வாதிடும் பெண்
25042020 யார் அந்தப்பெண்ணின் தொடர்ச்சி
அந்தப்பெண்ணின்
பெயர் கௌலா பின்ட் தலாபா, கணவர் பெயர் ஔஸ் பின் சமிட் அன்சாரி ( Khaulah bint-Thalabah of the
Khazraj tribe, and her husband, Aus bin Samit Ansari,)
சரி
அவரின் சிறப்பு என்ன ?
அவரின்
கோரிக்கை, அவரது புகார், ஏழாம் வானத்தை எட்டி இறைவன் உடனே ஒரு மறை மொழியை இறக்கி வைத்து
அந்தப்பெண்ணின் குறையை உடனடியாக தீர்த்து
வைக்கிறான்
பண்டைய
அரபு நாட்டில் ஒரு ஜிகர்(zihar) என்னும் மணமுறிவு முறை வழக்கத்தில்
இருந்தது . அதன்படி ஒருவர் தன் துணைவியைப் பார்த்து “ நீ என் தாயின் முதுகைப்போல்
இருக்கிறாய் “ என்று சொல்லிவிட்டால் அவர்கள் மண வாழ்கை முறிந்து விடும்
நம் கதை நாயகி கௌலாவின் கணவன் இது போல்
சொல்லி மணமுறிவு செய்து விடுகிறார்
அந்தப்பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து
முறையிடுகிறார் “என் கணவன் என்னை விலக்கி விட்டால் நானும் என் குழந்தைகளும்
பிழைக்க வழியின்றி வாழ்வு நாசமாகிவிடும் நீங்கள் எனக்கு எதாவது வழி சொல்ல வேண்டும்
“ என்று வாதிடுகிறார்
இந்த வாதம் நடந்து கொண்டிருக்கும்போதே
இறைவன் வஹி மூலம கீழ்க்கண்ட மறை மொழிகளை அனுப்பி வைக்கிறான்
நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும்
முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் -
மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக
அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (58:1)
No comments:
Post a Comment