Saturday, 16 February 2019

தமிழ் (மொழி) அறிவோம் 21 செங்கரும்பும் செந்தமிழும்





செங்கரும்பும் செந்தமிழும்


“இருந்தால் என்ன எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி பரிசை குறைத்துகொள்ளுங்களேன் “ தருமி சுரத்தே இல்லாமல்  கெஞ்சும்  குரலில் கேட்பது திருவிளையாடல் படத்தில் மறக்க முடியாத ஒலி ஒளிக் காட்சி

தருமிக்குப் பரிசு கிடைப்பதற்காக சிவ பெருமான் எழுதிக்கொடுத்த பாட்டு சிவபெருமான் வேடத்தில் சிவாஜி, நக்கீரன் வேடத்தில் நாகராசன் தருமி வேடத்தில் நாகேஷ் நடித்த அந்தக் காட்சிளுக்கு அடித்தளமாக அமைந்தது 
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
என்ற குறுந்தொகைப்பாடல்

இந்தப்பாடலில் வரும் கொங்கு என்ற சொல்லுக்கும் கொங்கு நாட்டுக்கும் தொடர்பு எதுவும் கிடையாது
இன்பச் சுவை நிறைந்த இந்த இனிய தமிழ் பாடலின் பொருள் பின்னால் பார்ப்போம்

ஈரோடு மாவட்டம் மங்களப்பட்டியில் கிளை மேலாளராக பொறுப்பேற்றேன்
எங்கும் பசுமை வயல்கள் நிறைந்த செழிப்பான ஊர் ..சுத்தமான காற்று. கடுமையாக உழைக்கும் விவசாயப் பெருமக்கள்

இப்படிப்பட்ட ஒரு ஊரில் முட்டுவலி முட்டுவலி  என்று   பரவலாக எங்கும் ஒலிப்பது காதில் விழ., சற்று வியப்பு திகைப்பு ஐயம் .அச்சம்
உடல் உழைப்புக்கு அஞ்சாத மக்கள் கொண்ட இந்த ஊரில் இவ்வளவு பேருக்கு மூட்டு வலியா இதற்கு என்ன காரணம் ? தண்ணீரினால்    வருவதோ ? நமக்கும் இந்த ஊரில் வசித்தால் வந்து விடுமோ என்ற எண்ண ஓட்டம்

கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களில் ஏற்கனவே வசித்திருந்தாலும் மக்களோடு மிக நெருக்கமான  ஒரு தொடர்பு ஏற்பட்டது நான்கு ஆண்டு மங்களப்பட்டி வாழ்க்கையில்தான்

அங்குதான் கொங்குநாட்டுத்( தமிழ்) சொற்கள் பலவற்றை நான் கற்றுக்கொன்டது

முட்டு வலி என்பது விவசாய இடுபொருள் செலவுகளைக்குறிக்கும் என்று போகப்போகத்தெரிந்து கொண்டேன்

கொங்கு நாட்டுச் செங்கரும்பு போல் கொங்கு நாட்டு வட்டார வழக்கும் ஒரு இனிமையான ஒலி

அதிலும் பிள்ளைகளை  வா கண்ணு, என்று அழைப்பதும் வயதில் இளையவர்களைக் கூட அவிய இவிய என்று அழைக்கும் பண்பும் எனக்கு மிகவும் பிடித்தது

என்னுடையது உன்னுடையது என்பது என்றது ஒன்றது என்று ஒலிக்கும்

நாத்தனாரை நங்கையா(ள்) என அழைப்பதும் பெண்களை அம்மிணி என்பதும்   அழகு

திருவள்ளுவரை ஐயன் என்பதும் கொங்கு மொழிதான் போலும் . பெரியவர்களை மரியாதையாக அழைக்க ஐயன்.
மற்றொரு மரியாதை விளி அவிய

திரட்டி என்பது பூவையர் பருவமடைந்த விழாவைக் குறிக்கும்
பருவமடைந்த பெண்கள் திருமணமாகி கருவுற்றிருக்கும்போது நடக்கும் விழா கட்டிச்சோத்து விருந்து

பொட்டாட்டம்  என்றால் அமைதியாக
பழமை என்றால் பேச்சு
ஓரியாட்டம் என்றால் சண்டை

பெஞ்சு மேலே ஏறு என்பது
பெஞ்சு மேலே எந்திரி
என்று வரும் 
 
முட்டை முட்டு ஆகும்
டிராக்டர் டிராட்டறு என ஒலிக்கும்

விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) கொட்டமுத்து என்றும்
நிலக்கடலை கள்ளக்கா என்றும் வரும்

இன்னும் சில கொங்கு தமிழ் சொற்கள்
தொண்டுபட்டி    ஆடுமாடு அடைக்கும்  இடம்
பொடக்காலி -   புழக்கடை
நோம்பி    திருவிழா
அட்டி      அட்டிகை (கழுத்து நகை)

ஊரில் பெரிய மனிதர்கள் ( அருமைக்காரர்- ? அருமனைக்காரர் ?) வசிக்கும் வீடு சிறியதாக இருந்தாலும் அரமனை என அழைக்கப்படும்
அருமைக்காரர்தான் மண விழாக்களை முன்னின்று நடத்துவார் .அவர் திருமணமாகி பிள்ளை பெற்றவராய் இருக்கவேண்டும்

பிறமொழி வேதங்கள் ஒலிக்காமல் தமிழிலேயே மணவினைகள் நடப்பது கொங்கு நாட்டின் தனிச்சிறப்பு

தமிழருக்கே உரிய உயரிய பண்பான விருந்தோம்பலை கொங்கு நாட்டில் மிகச் சிறப்பாக உணரலாம்

நிறைவாக முதலில் சொன்ன கொங்கு தேர் வாழ்க்கை என்ற பாடல் பற்றிப்பார்ப்போம்

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே 
இதுதான் பாடல்

மேலோட்டமான கருத்து இதுதான்
மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே
நீ அறிந்த பூக்களில் என்னுடன் பல பிறவிகளில் நட்புடன் பழகும் மயில் போல அழகான அழகிய பற்களை உடைய என் தலைவியின் கூந்தலை விட மணமுடையது ஏதேனும் உள்ளதோ
எனக்குப்பிடித்த்தைக் கூற வேண்டாம் நீ கற்றரிந்தததைக்கூறு
என தலைவன் வண்டைப்பார்த்து கேட்பதாய் பாடல் அமைந்துள்ளது

(பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்பது போல் பொருள் வருவதால் பொருள்குற்றம் உள்ள பாடல் என்று கூறி பரிசு வழங்குவதை நக்கீரர் தடை செய்கிறார்)

இதற்கு இன்னும் சற்று  ஆழகான ஆழமான கருத்து ஒன்று உள்ளது
தலைவன் தலைவி  முதல் கூடல் மிக இயல்பாக நிகழ்ந்தது
ஒரு இடைவெளிக்குப்பின் மீண்டும் கூடும் சூழல் உருவாகியது
தலைவி நாணத்தால் தலைவனின் முகம் பார்க்க கூசி விலகி நிற்கிறாள்
அவள் வெட்கம் போக்கி அவள் கூந்தலைத் தொட ஒரு காரணம் கற்பிப்பது போல் பாடல் அமைந்துள்ளது

தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலம் புனைந்து உரைக்கிறான் தலைவன் 

மீண்டும் அடுத்த மாதம்  வேறொரு பதிவுடன்

Blog Address
sherfuddinp.blogspot.com
B/F/த 17022019  sun















No comments:

Post a Comment