7ஏ காவலர் குடியிருப்பு
இ ரு ப
து ஆண்டுகள்
நான்கு தலைமுறைகள்
----------என்னோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்த குடும்பம் இப்போது இடம்
பெயர்ந்து வேறு வீட்டுக்குப் போகிறது .அவர்களுக்கு எப்படியோ எனக்கு மனதில் ஒரு
கலக்கம் இனம்புரியாத உணர்வுகள்
.
ஆம் வீடுதான் பேசுகிறேன் . சுவருக்கும் காது உண்டு என்பார்கள் .அப்புறம்
ஏன் வீடு பேசக்கூடாது . இப்போது விட்டால் பின் என் மனதை வெளிப்படுத்த எண்ணங்களை
கொட்ட வேறு வாய்ப்பு கிடைக்காது
அப்பா அம்மா இரண்டு குழந்தைகள் – ஆண் ஓன்று பெண் ஓன்று என்று அழகான
சிறிய குடும்பம் இடையிடையே வந்து போகும் அப்பாவின் அப்பா, அம்மா பிறகு அப்பாவின்
உடன்பிறப்புக்கள் உற்றார் உறவினர்கள் சுற்றம் நட்புகள்
காவல் ஆய்வாளராக வந்த அப்பா இப்போது உதவி ஆணையராக பணி ஓய்வு பெறுகிறார் இந்த கால இடைவெளியில் எத்தனை
நிகழ்வுகள் எத்தனை மாற்றங்கள் எத்தனை வளர்ச்சிகள் எத்தனை விழாக்கள், இடையிடையே சில
இழப்புகள்
இவை அனைத்திற்கும் மௌன சாட்சியாக இருந்த நான் இப்போது பிரிவின்
தாக்கத்தால் மௌனத்தை கலைக்கிறேன்
பள்ளி மாணவர்களாய் வந்த பிள்ளைகள் பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிப்படிப்பு முடித்து பணியிலும் சேர்ந்து விட்டர்கள்.
மிகச்சிறப்பாக திருமணமும் முடிந்தது .அப்பா அம்மா இப்போது தாத்தா
பாட்டி ஆகி விட்டார்கள்
சென்னைக்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் நான்தான்
புகலிடம். மணிக்கணக்கில், நாள் கணக்கில், வாரக்கணக்கில் மாதக்கணக்கில் ஏன் ஆண்டுக்கணக்கில்
தங்கியோரும் உண்டு
.
அப்படி ஒன்றும் நான் பெரிய அரண்மனை இல்லை .அடக்கமான வசதியான வீடு .
இரண்டு படுக்கை அறைகள், கூடம், உணவுக்கூடம், அடுப்படி, அதை ஒட்டி திறந்த பகுதி,
இரு குளியல், அறைகள் மேலே திறந்த வெளி மாடி. நல்ல கடல் காற்று, சன்னல் வழியே
தெரியும் துறைமுகம், .சென்னையில் கொசு இல்லாத , மின்தடை இல்லாத பகுதி ..கீழே
வண்டிகள் நிறுத்த வசதியான இடம் .
எத்தனையோ இட மாறுதல்கள் வந்தன ,இதை விட விசாலமான வசதியான காவலர்
குடியிருப்புகளில் இடம் கிடைத்தது .
பதவி உயர்வுக்கு ஏற்ற பெரிய வீடும் கிடைத்து எனக்கு கீழே உள்ள தரை தலத்தில் உள்ள வீடு
காலியானது .ஆனால் அந்தக்குடும்பம் என்னை விட்டுப்பிரியவே இல்லை அப்படி ஒரு
பாசப்பிணைப்பு .
மதுரைக்கு மாற்றல் வந்து ஒரு ஆண்டுக்குமேல் அங்கே தங்கியிருந்தும் கூட
என்னை விட்டுப் பிரியவிலை .அதற்காக அரசுக்கு ஒரு தொகை செலுத்த வேண்டி இருந்தது அதற்கெல்லாம்
மனம் தளரவே இல்லை .
