிகவும் நன்றாக இருந்தது.
மனதில் உள்ள இளமை தான் நம் ஆரோக்யத்தின் ரகசியம்.
ஆவலோடு அடுத்த வார
👏எண்ணங்களை எதிர் பார்க்கிறேன்.
[10:50, 1/14/2018] Padi Peer: 👏
JOTHY Liakath
தம்பி.அஸ்ஸலாமு அலைக்கும்.வண்ணச்சிதறல் தலைப்பே சி ரீலென்று ரொம்ப அழகாக இருக்கிறது. "முதுமையில் கல்' மாறுபட்ட ஆனால் அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியமான விஷயம். சிவசங்கரிக்கு உதவிய அந்த வெளிநாட்டுப் பெண்மணி, சிவகுமார் அளவிற்கு இல்லையென்றாலும் நாமும் வாழ்நாளை அன்றாடம் புதுப்பித்துக் கொள்ள த தான் வேண்டும். உதாரணம் காட்டக் கூடிய அளவிற்கு நீயும், திட்டமிடுதல், முதற்கொண்டு அனைத்தையும் சிறப்பாகத் தான் செய் சிறாய். மேலும் சிற்பிறவாழ்த்து கள்
Ajmal
எல்லா வயதினருக்கும் ஏற்ற பயனுள்ள நற்சிந்தனைகள்.
Enjoyed reading.
Tata Ravi Erode
👌
CRV Mathuram
பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி மாமா, அருமையான கட்டுரை. பொங்கல் வாழ்த்துக்கள்.Hidayath
ReplyDelete