Tuesday, 22 January 2019

உடல் நலக் குறிப்புகள்2.சின்ன வெங்காயம்




Bottom of Form

2.சின்ன வெங்காயம்






சிலருக்கு சின்ன வெங்காயம் என்றால் விளங்காது குறிப்பாக பெருநகர வாசிகளுக்கு தெரிந்தது பல்லாரி என்று சொல்லப்படும் பெரிய வெங்காயம்தான்

சின்ன வெங்காயம் பற்றிப் பேச்சு வந்தால் இதைப்போய் யார் உரித்துக்கொண்டிருப்பது என்று சலிப்போடு சொல்வார்கள்

வலைதளத்தில் வெங்காயம் என்று சொடுக்கினால் பக்கம் பக்கமாக வரும்

இளமையாக இருக்க , முடி வளர , மூலம் போக,
சர்கரை, கொழுப்புஅழுத்தம் குறைய இதயம் காக்க ,
நரம்புத்தளர்ச்சி குணமாக குருதி சுத்தமாக
என்று வெங்காயத்தின் பலன்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்
எனவே அது பற்றி நான் விவரிக்கவில்லை . 

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு என் உறவினர் சொல்லி நான் கடைப்பிடித்து வரும் பழக்கம் பற்றி மட்டும் சொல்கிறேன்

“ மதிய உணவில் மோர் சோறு சாப்பிடும்போது அதில் ஒன்றிரண்டு சின்ன  வெங்காயத் துண்டுகளை பச்சையாக சேர்த்து சாப்பிடுங்கள் . சாப்பிட்டு முடிந்தபின் சிறிது ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்று விடுங்கள்
இதை தொடர்ந்து செய்தால் உடல் நலம் காக்கப்படும் “

இது பற்றி நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் யாராவது செய்கிரார்களா என்பது தெரியவில்லை .

அவர்கள் சொல்லும் சில சாக்குப்போக்குகள்

“ நான் ரைஸ் எல்லாம் சாப்பிடுவதே இல்லை”

“ மோர்சாதம்  சாப்பிடும் பழக்கம் இல்லை “

“ எங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் வாங்குவதில்லை “

“ நான் உணவு விடுதியில்தான் சாப்பிடுகிறேன் “

(சோறு என்ற சொல் இப்போது தவிர்க்கப்படுகிறது . ரைஸ். சாதம் , அரிசி சாதம் சாப்பாடு போன்ற சொற்களே பயன்பாட்டில் உள்ளன )

இதற்கெல்லாம் என்ன விடை சொலவது என்று எனக்குத் தெரியவில்லை . எனவே சொல்லுவதை நான் குறைத்துக்கொண்டேன்   

உணவு விடுதியில் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட்டால் பல சிக்கல்களைத் தவிர்கலாம்

மனம் இருந்தால் வழியுண்டு

சட்டைப்பையில் சில வெங்காயத் துண்டுகளை வைத்திருந்தால் தொற்றுநோய் தாக்காது என்பார்கள்

அடுத்த மாதம் அடுத்த பகுதியில் அடுத்த குறிப்பு

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W   23012019 Wed
  





No comments:

Post a Comment