சொந்த வீடு போல் எனக்காக நிறைய செலவு செய்திருக்கிறார் . தரையை
மாற்றினர் வண்ணம் பூசினார் மின்கம்பிகளை மாற்றினார்
குடும்பத் தலைவரின் உடன் பிறப்பு ஒரு நாள் மிகவும் உடல் நலம் குன்றிய
நிலையில் வந்து சேர்ந்தார் .என்ன செய்வதென்று தெரியாமல் பதைபதைத்து நின்ற
குடும்பத் தலைவருக்கு ஆறுதல் கூறி மருத்துவ மனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்
காவலர் ஒருவர்
இன்னொருவர் பல ஆண்டுகள் இங்கேயே தங்கி குடும்பத் தலைவர் சேர்த்து
விட்ட வேலைக்குப் போய் வந்தார். மதிய உணவும் பேருந்துக் கட்டணமும் கொடுத்து
அனுப்புவார்கள்
.
மூன்றாமவர் அவ்வப்போது வந்து தங்கி புத்தாக்கம் பெற்றுச் செல்வார்
தன்னால் முடிந்த அளவுக்கு தன் பதவியின் செல்வாக்கைப் பயன்படுத்தி
பலருக்கும் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் .படிப்புக்கும் மருத்துவத்துக்கும் உதவி செய்திருக்கிறார்
பலரின் காவல் துறை , சட்டம் சார்ந்த சிக்கல்களை எளிதாக விதிகளை
மீறாமல் தீர்த்து வைத்திருக்கிறார்
செய்யாத தப்புக்காக சில காலம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் .அப்போது
அவர் பட்ட வேதனையும் வருத்தமும் எனக்குத்தான் தெரியும் .யாரிடமும் அதிகமாகப்
பேசும் பழக்கமும் அவருக்கு கிடையாது . அவரது மைத்துனரிடம் ஓரளவுக்கு மனம் விட்டுப்
பேசுவார் . அவரும் இவரது நிலையைப் புரிந்து கொண்டு முடிந்த அளவுக்கு ஆறுதலும்
கருத்துகளும் சொல்வார் . பணி இடை நீக்கக் காலத்தில் அவருடைய தந்தை
புதுக்கோட்டையில் காலமானது இன்னொரு துயரம்
நல்ல உள்ளம் கொண்ட சில உயர்
அதிகாரிகள் இவர் தவறு ஏதும் செய்யவில்லை என்பதை அறிந்து உணர்ந்து மீண்டும்
பதவியில் அமர்த்தினார்கள்
உடல் நலம் குன்றியிருந்த தாய்க்கு பல காலம் மருத்துவ மனையிலும்
வீட்டிலும் வைத்து செலவு பற்றிக்
கவலைப்படாமல் வைத்தியம் பார்த்தார் . பழுத்த ஞானியான அந்தத் தாயைப் பார்க்க பலரும்
வருவார்கள். அவருக்கும் என் மேல் கொள்ளைப் பாசம், பிரியம். .வீடு
மாற்றும் பேச்சுக்கே இடம் கொடுக்க மாட்டார்
அவர் மறைவுக்கும் உற்றார்
உறவினர் , நட்புகள் தெரிந்தவர் என பெரும் கூட்டம்
தலைவரின் மாமனார், மாமியார் மறைந்ததும் இழப்புகள் . நடு இரவில்
மாமியார் மறைவு பற்றிய செய்தி வர மிகவும் துடித்துப்போய் விட்டார்
இந்த இழப்பகள் எல்லாம் மறக்கமுடியாதவை , தவிர்க்கவும் முடியாதவை
நான் கண்ட பல நல்ல, மகிழ்வான நிகழ்வுகள் இவற்றை
மறக்க உதவின்
மகள் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் சிறப்பான தேர்ச்சி
பெற்றார். பின்பு பொறியியல் படிப்பையும் நன்கு நிறைவு செய்து பெரிய நிறுவனத்தில்
பணியில் சேர்ந்து பல பதவி உயர்வுகளும் பெற்றார் .
