கதை நேரம்13
ஒரு மலர் இரு கொடிகள்
“குழந்தையை இரு பகுதிகளாக அறுத்து ஆளுகொரு பகுதியை கொடுத்து விடுங்கள் “
நீதியரசர் வழங்கிய பதைக்க வைக்கும் பரபரப்புத் தீர்ப்பு.
பெரும்பாலும் எல்லோரும் இந்தக் கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள்..ஒரு திரைப்பாடலாகவும் வந்தது
வழக்கு இதுதான் இரு பெண்கள் ;
ஆளுக்கொரு குழந்தை .
இரண்டில் ஒரு குழந்தையை ஓநாய் தூக்கிச்சென்று விட்டடது
“ஓநாய் தூக்கிகொண்டு போனது உன் குழந்தையைத்தான்” என்று ஒரு பெண் சொல்ல
“இல்லை இல்லை உன் குழந்தயைத்தான் தூக்கிக் கொண்டு போனது இங்கிருப்பது என் குழந்தை “”
என்று இன்னொரு பெண் சொல்ல இப்படி வாய்ச்சண்டை நீண்டு கொண்டே போனது
நீதியரசர் ஒருவர் முன் இந்த வழக்கு வந்தது
“இருவரில் வயதில் மூத்த பெண்ணுக்குத்தான் உயிரோடு இருக்கும் குழந்தை உரியது “
என்பது அந்த மூத்த அரசரின் தீர்ப்பு
மீண்டும் அந்த வழக்கு மேல் முறையீட்டில் மற்றொரு நீதியரசரிடம் வந்தது
அந்த இளையவர் சொன்ன தீர்ப்புத்தான் துவக்கத்தில் நாம் பார்த்தது
இரு பெண்களில் இளையவர் இதைக்கேட்டு மனம் பதறி கண்களில் நீர் மல்க
“வேண்டாம் வேண்டாம் குழந்தையை ஒன்றும் செய்து விடாதீர்கள் . மற்றவரிடமே குழந்தாயைக் கொடுத்து விடுங்கள் .இது அவர் குழந்தைதான் “
என்று கதறினார்
கதறி அழுததுதான் உண்மையான தாயுள்ளம் இளைய பெண்தான் குழந்தைக்குத் தாய் என்பதை உணர்ந்து கொண்ட நீதியரசர் அவரிடமே குழந்தையை ஒப்படைத்தார் .
இந்தக்கதையில் இரண்டாம் தீர்ப்பு வழங்கியவருக்கு இறைவன் வழங்கியிருந்த சிறப்புக்கள்
காற்று இவர் வசப்பட்டு இவர் சொல்படி தென்றலாகவோ புயலாகவோ மாறும்
ஜின்களைக் கட்டுப்படுத்தும் வலிமை பெற்றிருந்தார்
( ஜின் என்பது இறைவனின் படைப்பில் மனிதர்கள் போல் சிந்திக்கும் ஆற்றல் உடைய ஒரு இனம் . இவை நம் கண்ணுக்குப்புலப்படாமல் மறைந்து வாழும். உருவத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் உடைய இவற்றில் நல்ல ஜின் கெட்ட ஜின் எல்லாம் உண்டு – இப்போதைக்கு இது போதும் ,பின்னால் எப்போதாவது இது பற்றி விரிவாகப் பார்ப்போம்)
பறவைகள் , மிருகங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இவருக்கு உண்டு
எதையும் பகுத்தறிந்து உண்மையை உணர்ந்து சரியான தீர்ப்பு வழங்கும் வல்லமையும் இவருக்கு இருந்தது
எல்லாவற்றிற்கும் மேல் இவர் விரும்பியது எல்லாவற்றையும் இறைவன் அருளிய சிறப்பும் இவருக்கு உண்டு
இவ்வளவு சிறப்புகள் பெற்ற இவர் யார் என்பது பலரும் அறிந்ததுதான் .
அவர் பற்றி அடுத்த(டுத்த) பகுதிகளில் பார்ப்போம்
வலைநூல் முகவரி
B/F/W(10022019sun
No comments:
Post a Comment