Monday, 13 April 2020

எண்ணமே சுமைகளாய்


சின்னச் சிதறல்



எண்ணமே  சுமைகளாய்


 “உங்கள் எண்ணங்கள் அப்படியே சொற்களாக உங்கள் பேச்சில் வருகின்றன அதனால் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் வலிமையாக இருக்கிறது  
வங்கியில் என்னுடன் பணியாற்றிய எனது நெருங்கிய நண்பர் திரு ராசாராம் என்னிடம் இவ்வாறு  சொல்வார்
இது உண்மையா , அவர் சொன்னது புகழ்ச்சியா இல்லையா என்பது இன்று வரை எனக்கு விளங்கவில்லை
ஆனால் ஓன்று உண்மை. எண்ணங்களை அப்படியே கணினியில் சொற்களாய் எழுதுவது என் வழக்கம் .
இந்த ஒரு வாரமாக புதிய பதிவு எதுவும் நான் போடவில்லை
எண்ணங்கள் வராமலில்லை
மாறாக அளவுக்கு மீறி எண்ணங்கள் ஊற்றெடுத்து அலை அலையாக நெஞ்சில் மோதுகின்றன. அவற்றை அப்படியே எழுதினால் வரம்பு மீறிய தடித்த சொற்கள் வந்து விடுமோ என்ற தயக்கம் எழுத்தை தடை செய்கிறது
எதைப்பற்றி எழுதுவது ! முகநூல் பகைகள்  பற்றியா கூட்டுத் தொழுகை பற்றியா வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை பற்றியா, ரமலான் நோன்பு பற்றியா, ,ரமலான் இரவு சிறப்புத் தொழுகை பற்றியா ,தலை நகர் பற்றியா எல்லாவற்றிற்கும் மேலாக
  இப்போது பரவலாகப் பேசப்படும் நோன்புக்கஞ்சி பற்றியா என்ற குழப்பம் வேறு
இப்படி பல்வேறு எண்ண ஓட்டங்கள்  
இதை எல்லாம் சரி செய்து  சொற்களை தணிக்கை செய்து எழுத வேண்டிய ஒரு புதிய சூழ்நிலை
சரி துவங்கி விட்டேன் முதலில் எனக்கு மிகவும் பிடித்த நோன்புக்கஞ்சி பற்றி எழுதுகிறேன்
“எந்த ஊருக்குப் போனாலும் யாரையாவது பிடித்து நோன்புக்கஞ்சி வீட்டுக்கு வர ஏற்பாடு செய்து விடுவீர்கள் “: என்று என் துணைவி என்னைக் கிண்டல் செய்வதுண்டு  .
அந்த அளவுக்கு நோன்புக்கஞ்சி எனக்குப் பிடிக்கும் .சிற்றுண்டிகள் , பழச்சாறு காபி /தேநீர் என்று பல இருந்தாலும் கஞ்சி குடித்த நிறைவு வராது
ஆனால் அதற்காக அது பற்றி இவ்வளவு கவலை, இத்தனை பதிவுகள் தேவையா?
எனக்குத் தெரிந்து தமிழ்நாடு (பாண்டி) தவிர மற்ற எங்கும்( அண்டை மாநிலங்களான கேரளா , கர்நாடகா உட்பட) கஞ்சி காய்ச்சும் வழக்கம் கிடையாது .
குட்டாவில் நான் பணியாற்றிய ஒன்னரை ஆண்டுகளில் இரண்டு முறை நோன்பு வந்தது . அங்கிருக்கும் மலையாளிகள் பள்ளியில் கஞ்சி பற்றி பலமுறை பலரிடம் பேசிப்பார்த்தேன் . ஆனால் ஒன்றும் நடக்கவில்லை
அதற்காக நோன்பு வைக்காமல் இல்லை
பல நாடுகளில் பள்ளிப் பருவ குழந்தை முதல் பழுத்த முதியவர் வரை அதிகாலை சகருக்கும் அந்தியில் நோன்பு திறக்கவும் எந்த உணவும் கிடைக்காமல் பல நாட்கள் நோன்பு நோற்றது பற்றி நெஞ்சம் பதறப் படித்தோம்
அடுத்து ரமலான் மாத இரவு சிறப்புத் தொழுகையான தராவீஹ் தொழுகை
சுவதியில் இந்த ஆண்டு இந்தத் தொழுகை கிடையாது என்று இப்போதைக்கு அறிவ்த்ததாய் செய்திகள் வருகின்றன
எல்லாமே அவன் வகுத்த வழியில்தான் நடக்கிறது. அவன் நாடினால் நிலைமை   ரமலான் மாதத்திற்குள் முற்றிலுமாக மாறி நோன்புக்கஞ்சி , தராவிஹ் தொழுகை , புனித லைலத்துல் கதிர் இரவு  பெருநாள் கூட்டுத் தொழுகை எல்லாம் கிடைக்கலாம்
அதுவரை பொறுமை காத்து. முதலில் கட்டாயக்கடமையான  நோன்பை நல்ல விதமாகக நிறைவேற்றி வைக்கவும் , அடுத்த கட்டயக்கடமையான சக்காத் என்னும் தருமம் முழுமையாக நிறைவேறவும் இறைவனிடம் முழு மனதோடு இறைஞ்சுவோம்
கண் துயிலாமல் , உறக்கமில்லாமல்  வானையும் பூமியையும் அவற்றின் இடையில் உள்ளவற்றையும்  காத்து நிற்கும் ஏக இறைவன் நம்மைக் கைவிடமாட்டன்
இன்னும்சில சுமைகள் அடுத்த பதிவில் இறைவன் நாடினால்

sherfuddinp.blogspot.com

bw1f14042020tue







No comments:

Post a Comment