சிவப்பு, நீலம்
பரபரப்பான சென்னை நகர காலை நேரம்.அதில் மிகபரபரப்பான போக்குவரத்து
நிறைந்த ஒரு சாலை.
நடப்பவர்கள் சாலையைக் கடக்க எதுவாக இருபுறமும் போக்குவரத்து நிறுத்தம்
அழகான ஒரு நாய்குட்டியுடன்
மிக அழகான மனிஷா கொய்ராலா சாலையைக் கடக்கிறார்
விதியை மீறி விரைந்து வந்த மகிழுந்தில் சிக்கி நாயின் காலில் அடிபட்டு
விடுகிறது சிறிய காயம்
.உடனே விலங்கு பாதுகாப்புக்கான நீலச் சிலுவை அமைப்பை சேர்ந்த மனிஷா கத்திக்கதறி
போக்குவரத்தை நிறுத்தி ஒரு கூட்டத்தை கூட்டி விடுகிறார்
.போக்குவரத்துக் காவலர் மிகவும் பதற்றாமாகி விடுகிறார் . முதலமைச்சர்
அந்தச் சாலையை கடக்கும் நேரம் அது . நாயைக் காயப்படுத்திய வண்டி எண்ணை மனிஷாவுக்கு
கொடுத்து அமைதிப்படுத்துகிறார்
இது இந்தியன் படத்தில் ஒரு காட்சி
அடுத்து தொலைக்கட்சியில் ஒரு பேச்சுத் தொடர். . எழுத்தாளர் ஒருவர்
தான் இரவில் வீடு திரும்பும்போது விடாமல் குரைக்கும் நாய் பற்றிப் பேசினார்.
.இரவில் தனியே வரும்போது நாய் குரைத்தால் ஏற்படும் அச்சம், திகில் அதை
பட்டு உணர்நதவர்களுக்குத்தான் தெரியும் . குரைக்கும் நாய் கடிக்காது என்ற தத்துவம்
எல்லாம் அப்போது செல்லுபடியாகாது
கடித்து விடுமோ என்ற அச்சமே பீதியை ஏற்படுத்தும்
பல நாள் பொறுத்த எழுத்தாளர் ஒரு நாள் நிறைய கற்களை பொறுக்கி
வைத்துகொண்டு அந்த நாயின் மேல் விட்டெரிய நாய் குரைப்பதை நிறுத்தி விட்டது
இதைக்கேட்டு பொங்கி எழுந்தார் ஒரு விலங்கு நல ஆர்வலர்.
நாயைத்
துன்புறுத்தியதாக உங்கள் மேல் வழக்குத் தொடர்வேன் என்றார் .
என்னை விட நாய் நலம் எனக்குப் பெரிதல்ல என்று சொல்லி அவர் வாயை
அடைத்து விட்டார் எழுத்தாளர்
நான் நேரில் உணர்ந்த ஒரு நிகழ்வு. பல ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நான் பணியாற்றியபோது நடந்தது .
வீட்டுக்கு அருகில் ஒரு பூனை கத்தும் ஒலி தொடர்ந்து பல மணி நேரம் கேட்டது ..ஒலி எங்கிருந்து என்று
தெரியவில்லை
எதோ பெரிய சமூக சேவை
செய்வதாய் நினைத்து கோவை விலங்கு வதைத் தடுப்பு அமைப்புக்கு தொலை பேசியில் இதைத்
தெரிவித்தேன்,
அவ்வளவு தொலைவு வருவதற்கு எங்களிடம் பொருளாதார வசதியோ வண்டி வசதியோ
கிடையாது . முடிந்தால் நீங்கள் அந்தப் பூனையை எங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு
வாருங்கள் .சிந்தித்து ஒரு முடிவு செய்வோம் என்றார்கள் .வம்பை விலை கொடுத்து வாங்க
வேண்டாம் என்று விட்டு விட்டேன்
விலங்குகளுக்கு பாதுகாப்பு என்பது ஊடகங்களில் மட்டும்தானோ
.
அண்மை நிகழ்வுகள் சில மனிதனை விட விலங்குகளுக்கு அதிகப் பாதுகாப்பு,
உரிமை உள்ளது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன
விலங்குகள் போகட்டும் மனிதன் நிலை என்ன ?
இந்திய அளவில் மனித உரிமை ஆணையம் என்ற வலுவான சட்ட ரீதியிலான அமைப்பு
இருக்கிறது . உலகளவில் செஞ்சிலுவைச்சங்கம் இருக்கிறது .ஐ நா சபை இருக்கிறது .
