Saturday, 6 January 2018

வண்ணச்சிதறல் 1




Image result for spectrum images

 


 

 

நெஞ்சில் ஓவியமாய்


நாற்பது வந்தால் வெள்ளெழுத்து தலையெழுத்து  என்பார்கள்.
 கண்ணாடி போட்டு அதை சரி செய்து கொள்ளலாம்.
உடல் நலக்குறைவு என்றால் மருத்துவம் பார்க்கலாம்

கணேசுக்கு வந்தது அப்படி ஒரு எளிதான பிரச்சனை இல்லை

 மாடியில் முழு நிலவு குழல் விளக்கு போல் குளிர்ந்த ஒளி வீசினாலும் அவன் மனது எரிமலையாகக் கொதித்தது

எப்படி எப்போது அது நடந்தது  என்ன ஏது ஒன்றும் புரியவில்லை
.ஆனால் அது நடந்து விட்டது நடந்தே விட்டது- என்பது  மறுக்க முடியாத, மறக்க முடியாத உண்மை

 மனதில் ஒரு சிலிர்ப்பு கிளர்ச்சி .
பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன  
வெள்ளை உடை தேவதைகள பின்புலத்தில்

பெரிய அழகென்றோ நல்ல நிறம் என்றோ சொல்ல முடியாது .ஆனால் கண்களில் ஒரு கவர்ச்சி,  நேர்கொண்ட பார்வை ,
தேவையற்ற அச்சம் , குழைவு  அலங்காரம் ஏதும் இல்லை

அவனும் ஒன்றும் அப்படி  கய்ஸ் ,,அம்பிகாபதி எல்லாம் கிடையாது. பெண்களுடன் தேவைக்கு மேல் பேசவே மாட்டான்

திடமான மனம் உள்ளவன் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தான்
திருமணமாகி நிறைவான வாழ்க்கை, நல்ல துணை, முத்து முத்தாய் மூன்று குழந்தைகள்

வடமாநிலத்தில் இருந்து அந்தக் கிளைக்கு அவன் மாற்றல் ஆகி வந்தபோது அவனுக்கு நாற்பது  வயது இருக்கும்.
காதல், கத்தரிகாய் எல்லாம் வருவதற்கு முன்பே இறைவனருளால் நல்ல  மண வாழ்க்கை அமைந்து விட்டது

பல்வேறு ஊர்களில், மாநிலங்களில் மிக அழகான பெண்களைப் பார்த்த போதெல்லாம் ஏற்படாத ஒரு இனம்புரியாத உணர்வு

பித்துப்பிடித்தது போல்எந்நேரமும் அந்தப்பெண் பற்றியே சிந்தனை,
அவள் வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி   உலாவினான்  
புதிதாக எழுதப் பழகிய பள்ளிக்குழந்தை போல் அவள் பெயரை எழுதிக்கொண்டே கிறுக்கிக்கொண்டே இருந்தான்

அவளிடம் இது பற்றி நேரிலோ எழுதியோ பிறர்  மூலமோ  தெரிவிக்கும் எண்ணம், துணிச்சல் இல்லை

  வெகு தொலைவு நடந்து போய் ஒரு கோவில்சுவரில் பல இடங்களில் அவள் பெயரை எழுதினான் எழுதினான் எழுதிக்கொண்டே இருந்தான்

இதெல்லாம் தவறு ,சீரான மண வாழ்க்கையில் பெரிய சிதைவை ஏற்படுத்தும் என்பதெல்லாம் அறிவுக்கு எட்டாத அளவுக்கு  சிறுவன் அல்ல
.என்ன செய்வது  மனசு அறிவுக்குக் கட்டுப்பட மறுக்கிறதே .

