நிலவுப்பூக்கள்
“நிலவைப்பாடாத கவிஞரோ
புலவரோ கிடையாது” -கவிஞர் கண்ணதாசன்
தமிழறிஞர் முனைவர் பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் பொள்ளாச்சி ந க ம
கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றியபோது அவரது மாணவராய் இருக்கும் வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது
.
அவர் எழுதிய நிலவுப்பூ(க்கள்) என்ற நூலை அப்போது பொள்ளாச்சி நகராட்சி
ஆணையராகப் பணியாற்றிய எங்கள் அத்தாவிடம் வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டுப்போனார்
சிற்பி
அந்த நூலுக்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய முகவுரையில் மேல்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்
.
உண்மைதான் .பெண்களை நிலவோடு ஒப்பீட்டுப் பாடுவது சங்க இலக்கியம் முதல்
இன்று வரை ஒரு மரபாக கையாளப்படுகிறது
குளுமை ,பெண்மை , மென்மை இவற்றிற்கெல்லாம் நிலவை
எடுத்துக்காட்டுவார்கள்
இந்த மரபு தாண்டி சில புதுமைக் கருத்துக்கள் சொல்வோரும் உண்டு
“சிலை உடைக் கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர் “
என்பது சீதை பற்றிய கம்பன் வருணனை
திங்களும் ஒரு முறை தேய்ந்து வளருமாம் என்பது கம்பன் கவி -இந்த ஈற்றடி எங்கோ படித்த நினைவு .பாடல் எது
என்று தெரியவில்லை
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர் பேதையர் நட்பு “
என நல்ல
நட்பு, பேதையர் நட்பை நிலவைக்கொண்டு அடையாளம் காட்டுகிறான் வள்ளுவன்
மார்கழித்திங்கள் மதி நிறை நன்னாளில் தோழிகளை அழைக்கிறார் ஆண்டாள்
மங்கியதோர் நிலவில் அழகென்னும் தெய்வத்தைக்கண்ட பாரதி கண்ணம்மாவின்
சுட்டும் விழிச்சுடரில் சூரிய சந்திரனைக்
கண்டதோடு நிலவூறித் ததும்பும் விழிகள் என ஒரு புதிய சொல் அழகைப் படைக்கிறான்.
மேலும் விழிக்கு இன்பம் அளிக்கும் ஒரு தீவாகவும் நிலவைக்காண்கிறான்
சிந்து நதி மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் தோணிகள்
ஓட்டிய பாரதியை மறக்க முடியுமா?
நீள் வான் ஆடைக்குள் உடலை மறைத்து நிலவு போல் முகம் மட்டும் காட்டும்
காதலியைக் கற்பனை செய்கிறார் பாரதிதாசன்
தூய வெண்மதி சூடி ---உள்ளங்கவர் கள்வன்
என சிவபெருமானைப் பாடுகிறார் ஞானசம்பந்தர்
இலக்கியங்களுக்கும் புலவர்களுக்கும் சற்றும் சளைக்காமல்
திரைப்பாடல்களை படைக்கிறார்கள் நம் கவிஞர்கள்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்கிறது ஒரு பாட்டு
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டுகிறார் ஒரு கவிஞர்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று தொடங்கி சித்திரை நிலவே
அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு என்று சரணடைந்து விடுகிறான் காதலன்
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவை சாட்சியாக்குகிறார் கவிஞர்
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகாக காண்கிறான் காதலன்
நிலவும் மலரும் பாடுது என்று இசையும் சொல்வளமும் நிறைந்த ஒரு பாடல்
காட்சி கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் இனிய விருந்து
படைக்கிறது
அன்று வந்ததும் அதே நிலா என்று துவங்கி பார்த்துப் பார்த்து
சலித்ததில் பாதி தேய்ந்த வண்ண நிலா என்று தேய்பிறையை ஒரு கவிஞர் வர்ணிக்க ,என்னருமைக் காதலிக்கு நீ இளையவளா மூத்தவளா என்று காதலியின் வயதில்
ஐயம் கொள்கிறார் இன்னொரு கவிஞர்
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலாவை அலங்காரத் தாரகையோடு
ஊஞ்சல் ஆட விட்டு
ஆனந்தம் கொள்கிறார் ஒருவர் .
