Sunday, 3 February 2019

வண்ணச் சிதறல் 40 படித்ததில் இடித்தது



படித்ததில் இடித்தது

CoP writes to Chief Secretary on job scam


செய்தித்தாள் செய்தி விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக படித்து கவனித்தது ஒரு காலம்
போகப்போக எல்லாவற்றிலும் உண்மை மிகக்குறைந்த அளவில் இருப்பது புரிந்தது. புரியப்புரிய அவற்றின் மேல் இருந்த ஈடுபாடு குறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாங்கிக்கொண்டிருந்த ஆங்கில செய்தித்தாளை நிறுத்தி விட்டு எளிதில் படித்து முடிக்கும் தமிழ் நாளிதழ் வாங்கினேன்
இது மனதில் ஒரு குறையாகவே இருந்து வர மீண்டும் ஆங்கில நாளிதழுக்கு புத்தாண்டில் மாறினேன்
இந்த ஒரு மாத காலத்தில் படித்த செய்திகள் பலவற்றைப் பார்க்கும்போது படிக்காமலேயே இருந்து விடலாம் என்று தோன்றுகிறது
என்னில தாக்கத்தை உண்டாக்கிய சிலவற்றை என் கருத்துக்களுடன் ,பகிர்ந்து கொள்கிறேன்  
 
நெகிழி (பிளாஸ்டிக்)  தடை செய்யப்பட்டு விட்டது . எல்லோரும் பழைய படி கடைக்குப்போகும்போது துணிப்பை, பாத்திரங்கள் கொண்டு போகிறோம் . நமக்கெல்லாம் சட்டத்தை மதிக்கத்தான் தெரியும் . பை கொண்டு போகாவிட்டால் கடைக்காரர் கொடுக்கும் பையை அவர் சொல்லும் விலைக்கு வாங்க வேண்டும்

இப்போது நாளிதழில் (இந்த மாதம்  22 ஆம் நாள்) வந்த செய்தியைப் பார்ப்போம்

“ நெகிழிக் கழிவுகள்  இறக்குமதி ஒரு ஆண்டில் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது


2016-2017 ஆம் ஆண்டில்  12000 மெட்ரிக் டன்னாக இருந்த நெகிழிக் கழிவுகள் இறக்குமதி
2017- 2018 ல்  48000 மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது

அதற்கு அடுத்த காலாண்டில் ( மூன்று மாதங்களில்) இறக்குமதி 25000 மெட்ரிக் டன்

சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியே, தடையை மீறி இந்த இறக்குமதி என்கிறது செய்தி

ஏமாற்றுவது யார் ஏமாறுவது யார் என்று புரியவில்லை

அடுத்த செய்தி(

28 சனவரி) ஒரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு .அதுவும் நாட்டின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு  எனவே நான் கருத்து ஏதும் சொல்லவில்லை

ஒரு திருமணமான பெண் அண்டை வீட்டில் இருக்கும்   இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருக்கிறார்
.
குடும்பத்தலைவன் துணைவியையும்  மூத்த மகளையும் கடுமையான சொல்லால் திட்டியிருக்கிறார் ( prostitutes, வேசி)

அண்டைவீட்டுக்காரரான துணைவியின் நண்பர் துணைவியின் சார்பில் பேச வர ஏற்பட்ட கைகலப்பில் துணைவியின் நண்பர் துணைவரை அறைந்ததோடு  ( slapped).  துணைவியின் உதவியுடன் கழுத்தை நெறிக்கிறார் .(Strangled)

உடலை எரித்து நண்பர் ஒருவரின் மகிழுந்தில் அகற்றிவிடுகிரார்கள் . நாற்பது நாள் கழித்து.உடல் கண்டெடுக்கப்படுகிறது

விசாரணை நீதி மன்றமும் உயர்நீதிமன்றம் துணைவியையும் துணைவியின் நண்பரையும் கொலையாளிகளாக அடையாளம் காண்கின்றன (found guilty of murder )

மேல் முறையீட்டில் நீதி அரசர்கள் வழங்கிய தீர்ப்பு :
“வேசி என்று தன்னையும் தன் மகளையும் அழைத்த துணைவரை கொல்வது
Murder  ஆகாது
இந்திய சமூகப் பெண்களுக்கு  தங்களை வேசி என்று அழைப்பது பிடிக்காது
இப்படி ஒரு களங்கம் சுமத்தபட்டதற்கு கொடிய வேகத்தோடு எதிர்வினை புரிந்தது murder அல்ல culpable homicide .
எனவே culpable homicide .என்ற குற்றத்துக்காக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது “
இது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பதால் எனக்குக் கருத்துக்கூற தகுதியோ உரிமையோ கிடயாது

இருந்தாலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வலைத்தளத்தில் murder
culpable homicide இவற்றிகிடையே உள்ள வேறுபாட்டை தேடிப்பார்த்தேன்
இது சட்டத்தில் கரை கண்டவர்களுக்கே புரியாத ஒன்று என்கிறது வலைத்தளம் (The lack of distinction  perplexes even the learned law professionals)

பிறகு எனக்கு எப்படிப் புரியும் ?