பெரியண்ணன் இருக்கிறார் .அம்னசிட்டி என்ற அமைப்பு இருக்கிறது
ஆயிரம் இருந்தும் நம் நாட்டிலும் உலக அளவிலும் மனித உரிமைகள்
தொடர்ந்து மீறப்பட்டு வருவது கண்கூடு,
குடும்ப வன்முறை, துணைவி துணைவனையும் துணைவன் துணைவியையும் கொலை செய்வது,,
ஒருதலைக்காதல் வன்முறை கொலை
ஆணவக்கொலை கருக்கொலை , ,கட்டாயத்திருமணம் ,
முதியோரைக் கவனிக்காமல் விடுதல் ,குழந்தைகளை பயமுறுத்துதல், அடித்தல்,
காவல் நிலைய வன்முறைகள், மரணங்கள் தவறான மருத்துவ முறைகள் உடல் ஊனமுற்றவர்களுக்கான
சிறப்பு சலுகைகளையும் , இட ஒதுக்கீடையும்
மறுப்பது என்று தனி மனிதன் உரிமை மீறல் நீண்டு கொண்டே போகிறது
அடிப்படைக் கல்வி, சுகாதார வசதிகள் குறிப்பாக கழிவறை வசதி
மறுக்கப்படுவதும் மிகப்பெரிய தனி மனித உரிமை மீறலகள்
மிகப்பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன
அவற்றில் வெகு சில
போபால் நச்சு வாயு, ,ஜாலியன்வாலா பாக் படுகொலை , கீழவெண்மணியில் உயிரோடு எரிப்பு , கோத்ரா நிகழ்வு
,வெள்ளையர்கள் குதிரை வண்டியில்ருந்து இறங்க கீழ்தட்டு மக்களை குனிய வைத்து அவர்கள் முதுகை படிக்கட்டாகப்
பயன்படுத்தியது ,
ஒரு இனப்பெண்கள் மேலாடை அணிவதை மேல்தட்டு மக்கள் தடுத்தது
ஹிட்லர் ஒரு இனத்தையே அழிக்க
முயற்சித்தது ,
நெல்லை மணிமுத்தாறு நிகழ்வு ,
இந்திரா காந்தி மறைவையொட்டி மிகப்பெரிய இனப்படுகொலை ,
நவகாளி யாத்ரா , மியன்மாரில்
நடக்கும் கொடுமை ,மும்பை கலவரம்
கொத்தடிமை முறை , நாகசாகி
கிரோசிமா அணு குண்டு வீச்சு,
இலங்கை இனப்படுகொலை சிறைச்சாலை வன்முறை
மன நல விடுதி வன்முறை
என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
தொடர்ந்து தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சக் கழிவுகள் ஏற்படுத்தும்
மாசும் மனித உரிமை மீறல்தான்
இயற்கை சீற்றத்தில் சிக்கித்தவித்த மக்களுக்கு மீட்பு, நிவாரண
நடவடிக்கைகள் தாமதமாவது அரசே செய்யும் ஒரு மனித உரிமை மீறல்
தேவைக்குப் பணம் வங்கியில் எடுக்க முடியாமல் போனதும் அதே போல்தான்
உரிமைக்காகப் போராடிய அந்தகர்களை அவர்கள இருப்பிடத்திலிருந்து வெகு
தொலைவில் இறக்கி விட்டது மிகப் பெரிய கொடுமையான மீறல்
அறிவியல் வளர்ச்சி, நகரமயமாக்கல் , நகரங்களை விரிவு படுத்துதல் என்ற
போர்வையில் இயற்கை வளங்கள்பெரிய அளவில் கண்மூடித்தனமாக அழிக்கபடுகின்ற்றன
எல்லாவற்றையும் தடுக்க, குற்றம் செய்தவரை தண்டிக்க சட்டங்கள்
இருக்கின்றன பண பலம், பதவி பலம் இவற்றின் முன் சட்டங்களும் அமைப்புகளும் செயல்
இழந்து நிற்கின்றன.
இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போபால் நச்சு வாயு விபத்து .
பல்லாயிரக் கணக்கானோர் உயிழந்தனர்
பலலட்சம் பேர் கொடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர் . ஆண்டுகள் முப்பதுக்கு
மேல் கழிந்தும் யாரும் பெரிதாக தண்டிக்கப்படவில்லை .பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு
கூட சரியான முறையில் வழங்கப்படவில்லை
.