வாராயோ வெண்ணிலாவே என்று கதை கேட்க அழைத்து இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறமாமோ என்று தங்கள் குறைகளைக் கொட்டுகிறார்கள் கணவன் மனைவி
தீண்டாமைக் கொடுமையை சுட்டும் பாடல்
“நிலவைப் பார்த்து வானம்
சொன்னது என்னைத் தொடாதே “
பௌர்ணமி இரவில் பனி விழும் நிலவில்
என்று நம்மை கடற்கரை மணலுக்கு இழுத்துச் செல்கிறது ஒரு மென்மையான பாடல்
வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கவில்லையாம் .எனவே விண்ணைத் தாண்டி
வருவாயா என்றும் வானத்தை விட்டு வா என்றும் அழைக்கிறார்கள் கவிஞர்கள்
காதலி சிரித்தால் பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்குமாம் காதலனுக்கு
“ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம் “
என்று
“நிலவைத் துகில் என்று”
என்ற கலிங்கத்துப் பரணி வரிகளை கண் முன் நிறுத்தி காவியம் படைக்கிறார்
கவிஞர்
நிறைவாக ஒரு புதுமையான ஒப்பீடு
‘அமைதியாக வருகின்ற நிலவல்லவா
இரவெல்லாம் நிலைத்து நிற்கிறது
இடி என்னும் தண்டோரா போட்டுக்கொண்டு
வரும் மின்னல் நொடியில் மறைந்து விடுகிறது “
இது திரு இறையன்பு இ ஆ ப அவர்களின் கவிதை – இணையத்தில் கண்டது
மீண்டும்
அடுத்த மாதம் வேறொரு பதிவுடன்
Blog
Address
sherfuddinp.blogspot.com
B/F/த
20012019 sun
ReplyDeleteNatarajan Alaghappan அருமை. "சிற்பி"பாலசுப்பிரமணியம் அவர்கள் எனக்கும் தமிழ் பேராசிரியாக இருந்தார். அவரின் "நிலவுப் பூக்கள்" கவிதை நூலுக்கு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் முகவுரை வழங்கி இருந்தார்.
அவரின் "நெடுநல் வாடை" பயிற்றுவித்தது மறக்க இயலாதது.…See more
1
Delete or hide this
LikeShow More Reactions
· Reply · 2h · Edited
Natarajan Alaghappan
Natarajan Alaghappan replied
·
2 replies
1 hr
Manivannan NActive now
Manivannan N I read your writ ups with pleasure and enjoy them completely. Thank you so much for making us happy for sometime
1
Delete or hide this
LikeShow More Reactions
· Reply · 1h
Sherfuddin Peer Mohamed
Sherfuddin Peer Mohamed Thanks for your comments . It is my pleasure to know that my writings make people happy . Thank youVazhikarai Vadivelan அருமை, சார்... பாடலுக்கு மிகப் பொருத்தமான வர்ணனையும் கொடுத்துள்ளீர்கள்...குழந்தையைத் தாலாட்டவும் நிலவை அழைக்கும் தாய்மார்கள் உண்டு... வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா... வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது---- இப்படி எண்ணற்றவை உண்டு... வாழிய சார்..
2
Manage
LikeShow More Reactions · Reply · 1d
Sherfuddin Peer Mohamed replied · 1 Reply
Ramakrishnan Padmanabhan
Ramakrishnan Padmanabhan அருமையானன்நெஞ்சை வருடும் வரிகள் பதிவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி
4
Manage
LikeShow More Reactions · Reply · 1d
Sherfuddin Peer Mohamed replied · 3 Replies