Monday, 27 November 2023

Thursday, 23 November 2023

சொந்த ஊர் 6 உங்கள் பார்வையில் சகோ ஷர்மதா 241123 வெள்ளி





 சொந்த ஊர் 6

உங்கள் பார்வையில்
சகோ ஷர்மதா
241123 வெள்ளி
என் பார்வையில் சொந்த ஊரை கடந்த 5 பகுதிகளில் சிந்தித்தோம்
ஒரு மாறுதலாக அவ்வப்போது உங்கள் கருத்துக்கள், எண்ணங்கள் , உணர்வுகள் ---அந்த வரிசையில் முதலில்
சகோ ஷரமதா
நான் அறிந்த திருப்பத்தூர். ஷர்மதா
(291023)
திருப்பத்தூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சிறு வயதுப்பிள்ளையாய் இருக்கும்போது பள்ளிக்குச் செல்வது வீட்டருகில் உள்ள அங்காளம்மன் கோயிலில் இருந்த பரந்த வெற்றிடத்தில்தெருவில் உள்ள பிள்ளைகளுடன் விளையாடுவது இப்படித்தான் கழிந்தது.
உயர்நிலைப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளி என்று வந்தவுடன் பள்ளியைத்தவிர வேறு எங்கும் அவ்வளவாக
சுற்றுவதற்கு வாய்ப்புகிடைக்கவில்லை.
வருடந்தோறும் வரும் திருவிழாக்களை ஆசையுடன் சுற்றியதுண்டு.
பூத்திருவிழாவில் பூமாரிஅம்மன் கோவிலில் பூச்சொறிதலை பார்த்துவிட்டு ராட்டினம் சுற்றுவது வகைவகையான மாம்பழங்களை ஒவ்வொன்றிலும் சுவைப்பதற்காக வாங்கிவருவது இப்படியாக திருவிழாவை கண்டு கழிப்போம்.
இதையடுத்து தேர்த்திருவிழாவும் முன்றாவது நாளாக சீதேவியில் தெப்பம் இழுக்கும் விழா நடைபெறும்.கண்கொள்ளாகாட்சியாக இருக்கும் தெப்பம் நீரில் அசைந்து சொல்லும்போது.
புரவி எடுபபின்போதுசிறிய குதிரைகள் வாங்கி அதைசில நாட்கள் வரை உடையாமல் பாதுகாத்தால் மட்டற்ற
மகிச்சியடையும் அந்த
நாட்கள்.பொங்கலின் போது தவறாமல் சிறு வீடு கட்டுவோம். இவைசிறுவயதில் ஆனந்தமான இனிய நினைவுகள்.
பெருநாள் தொழுகை தொழுவதற்காக அத்தாவுடன் கைப்பிடித்து சென்றதும்
போகும் வழிமுழுவதும் அல்லாஹு அக்பர் அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் ஓதிக்கொண்டே செல்வதும், தொழுகையைமுடித்துத் திரும்பும்போது அச்சுக்கட்டில் உள்ள பெரிய பெரியத்தா வீட்டிற்குச் செல்வோம்.அங்கு சின்னா அண்ணனை பார்த்து நோன்புக்காசு , புதுத்துணிகள் கொடுத்துவிட்டு வருவோம்.
சாமான்குளத்துப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது இடி விழுந்த அதிர்வில் பள்ளியில் சுற்றி உள்ள சிலைகள் சிதைவடைந்தன. என்னை பீர் அண்ணன்
சைக்கிளில் வந்து கூட்டிச்சென்றது.
தங்கமணி தியேட்டர்
போகும் வழியில் சரிபு சச்சா வீடு இருந்ததால்