மனிதனை மனிதனாய்ப் பார்க்காமல் அவன் ஏழை இவன் பணக்காரன், அவன் சாதி,
மதம், இனம், மொழி ,நாடு நிறத்தால் வேறு பட்டவன் என்று பார்க்கும் மன நிலைதான்
இதற்கெல்லாம் அடிப்படையோ எனத் தோன்றுகிறது
நாகரீகம் வளர வளர இந்த வேறுபாடுகள் பெரிதாகிக்கொண்டே போகின்றன,. சமூக
ஊடகங்களில் அதிகம் வலம் வரும் வன்முறையைத் தூண்டும் நச்கப் பதிவுகள் இதற்கொரு
எடுத்துக்காட்டு
ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எல்லாம்
கரிக்குதவாத காய் தானா ?
மனித உரிமை மீறல், மிருக வதை பற்றிப்பார்த்தோம்..
இதை எல்லாம் தாண்டிய இன்னொரு நெஞ்சம் கொதிக்கும் கொடுமை பற்றி அண்மையில்
படித்தேன்.
ஆஸ்திரேலியா என்றால் நம் நினைவுக்கு வருவது கங்காரு, கிவி பறவை,
மிகப்பரந்து விரிந்த செழிப்பான நிலப்பரப்பு , மிகக்குறைவான மக்கள் அடர்த்தி ,
நல்ல வாழ்க்கைதரம் என்பதுதான்
அந்த செழிப்பான நாட்டில் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடைப்பட்ட இனமாக
வகைப்படுத்தியிருக்கிறார்கள்
அவர்களை யார் என்ன கொடுமைப்படுதினாலும் எப்படித் துன்புறுத்தினாலும்
ஏன் கொன்றாலும் கூட சட்டம் கை கட்டி நிற்கும்
அவர்கள்தான் மனிதரும் இல்லை விலங்கும் இல்லையே .
நீலச்சிலுவை, சிவப்புச்
சிலுவை இரண்டுமே கண்டு கொள்ளாது
புலம் பெயர்ந்து வரும் அகதிகள் கூட இப்போது இந்தப் பட்டியலில்
இணைக்கப் படுகிறார்களாம்
இன்னும் நிறைய எழுதலாம் .மனதில் சுமையை உண்டாக்கும் தலைப்பு . எனவே
போதும்
கனமான செய்திகளை நான் பொதுவாக பதிவு செய்வதில்லை .
ஆஸ்திரேலிய
பழங்குடியினரைப் பற்றிப் படித்ததை பகிர்ந்து கொள்ள ஒரு உந்துதல் ஏற்பட அதன்
விளைவுதான் சிவப்பு நீலம்
இ(க)டைச்செருகல்
தொடரியில் சில மனிதஉரிமை மீறல்கள்
மூன்றடுக்குப் படுக்கை வசதி ஐயமின்றி ஒரு உரிமை மீறல்தான் பணம்
கொடுத்து பதிவு செய்தும் நம் விருப்பப்படி படுக்க உட்கார முடியாது
அடுத்து புற நகர் தொடருந்துகளில் கழிவறை வசதி இல்லாதது .நீண்ட
தொலைவுப் பயணங்கள் சில மணி நேரங்களைத தாண்டி விடுகிறது
மூன்றாவதாக ஒரு சிறிய மீறல் RAC .குறிப்பாக நீண்ட தூர இரவுப்பயணங்களில் மூத்த குடி மக்களுக்கு மிகவும்
சிரமம்
அதே போல் உடல் ஊனமுற்றோர். முதியோர் நடை மேடையில் வெகு தொலைவு நடந்து
படி ஏறி இறங்க வேண்டியிருக்கிறது . எக்மூர் போன்ற மிகப்பெரிய நிலையங்களில் மட்டுமே
பெயரளவில் சில வசதிகள் இருக்கின்றன
இறைவன் நாடினால்
மீண்டும்
அடுத்த
வாரம் சந்திப்போம்
வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com
அழகுதமிழில் ஒரு சுவையான தொலைக்காட்சி தொடர் பார்த்தது போன்ற உணர்வு எப்படி தங்களால் வரலாற்று நிகழ்வுகள் யாவையும் தொடர்ந்து திரட்டமுடிகிறது உங்கள் சிறந்த பணிதொடற வாழ்த்துக்கள் வணக்கம் katam
ReplyDelete