Thursday, 2 April 2020

ஞானியும் நல்ல பாம்பும் மிகச்சின்னச் சிதறல்



மிகச்சின்னச் சிதறல்

ஞானியும் நல்ல பாம்பும்


காட்டுப்பாதையில் ஒரு ஞானி நடந்து கொண்டிருந்தார் .வழியில் ஒரு நல்ல பாம்பு அவரை கொத்த வந்தது .
ஞானி பொறுமையாக அந்த பாம்புக்கு நல்ல அறவுரைகள் கூறினார் . நல்ல பாம்பு மிக நல்ல பாம்பாகி விட்டது . இனிமேல் யாரையும் கொத்த மாட்டேன் என்று வாக்குறுதி அளித்தது
மாலையில் அதே வழியில் ஞானி திரும்பி வந்தார்
பாம்பு அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது
உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நான் யாரையும் கொத்தாமல் இருந்தேன் ஆனால் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் என்னைத்.தடியாலும் கல்லாலும் அடித்துக் காயப்படுத்தி இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று சொன்னது பாம்பு
அதற்கு ஞானி சொன்னார்
அட அறிவு கெட்ட நல்ல பாம்பே
உன்னைக் கொத்த வேண்டாம் என்றுதானே சொன்னேன்
சீறக்கூடாது  என்று சொல்லவில்லையே 


sherfuddinp.blogspot.com
BFW 31032020




No comments:

Post a Comment