தியேட்டருக்குப் படம் பார்க்க போபவர்களை வேடிக்கை பார்த்தபடி இருக்கலாம்.
மஞ்சுளா தியேட்டர் தூரமாக இருந்ததால் அங்கு சென்று படம் பார்க்க யாரும் அழைத்துச்செல்லமாட்டார்கள்.
சீதேவி வற்றி தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருந்தபொழுது ஈனா பெரியத்தா அவர்கள் பம்ப் செட்டில்
குளிப்பதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நேரம் குறித்து அனுமதித்திருந்தார்கள்.
அப்போதுதான் மருத நாடி,கல்வெட்டு மேட்டுத்
தண்ணீர் என்று அண்ணன்கள் ஒவ்வொருவரும் குடத்தை சைக்கிளில் கட்டிக்கொண்டு நிரப்பி வருவார்கள்.
பிரான்மலை அப்துல்லா சாஹிபு அவர்களுக்கு நேர்ந்து கொண்டு நேர்ச்சை நிறைவேற்ற போகும் அனுபவம் மிக நன்றாக இருக்கும்.காலையில் உண்பதற்கு வடித்த சோற்றை அண்டாவில் போட்டு தண்ணீர் ஊற்றி தொட்டுக்கொள்வதற்கு
மொச்சை கருவாடு கத்தரிக்காய் போட்டு கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள தயார் செய்து போவார்கள் .அது மிகுந்த சுவையாக இருக்கும்.
திருப்பத்தூரில் உறவுகளை பட்டப்பெயர்வைப்பதில் மிகவும் திறமையானவர்கள்.
எங்கள் அம்மாவை அவர்கள் அய்யா முன்சீப்ஆக இருந்தார்கள் என்பதால் முன்சுவீட்டு ஜெமிலா என்றுதான் கூறுவார்கள். பல ஜெமிலாக்கள் இருப்பதால் இப்படி அடையாளமாக வைத்து அழைப்பார்கள்.இதே போல் பாத்து என்ற பெயர் கொண்டவர்களுக்கும்
மற்றும் முன்னோர்கள் பெயரைச்சேர்த்து இன்னார் பேத்தி,பேரன்
என்றும் சொல்வார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திர்க்கும் ஒரு பெயர் இருக்கும் .இந்த வழக்கம் திருப்பத்தூருக்கே உள்ள."!*.... தனித்துவமானது.
திருப்பத்தூர் மக்களின் இறைவழிபாடு,கல்வி,பண்பாடு,புத்திக்கூர்மை,தைரியம்,பாசம்,நேசம் எல்லாம் அதிகமாக இருப்பதால் இன்றும் ஊர் செல்லும் போது,எல்லோரையும் பார்க்கும் பொழுது சொந்த மண்ணின்
‌மணம் இதயத்தை நிரப்பிச் செல்லும்.
என்னுரை
இது போல் சொந்தஊரில் பிறந்து வளர்ந்தோர் , வாழ்ந்தோர் வாழ்வோர் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்தால் தொடர் சுவை கூடி சிறப்பாகும்
“சொந்த ஊர் “
இந்தப் பதிவோடு முற்றுப் பெறவில்லை
இடை நிறுத்தம் செய்யப்படுகிறது
வழக்கமான என்பதிவுகள் எல்லாவற்றிற்கும் ஒரு முக்கால் புள்ளி
முகநூல் நினைவு பகிர்வு, சிறு சிறு பதிவுகள் தொடரலாம்
இறைவன் நாடும்போது மீண்டும் சிந்திப்போம்
நன்றி
24112023 வெள்ளி
சர்புதீன் பீ

