Tuesday, 28 April 2020

Geocarpy


இரவும்பகலும் மாறி மாறி வருவது , சிறு துளி கருவாகி குழந்தையாக உருவாகுவது ,மேகம் மழை பொழிவது போன்ற எண்ணற்ற இயற்கை நிகழ்வுகள் இறைவனின் மாட்சிமைக்கு சான்று பகர்கின்றன
சுவாசம், இதயத்துடிப்பு , செரிமானம் போன்ற பல உயிர் இயக்கங்கள் நம்மை அறியாமல் தொடரந்து   நடைபெறகின்றன; . இவற்றில் ஒரு சிறிய தடை வரும்போதுதான் நமக்கு இது இறையற்புதம் எனும் நினைவு வருகிறது  
இதுபோல  இயற்கையின் எண்ணற்ற  அற்புதங்களில் ஒன்றுதான் geocarpy
அது என்ன geocarpy
தெரிந்தவர்கள் சொல்லலாம்
மீண்டும் நாளை அடுத்த பதிவில் இறைவன் நாடினால் சிந்திப்போம்
27042020
sherfuddinp.blogspot.com


இறைவனின் மாட்சிமைக்கு சான்று பகரும் எண்ணற்ற இயற்கை அற்புதங்களில் ஒன்றான geocarpy என்றால் என்ன என்று நேற்று(27042020) கேட்டிருந்தேன்

கடலை மிட்டாய், வறுகடலை , அவித்த கடலை, உறித்த கடலை  , கடலை எண்ணெய் என்று பல உருவங்களில் பார்த்திருந்தாலும் கடலைச் செடியை அதிகமாக யாரும் பார்த்திருக்க முடியாது
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலிருந்து வந்ததால் மணிலாக்கொட்டைகாலப்போக்கில்மல்லாட்டை ஆனது தரைக்கடியில் இருப்பதால் வேர்க்கடலை இதுபோக கடலைக்காய் , கப்பலண்டி(மலையாளம்) என்ற பல பேர்களில் வலம் வரும்  groundnut செடி  இறைவனின் அதியற்புதப் படைப்புகளில் ஓன்று
வேர்க்கடலை என்று பேர் இருந்தாலும் இது வேரில் முளைப்பதில்லை. மற்ற செடிகளைப்போல் தரைக்கு மேல் உள்ள தண்டில் அழகிய சிறு மலர்கள் மஞ்சள் நிறத்தில் பூக்கும்
.பூக்கள் கருவுற்றவுடன் கருப்பையின் கீழிருக்கும் சிறிய காம்பு நீளமான மெல்லிய நூலிழை  போல் வளர்ந்து மண்ணுக்குள் கருப்பையை நுழைத்து அங்கே கருப்பை முழுக்கடலையாக வளரும். இயற்கையின் இந்த அரிய நிகழ்வு geocarpy எனப்படும்   . ஒரு கடலையில் ஓன்று முதல் நான்கு பருப்புகள் இருக்கும்
இந்த அற்புதப்படைபான வேர்க்கடலைக்கு பல சிறப்பான மருத்துவ குணங்கள் இருப்பதாய்ச் சொல்லபடுகிறது
ஒரு சில
நோய் எதிர்ப்பு சக்தி, இளமை காத்தல், வாழ்நாள் நீடிப்பு , இதயக்காப்பு  
ஹீமோபோலியா நோய் உள்ளவர்களுக்கு குருதி எளிதில் உறையாது
அதானால் சிறு காயம் பட்டாலும் குருதி அதிக அளவில் வெளியேறும் .வேர்க்கடலைப்பருப்பின் மேலிருக்கும் சிவப்பு நிற தோல் குருதி எளிதில் உறைய உதவும் என்று சொல்லப்படுகிறது  .அதற்காக வெறும் தோலை சாப்பிடாமல்கடலைப்பருப்பை தோலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்
அளவோடு சாப்பீட்டு சிறிது வெல்லம் சாப்பிட்டால் மிகவும் நல்லது
வெல்லம் கடலையினால் உண்டாகும் பித்தத்தை சரி செய்யும்


விடை சொன்ன
மைத்துனர் வழ..அஜ்மீர அலி திரு ரவிராஜ் முனைவர் பாஷா திரு விஸ்வநாதன் அனைவருக்கும் பாராட்டுகள வாழ்த்துகள்
Geocarpy  சரியான தமிழ் சொல் கிடைக்கவில்லை . தெரிந்தால் சொல்லுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்

28042020 tue
sherfuddinp.blogspot.com



No comments:

Post a Comment