அவர் திருமணம் கண்டோர் வியக்கும்படி மூன்று நாள் விருந்துடன் புளு
லகூன் என்ற கடற்கரை விடுதியில் நடந்த்து
மண விழாவுக்குப்பின் மணமகன்
மணமகள் இங்கேதான் வந்து இறங்கினார்கள் . அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை
பிறந்ததையும் பார்த்து மனம் பூரித்தேன் நான்
பையனும் பொறியியல் படிப்பை முடித்து மிகப்பெரிய நிறுவனத்தில் நல்ல
பணியில் அமர்ந்தார் . அவர் திருமணம் நெல்லையில் நடந்து பளு லகூனில் வரவேற்பு
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
இதற்கெல்லாம் மேல் முப்பது ஆண்டுகள் பணியை சிறப்பாக நிறைவேற்றி பல
பாராட்டுகளும் பதக்கங்களும் பெற்று நல்ல முறையில் பணிஓய்வு பெற்றதும் இதே
வீட்டில்தான்
செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருக்கும் தலைவர் அவருக்கு எல்லா
வகையிலும் ஈடு கொடுத்து துணை நின்று சலிக்காமல் உழைக்கும் மாண்பான தலைவி ,அமைதியான் மகன் மகள் அதேபோல் மருமக்கள்
என பல்கலைக்கழகம் போன்ற இனிமையான
குடும்பம்
இன்று அந்தகுடும்பம் என்னை விட்டு விலகிச் செல்கிறது .பொருட்கள்
ஒன்றன் பின் ஒன்றாய் எடுக்கப்படும்போது அங்கம் அங்கமாய் வலியை உணர்ந்தேன். கதவில்
உள்ள பெயர்ப்பலகை கழற்றப்படும்போது என் இதயமே வலித்தது
என்ன செய்வது காலச் சக்கரம் சுழலும்போது வரும் மாற்றங்களை யாரும்
தடுக்க முடியாது
கல் மண்ணெல்லாம் இறைவனை வணங்குமாம் அதை இறைவன் ஏற்றுக்கொள்வானாம்
கல்லாலும் மண்ணாலும் ஆன நானும் அந்தக் குடும்பம் எங்கிருந்தாலும்
எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்
இ(க)டைச்செருகல்
தனிஒருவர் பற்றிய பதிவு என்பதால் அவர்
ஒப்புதல் பெற அவருக்கு முதலில் அனுப்பி
வைத்தேன்
அவர் சொன்னது
எங்கள் 20 ஆண்டுகால வாழ்க்கை
ஓட்டத்தை அப்படியே அச்சு பிசகாமல் எழுதியுள்ள வல்லமை தங்களை தவிர நான் வேறு
யாரிடமும் கண்டதில்லை.
குடியிருந்த
வீட்டின் வாயிலாக, எளிமையான அருமையான சலிப்பு தட்டாத நடையில் ஒரு உண்மை நிகழ்வு
அதுவும் எங்கள் வாழ்வின் உண்மை நிகழ்வு. இதனை படித்தபோது என்மனம் மிகவும் கனத்தது.
எங்களை பற்றி
முற்றிலும் அறிந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றியினை பேரன்புடன் தெரிவித்து
கொள்கிறேன்.
இதனை
மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை
மூளைக்கு வேலை ::
சென்ற சில பகுதிகளில் கேட்ட ஒரு எளிய வினாவுக்கு யாரும் இதுவரை விடை சொல்லவில்லை
“திருக்குறளில் இடம்பெற்ற
பழங்கள் எவை?”
விடை
1330 பாடல்கள்
கொண்ட திருக்குறளில் வரும் ஒரே பழம்
நெருஞ்சிப் பழம்
குறள் 1120.
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப்பழம்
பொருள்
மென்மைக்கு எடுத்துக்காட்டாக
விளங்கும் அனிச்சம்பூவும், அன்னப்பறவையின் இளஞ்சிறகும் மாந்தரின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்
இந்த மாத வினா
ஆயிரம் பிறை கண்டவர் என எண்பது வயது அடைந்தவர்களைச் சொல்கிறோம்.
எப்படி ?
80x12=960
தானே
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W 27012019
sun