Wednesday, 22 November 2023

இனிய இஸ்லாம் எ த இ 34 , திருமறை 16 விளக்கம் சூராஹ் 96 அல் அலக் சஜ்தா 23 112023 வியாழன்




 


இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
34 , திருமறை 16 விளக்கம்
சூராஹ் 96 அல் அலக் சஜ்தா
23 112023 வியாழன்
சஜ்தா பற்றி சகோ நெய்வேலிராஜாவுக்கும் எனக்கும் இடையே ஒரு கருத்துப் பரிமாற்றம்
[12:18, 11/9/2023] NeyveliRaja Bahadhur Khan: இந்த ஸுராவில் எனக்கு ஒரு சந்தேகம்..( எனக்கு ஒரு உம்(ண்)மை தெரிஞ்சாகனும் )
ஸஜ்தா ஆயத்து வந்தவுடன் உடனே ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது தெரிந்ததுதான்.
எனவே நம் தொழுகையில் இந்த ஸுரா ஓதினால் உடனேயே ஸஜ்தா செய்து விடுகிறோம். எழுந்த உடன் இன்னொரு ஸுரா ஓதி விட்டுத்தான் ருக்உ செல்ல வேண்டுமா..அல்லது ஓதாமலேயே ருக்உ சென்று தொழுகையைத் தொடரலாமா ?
[12:33, 11/9/2023] SHERFUDDIN P: கொஞ்சம் தலை சுற்றுவது போல் தெரிகிறது
பொறுமையாக படித்து விடை சொல்ல முயற்சிக்கிறேன் இறைவன் நாடினால்
[14:27, 11/9/2023] SHERFUDDIN P: என் சிற்றறிவுக்கு எட்டியது
வேறு சூரா ஓத வேண்டியதில்லை
எதற்கும் பேரறிவாளிகளிடம் கேட்க வேண்டும்
அவர்கள் மாறுபாடாக சொன்னால் எனக்கும் சொல்லவும்
[09:14, 11/10/2023] NeyveliRaja Bahadhur Khan: என் குறுஞ் சிற்றறிவுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது‌.
மதுரையில் மதரஸாவில் படிக்கும் என் பேரனிடம் கேட்டேன் . அவன் இன்னும் ஒரு சிறு ஸுராவையோ அல்லது சில ஆயத்துகளையோ ஓதி விட்டுத்தான் ருக்உ செல்ல வேண்டும் என்கிறான். இருந்தாலும் தங்கள் கருத்துப்படி இன்னும் சில பேரறிவாளர்களைக் கலந்து கொள்வதே உசிதமாகப் படுகிறது ! தங்கள் முகநூலில் கேட்டால் நம்மோடு மற்றவர்களும் பயன் பெறலாம்!
[09:18, 11/10/2023] SHERFUDDIN P: முகநூல் பயனில்லை
இறைவன் நாடினால் கட்செவி ---whatdapp பில் விரைவில் கேட்கிறேன்[15:07, 11/11/2023] SHERFUDDIN P
: என் பேரனும் மதுரையார் கருத்தை வழி மொழிகிறார்
ஒரு சிறிய மாறுதல்
அடுத்து ஏதோ ஒரு சூரா ஓதக்கூடாது
அடுத்த சூரா அல்கத்ர் தான் ஓத வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லுகிறார்
எல்லாப் புகழும் இறைவனுக்கே
[18:43, 11/11/2023] NeyveliRaja Bahadhur Khan: அல்ஹம்துலில்லாஹ் ! விவரமான பேரன்மார் !!
சகோ ஹசன் அலி தொலை பேசியில்
“இந்த சூராவில் மட்டும் சஜ்தா வசனம் ஓதியதும் சஜ்தா வுக்குப் போகாமல் குனித்து ருக்கு செய்து நிமிர்ந்து பிறகு இருப்பில் அமர்ந்த்ஹு அத்தஹியாது , இப்ராகிம் சலவாத் போன்றவற்றை வழக்கம்போல் ஓதி வழக்கமான இரண்டு சஜ்தா செய்து விட்டு சலாம் கொடுக்கு முன் சஜ்தா சூராவுக்கு உரிய சிறப்பு (ஒரு) சஜ்தா செய்து பி சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்
ஆக நான்கு வேறு பட்ட கருத்துக்கள் .
எது சரி ?
இதுவே இன்றைய வினாவாகிறது
இது பற்றிய உங்கள் கருத்துக்களை முடிந்தால் சான்றுகளுடன் எழுதவும்
[10:14, 11/16/2023] Thallath: இரண்டு ஆலிம்களிடம் இது பற்றி கேட்டபோது,
சஜ்தா விலிருந்து நிலைக்கு வந்தவுடன் தொடர்ந்து அடுத்த சூராவை ஓத வேண்டுமென ஒருவரும்,
தொடர்ந்து ஓதுவது நல்லது,
