3. நலந்தானா
உடலும் உள்ளமும்
“ஒரே டென்ஷன்”
சிறு குழந்தை முதல் முதியவர் வரை பயன்படுத்தும் சொல்
டென்ஷன் , ஸ்ட்ரெஸ் , ஸ்ட்ரெயின் – எல்லாம்
மிக இயல்பான சொற்களாகி விட்டன .
உளவியல் இந்தச் சொற்களுக்கு தரும் விளக்கம் படித்தால் மனதில் அதுவே
ஒரு அழுத்தமாக வரும்
எனவே அதை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு இப்போதைக்கு மன அழுத்தம் மன இறுக்கத்தை
குறைப்பது எப்படி என்று பார்ப்போம்
இறைவணக்கம் , தியானம், ஆசனங்கள் , கடும் உடல்பயிற்சி விளையாட்டு
என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
ஆனால் தொடர்ந்து பயிற்சியில் உள்ளவர்கள் மட்டுமே இதெல்லாம்
செய்யமுடியும்
மற்றவர்கள் ?
எல்லோருக்கும் பொருந்தும் எளிய வழிகள் சில
முதலாவது குளிர்ந்த நீரில் கை கால் முகம் கழுவினாலே மன அழுத்தம் ஓரளவு
குறைந்து விடும் . அப்படியே சாய்ந்து தளர்வாக
அமர்ந்து இமைகளை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள் சிறிது
நேரத்தில் அழுத்தம் மறையாவிட்டாலும் பெருமளவு குறைந்து விடும்
அடுத்து மனம் விட்டுப் பேசுவது
வீட்டில் இருப்பவர்களிடம் கொட்டித் தீர்த்து விடுங்கள் .
ஆனால் தனிமைதான் மன அழுத்தம் உண்டாகவே காரணம் என்றால் இருக்கவே
இருக்கிறது தொலைபேசி . உங்களுக்கு நெருக்கமானவர்கள் நீங்கள் சொல்வதைக் காது
கொடுத்துக் கேட்பவர்கள் யாரிடமாவது தயக்கமின்றி பேசுங்கள்
கேட்பவர் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்பவராகவோ அறிவுரை சொல்பவராகவோ
இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . நீங்கள் சொல்வதை கவனமாகக் கேட்டாலே போதும்
.
எனக்கு அதிகம் பேசும் பழக்கம் இல்லை . இருந்தாலும் என்னிடம் நேரிலோ
தொலைபேசியிலோ பேசினால் மன அழுத்தம் குறைவதாக என் உடன் பணி செய்பவர்கள்,,உயர்
அதிகாரிகள் ,வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் சொன்னதுண்டு
இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. தேவைப்பட்டால் நீங்களும்
பேசிப்பார்க்கலாம் என்பதற்காகத்தான் சொல்கிறேன்
இசை மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும் .அது திரைப்பாடலாக ,
பக்திப்பாடலாக வீணை போன்ற கருவி
ஒலியாக மேற்கத்திய இசையாக
இருக்கலாம்
ஆனால் ஒளிக்காட்சி வேண்டாம், தொலைக்காட்சி மன இறுக்கத்தை,மேலும் கூட்டி உடலிலும் சோர்வை உண்டாக்கும்
தோட்டவேலை மிக எளிதில் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதற்காக மண்
வெட்டி, கடப்பாறை எல்லாம் தூக்கிக்கொண்டு கொண்டு போக வேண்டியதில்லை .தோட்டத்தில்
போய் நின்று செடிகொடி இலை பூக்களைப் பார்ப்பதே மனதுக்கு இதமாக இருக்கும் .
செடிகளுக்கு தண்ணீர் எளிதாக ஊற்றலாம்
அடுக்கத்தில் (அபார்ட்மெண்ட்) இருப்பவர்கள் தொட்டியில் செடி
வளர்க்கலாம்
மன அழுத்தம் குறைய ஒரு அழுத்தப் புள்ளி (acupressure point )
இருக்கிறது .அது பற்றியும் இன்னும் சில வழிகள் பற்றியும்
அடுத்த பகுதியில்,
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W 24022019 sun
No comments:
Post a Comment