12.பொய் சொல்லக்கூடாது பாப்பா
சின்னஞ்சிறு எறும்புதான் இந்தக்கதையின் நாயகன் .
ஒரு மரத்தடி நிழல் . அங்கு
வெட்டுக்கிளியின் சிறகு ஓன்று கிடந்தது ., அந்த வழியே ஊர்ந்து வந்த ஒரு
எறும்பு அதைத் தூக்க முயன்றது .ஆனால் முடியவில்லை .
எனவே அந்த எறும்பு தன் கூட்டுக்குப்போய் தன் தோழர்களை அழைக்க,,
ஒரு எறும்புப்படையே அந்த சிறகை நோக்கி வந்தது. அந்த நேரத்தில்
மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கிய ஒருவர் அந்தச் சிறகை தன் கைகளில் எடுத்துக்
கொண்டார்
வந்த எறும்புப்பட்டாளம் சிறகைக்காணாமல் ஏமாந்து திரும்பிப்போனது
.முதல் எறும்பு மட்டும் அங்கேயே நின்று அந்த சிறகைத் தேடியது . அப்போது கையில்
எடுத்த சிறகை கீழே போட்டார் அந்த மனிதர் .
உடனே எறும்பு மீண்டும் தன தோழர்களை அழைக்க கூட்டுக்குப் போனது
..முன்பை விட குறைந்த எண்ணிக்கையிலேயே எறும்புகள் வந்தன . மீண்டும் அந்த மனிதர்
சிறகைக் கையில் எடுக்க மீண்டும் ஏறும்புப்படை சிறகைக்காணாமல் திரும்பியது
முதல் எறும்பு சிறகைத்தேடி அங்கேயே நின்றது. இப்போது அந்த மனிதர்
மீண்டும் சிறகைக் கீழே போட மீண்டும் முதல் எறும்பு தன் முயற்சியில் தளராமல் தன்
தோழர்களை அழைத்து வந்தது .இப்போது வெகு
சில எறும்புகளே துணைக்கு வந்தன. மறுபடியும் அந்த மனிதர் சிறகைத் தூக்கிக் கொண்டார்
.
துணைக்கு வந்த எறும்புகள் மீண்டும் ஏமாந்தன
. ஆனால் இந்த முறை வெறுமனே திரும்பிப்போகவில்லை .முதல் எறும்பை சூழ்ந்து கொண்டு
தாக்க ஆரம்பித்தன. அது தங்களை ஒரு முறை அல்ல இருமுறை அல்ல மூன்று முறை பொய்சொல்லி
ஏமாற்றி விட்டதாக நினைத்து அதற்கு தண்டனையாக அதன் கால்களை உடைத்து வயிற்றைப்
பிளந்து உயிரைப் பறித்து விட்டன .
இந்தக்கதை நமக்கு சொல்லும் செய்திகள் பல
.
முதலாவது
விளையாட்டாக ஒரு மனிதர் செய்த செயல்
விபரீதமாகி ஒரு உயிரைப் பறித்து விட்டது
அடுத்து
எறும்புகள் மனிதனை விட அறிவில் குறைந்ததாக
நாம் எண்ணுகிறோம். அந்தச் சின்னஞ்சிறு உயிரினம்
பொய்யை ஒரு மிகப்பெரிய மன்னிக்கமுடியாத குற்றமாய்க் கருதி கடும் தண்டனை
விதிக்கிறது .பொய் சொன்ன எறும்பின் உயிர் பறிக்கப்படுகிறது
ஆனால் ஆறறிவு படைத்த நாம் ?
பொய்யை மிகக் கடுமையாக கண்டிக்கும் இறை மறை
வசனங்களும் நபிமொழிகளும் நிறைய உண்டு .
அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்
---------நிச்சயமாக பொய்மை அழிந்தே போகும்
(குரான் 17:81)
பொய் பற்றி நபிமொழிகள்
நெருப்பு விறகை தின்பதுபோல் பொய்
இறைநம்பிக்கையை அழித்து விடும்
யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வா
இதைத்தருகிறேன் என்று அழைத்து ஒன்றும் தராவிட்டால் அதுவும் பொய்தான்
உண்மையாக அல்லாமல் ஒருவரை விருந்துக்கு
அழைப்பதும் உண்மையாக அல்லாமல் அழைக்கப்பட்டவர் அதை மறுப்பதும் பொய்தான்
பிறரை மகிழ்விக்க (நகைச்சவை என்ற பெயரில்)
வேடிக்கையாகப் பொய்சொல்பவன் அழிந்து போகட்டும்
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
என்ற குறளுக்கிணங்க
போர்க்காலங்களிலும் , இரு குடும்பம் இடையே சமாதானம் செய்து வைக்கவும்
வேறு வழி எதுவும் இல்லை என்றால் அங்கு பொய் ஓரளவுக்கு அனுமதிக்கப்படுகிறது
(எறும்புக்கதையை கட்செவியில் அனுப்பிய தோழர் முனைவர் பேராசிரியர் பாஷா
அவர்களுக்கு நன்றி
இதயங்களின் மருத்துவர் என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்)
அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா என்ற
நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்...)
பொய் பேசுதலுக்கு இணையான மற்றொன்றானபுறம் பேசுதல் பற்றி பின்பு
பார்ப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W 06012019 sun
More
|
No comments:
Post a Comment