புரிகிறதோ இல்லையோ மனதில் ஏற்படும் எண்ண ஓட்டங்களைத் தவிர்க்க முடியவில்லை

அடுத்த செய்தி வேடிக்கை, வேதனை (சனவரி 30)
Job racket in SECRETARIAT  shocks HC
Man posing as a Deputy Secretary issues appointment orders
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு அலுவலக அறையில் இருந்து ஒருவர் அரசின் துணைச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டு பணியமர்ப்பு ஆணைகள் வழங்குகிறார். பலரை ஏமாற்றி நாலு கோடி வரை பணம் வாங்கியிருக்கிறார்

ஏமாற்றியவர் ஏற்கனவே ஒரு குற்றவியல் வழக்கில் பிணையில் வந்தவர்
இது போல் எத்தனையோ மோசடி பற்றி நான் படித்திருக்கிறேன் ,ஆனால் அரசின் மூளையாக விளங்கும் தலைமைச்செயலகத்தில் என்பது  நெஞ்சு பொறுக்க முடியாத உண்மை

இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 3) வந்த செய்தி:
31 01 2017 அன்று பணி ஓய்வுபெற்ற( துணைச்செயலாளர்) இ ஆ ப அதிகாரியின் நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையர்  மாநிலத் தலைமைச்செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்
குறிப்பாக செயலக அறையில் இருந்து நடந்த வேலை மோசடி பற்றி ஓய்வுபெற்ற அதிகாரிக்குத் தெரியுமா என்பது பற்றி விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்

இன்றைய  செய்தியின்படி ஏமந்தோர் நூற்றுக்குமேல் .தொகை ஐந்தரைக் கோடி

மேலே சொன்ன மூன்றும் மிக மிகக் கனமான செய்திகள் .

இனி சில கனம் குறைந்த செய்திகளைப் பார்போம்

தொடரியில் பயணச்சீட்டு பரிசோதகராக நடித்து பலரிடம் பணம் வசூல் செய்தவர் கைது (சனவரி 31)
அடையாளச் சீட்டு இல்லாத பயணிகளிடம் பணம் வசூல் செய்திருக்கிறார் . அதோடு நிற்காமல் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணித்த மாற்றுத்திறனாளி அல்லாதவர்களிடமும் பணம் வசூல் செய்திருக்கிறார்
.
நிறைவாக

Who’s the daddy ? Surprise in Swiss paternity test  (02  Feb )
சுவிஸ் நாட்டு விலங்கியல் பூங்கா ஒன்றில் மஜா என்ற பெண்குரங்கு பத்மா என்ற குட்டியை ஈன்றது .

மரபணு சோதனையில் பத்மாவின் தந்தை அதன் தாயுடன் ஒரே கூண்டில் வசித்த புடி அல்ல ;அடுத்த கூண்டில் இருந்த வெண்டெல் என்ற குரங்கு என்பது தெரிய வருகிறது  

வேலியோ சுவரோ காதலுக்குத் தடை விதிக்க முடியாது போலும் . இதில் விலங்குகளும் மனித இனம் போல்தான் . என்பது புரிகிறது

இக)டைச்செருகல்
இரண்டு செய்திகள் இந்தப்பதிவை நான் எழுதும்போது. நினைவில் வந்தன.
ஓன்று
முன்பு ஒரு பதிவில் தொலைக்காட்சித்தொடர்களின் தாக்கம் பற்றி “ குற்றம் செய்தவரை விட்டு விட்டு குற்றத்தைக்கண்டு பிடித்தவரை பெரிய குற்றவாளியாகப் பார்க்கும் ஒரு மன நிலை அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தது  
இரண்டு
குரான் விளக்க உரையில்
“ சட்டத்தின் சொற்களும் பொருளும் மிகத்தெளிவாக எந்த வித ஐயத்துக்கும் இடம் இல்லாமல் இருக்க வேண்டும் “ என்று படித்தது.

மூளைக்கு வேலை
சென்ற பதிவு (7ஏ காவலர் குடியிருப்பு) பற்றி பலரும் கருத்துக்கள், பாராட்டுகள் தெரிவித்திருந்தார்கள் . அனைவருக்கும் நன்றி
ஆனால் மூளைக்கு வேலை என்று ஓன்று இருந்ததை யாருமே கண்டு கொள்ளவில்லை . ஏன் என்று தெரியவில்லை .சென்ற பதிவில் போட்ட அதே வினா இப்போதும்
ஆயிரம் பிறை கண்டவர் என எண்பது வயது அடைந்தவர்களைச் சொல்கிறோம். எப்படி ?
80x12=960 தானே

இறைவன் நாடினால்
                           மீண்டும்
                                     சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B/F/W 03022019 sun






 

No comments:

Post a Comment