ஓதாமலேயே ருக்குவுக்கு சென்றாலும் தவறில்லை என ஒருவரும் கூறினார்கள்.
தொழுகையை நிறைவேற்ற அல்ஹம்து சூராவுக்கு பின் குறைந்த பட்சமாக 3 ஆயத்துகள் போதுமானது என்ற வகையில் இரண்டாவது ஆலிம் சொன்னது ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது.
[10:17, 11/16/2023] Thallath: ஆனால் தொழும் பொழுது சஜ்தா ஆயத் ஓதினால் உடனே சஜ்தா செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
[11:33, 11/16/2023] SHERFUDDIN P: இந்த கருத்து பரிமாற்றத்தில்
இதுவரை பங்கெடுத்தவர்கள் எல்லோரும் (என்னைத் தவிர)
நல்ல மார்க்க அறிவுள்ளவர்கள்
ஓதாமலே ருக்குவுக்குப போகலாம் என்பது பெரும்பாலோர் கருத்து
எளிதான அதை ஏற்றுக் கொள்ளலாம்
அல்கம்து சூராவுக்குப்பின் மூன்று ஆயத்து
இதிலும் பல வேறுபாடுகள்
மூன்று ஒன்றாகி
அல்ஹம்து சூரா மட்டுமே போதும் என்பது வரை வந்திருக்கிறது
[11:54, 11/16/2023] Thallath: அல்ஹம்து சூரா மட்டுமே போதும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. துணை சூரா ஓத(மறந்து)தவறிவிட்டால் சஜ்தா சாஹு செய்தால் தொழுகை கூடிவிடும் என்பது ஆலிம்களின் கருத்து.
[12:00, 11/16/2023] SHERFUDDIN P: இதெல்லாம் பார்க்கும் போது நாம் வழக்கமான முறையில் தொழுதாலே போதும் என்று நினைக்கிறேன்
பேசப் பேச குழப்பம் தான் அதிகமாகிறது
[12:01, 11/16/2023] Thallath: உண்மை.
[12:34, 11/17/2023] Ayub Sharmatha: சூரா அல் அலக்கில் கடைசி வசனம் ஸஜ்தா வசனமாக உள்ளதால் தொழுகையில் இந்த வசனம் ஓதியவுடன்
ஜூஜூதிற்குச்சென்று
ஜஜ்தா செய்தபின் எழுந்து ருக்கூஃ செய்து தொழுகையைத் தொடர்ந்து தொழவேண்டும் என்பது என்னுடைய
கருத்து.
[12:36, 11/17/2023] SHERFUDDIN P: ருக்கூவுக்கு முன்பு ஏதாவது ஓத வேண்டுமா இல்லையா என்பதுதான் வினா
[12:41, 11/17/2023] Ayub Sharmatha: ருக்கூவுககுப் போவதற்கு முன்பு எதுவும் ஓத வேண்டியதில்லை.அப்படி ஓதுவதுதொழுகை முறையில் மாற்றம் உண்டாக்குவது போல்
தோன்றுகிறது.
[13:41, 11/17/2023] Ayub Sharmatha: குரான் ஓதிக்கொண்டிருக்கும்போது ஸஜ்தா வசனம்வந்தால் குராரை மூடிவைத்து விட்டு ஸஜ்தா செய்தபின் குரானை தொடந்து ஓதுவோம்.அதேபோல்தானே தொழுகையிலும் கடைபிடிக்க வேண்டும்.
எனக்குத்தோன்றும் கருத்தை நான் தெரிவிக்கிறேன்.
நிறைவுரை ?
இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு அறிவு சால் தேடல் (Academic Interest) தான்
நடை முறையில் தனியாகத் தொழுகும்போது இந்த சூரவெல்லாம் பெரும்பாலும் யாரும் ஓதுவதில்லை
பள்ளிவாசலில் கூட ரம்ஜான் மாத இரவு சிறப்புத் தொழுகையில் மட்டும்தான் இதை ஓதுவார்கள்
அப்போது அது இமாம் பொறுப்பாகி விடுகிறது
எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கும் மேலே இருக்கும் ஏக இறைவன் நம் தவறுகளை எல்லாம் மன்னித்து விடுவான்
எனவே அவரவர் செய்வது அவரவருக்கு சரி
நல்ல கருத்துக்களை பகிரந்த அனைவருக்கும் நன்றி
“இனிய இஸ்லாம் எளிய தமிழில் “
இந்தப் பதிவோடு முற்றுப் பெறவில்லை
இடை நிறுத்தம் செய்யப்படுகிறது
இறைவன் நாடும்போது மீண்டும் சிந்திப்போம்
நன்றி
09 ஜமா அத்துல் அவ்வல் (5) 1445
23 112023 வியாழன்
சர்புதீன் பீ