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டில் வருவது போன்ற ஒரு தேரில்  அவளுடன் நெருக்கமாகப் போவது போல் கனவு வேறு

நிலை தவறி விடுவோமோ என்ற அச்சம் எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கி விட்டது

ஏதாவது செய்ய வேண்டும் என்று தெரிகிறது ஆனால் என்ன செய்வது என்பதுதான் பிடிபடவில்லை

சிந்தித்து சிந்தித்து சிந்தனையே களைத்து விட்டது

அலுவலகப்பணியில்அவளுடன் ஒரு சிறிய கருத்து மோதல்.
அதை ஊதிப்பெரிதாக்கி   பேசுவதை முழுமையாக நிறுத்திக்கொண்டான்

.மனதில் இருந்தும் நினைவை அழித்து விட்டதாக நினைப்பு
இதற்கிடையில் அவனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகி விட்டது 

அன்றுதான் அவள் கண்களில் கண்ணீரைக் கண்டான் .அவளும் நெஞ்சை மறைத்திருக்கிறாள், நினைவை மறைத்திருக்கிறாள் ஆனால் கண்களில்   ஓடிய கண்ணீரை மறைக்க முடியவில்லை

அதன்பின்  பல இடங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வில் வந்து விட்டான் .பிள்ளைகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடித்து பேரன் பேத்தி எடுத்து நரை முது கிழவனாகிவிட்டான் உடலளவில் .

ஆனால் மனம் ?
நெஞ்சில் புதைந்த நினைவுகள் அழியவில்லை
கண்களில் பதிந்த உருவமும் மறையவில்லை
நினைக்கத் தெரிந்த மனதுக்கு மறக்க முடியவில்லை

இன்னும் அந்தபெயரைக்கேட்டால், பார்த்தால் படித்தால்  இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு .

அவளும் பணியிலிருந்து ஓய்வோ விருப்ப ஓய்வோ பெற்று பேரன் பேத்தி எடுத்து முதுமை அடைந்திருப்பாள்
.
இருக்கிறாளா அதுவும் தெரியாது

ஆனால் அவன் நெஞ்சில் அழியா ஓவியமாய் பதிந்திருக்கிறது அவள் இளமை நினைவுகள்

தேடுதல் தொடர்கிறது முக நூலில்,  வலை தளத்தில் என்று

எதற்காக இந்தத் தேடல் விட்டு விடு என்று அறிவு சொல்கிறது
 .
அதையும்  மீறி ஒரு இனிய சுகத்தை,
மலர்களின் மணத்துடன் வரும்  தென்றல் வருடியது போல் ஒரு சுகந்தத்தைத் தருகிறது இந்தத் தேடல்
 
இதற்குப் பெயர் காதலா கவர்ச்சியா  நட்பா பாசமா அன்பா இல்லை எல்லாம் சேர்ந்த  ஒரு கலவையா
தெரியவில்லை புரியவில்லை

பி கு                                                         
தளையற்ற எழுத்தாளர்  (freelance writer ) என்று சொல்லிக்கொண்டால் அரசியல், ஆன்மிகம், இல்லறம் துறவறம் மருத்துவம் இலக்கியம் திரைப்படம் சின்னத்திரை  படப்பாடல்  என்று எதைப்பற்றியும் எழுதலாம் , .  வரையறைகளுக்கு கட்டுப்பட்டாமல் அப்படி  எழுத ஒரு எண்ணம்  ஆசை
வண்ணச்சிதறல்  என்ற தலைப்பில் ஒவ்வொரு ஞாயிறும் எழுத எண்ணியுள்ளேன் (இறைவன் நாடினால் )
அதில் முதல் முயற்சிதான் நெஞ்சில் ஓவியமாய்
இது வரை நான் எழுதி வந்ததற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு பதிவு
இது பற்றி உங்கள் மாறுபட்ட  கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்
இந்தப்பதிவின் பின்புலம் அடுத்த பகுதியில்
முன்பே நான் குறிப்பிட்டதுபோல் முகநூலிலும் வலை நூலிலும் வெளியிடுகிறேன்
இறைவன் நாடினால்
அடுத்த ஞாயிறு
சந்திப்போம்

வலை நூலில் படிக்க
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com
என்று தட்டச்சுச் செய்யவும்
கடந்த சில ஆண்டுகளாக நான் எழுதிய அனைத்தையும் அதில் எளிதில்  படிக்கலாம்
அதிலேயே உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்







No comments:

Post a Comment