Tuesday, 21 November 2023

சொந்த ஊர் 4 சீதேவிக் குளம் 161123 புதன்

 




சொந்த ஊர் 4

சீதேவிக் குளம்
161123 புதன்
பெயரில் என்ன இருக்கிறது (What is in a name) என்றான் உலகமகா கவி
ஆனால் பெயரில் இவ்வளவு இருக்கிறதா என்பது சீதேவியின்
பெயர் பற்றிய பதிவுகளைப் பார்க்கும்போது தோன்றியது
“சீதளி தான் சரி “ சகோ நஸ் ரீன்
: சகோ பாடி பீர்
சிரிதளிபொய்கை
சால்மல்பொய்கைஎன்றபெயரும்உண்டு
:சகோ தல்லத்
கோவிலின் பெயர்
திருத்தளி நாதர் ஆலயம்
ஸ்ரீ=திரு
எனவே ஸ்ரீதளி என்பதே சரியான வார்த்தையாக இருக்கும .
ஸ்ரீதளி வடகரை என்பதே அஞ்சல் முகவரி
ஸ்ரீ தான் கோவிலுக்கு மட்டும் திரு ஆனது.
ஸ்ரீ தான் முந்தியது.
: இணையத்தில் தேடி நான் கண்டது
“சீதேவி கண்டினாற்‌ திருத்‌ $தளியென்றுரைப்பர்‌ அந்தத்‌ தீர்த்தம்‌ தன்னை
மயூரகிரி புராணம்‌
: திருப்புத்தூர்‌ அருகிலுள்ள குன்றக்‌ குடியைப்‌ பற்றிய தலபுராணமிது.
எல்லோருக்கும் எளிதில் புரியும் சீதேவி என்ற பேச்சுவழக்குச் சொல்லையே தொட்ர்ந்து எழுதுகிறேன்
பிழையோ சரியோ பொருள் நன்றாகத்தான் இருக்கிறது
சீதேவி, பெயர்ச்சொல். இலக்குமி. சீதேவியார் பிறந்த செய்ய திருப்பாற்கடலில் (தனிப்பா.). மகளிர் தலையணி • செங்கழுநீர் ...
சரி பெயரைத் தாண்டி படித்துறைக்குப் போவோம்
பல விடைகள்
சில மிக விளக்கமாக
: சகோ பாடி பீர்
என்னப்பாதம்பி
பள்ளிவாசல் படித்துறை கடைவீதி கோட்டைசாயபுபடத்தறைஅதற்க்குஅடுத்தற்குபெயர்ஞாபகம்இல்லை
வைரவன் கோயில் படித்துறை அரசமரத்தை அல்லது மேளகரார்படித்துறை மண்டபபடித்துறை
அதற்குஅடுத்தபடித்துறைபெயர்தெரியவில்லை வலகஆரதஎரஉபடஇத்தஉறஐ பிள்ளையார்படித்துறை
அம்பலகஆரவஈட்டஉப்படித்துறைசெட்டியதெருபடித்துறை
ஐந்துஆண்கள்படித்துறை‌ஏழுபெண்கள்படித்துறை பெயர் தெரியாத மூன்றில் ஒன்று கீர்த்தி படித்துறை மற்றது தொகுப்புக்கு தந்தாக ஓய்வில் படித்துறை இதில்ஏதும்ஞாபகம்பிசகிஇருக்களாம்தமபி [18:56, 10/25/2023] கோவில் கீழரதவீதிஎன்றுபடிக்கவும்
அம்பலாரவீட்டுப்படிதுறை: எழுதும்பொழுதுஎழுத்துக்கள்தவறாபதிவாகிவிடுகின்றன
:
சகோ தல்லத்
12 படித்துறைகள்
ஆண்களுக்கு 7
பெண்களுக்கு 5ஸ்ரீதளி குளத்தில் நான்கு பக்கங்கள். ஒரு பக்கத்திற்கு இரண்டு பெண்கள் படித்துறை ஒரு ஆண்கள் படித்துறை. ஆண்கள் படுத்துறை நடுவில் இருக்கும்.
மேற்குப் பக்கத்தில் இருக்கும் மூன்று படித்தறைகளில் ஒன்று கடைவீதிக்கு அருகில் அமைந்திருப்பதால், பெண்கள் வர முடியாது என்பதற்காக அதையும் ஆண்கள் படித்துறையாக மாற்றி ஏழு ஐந்து என்று பிரித்து வைத்திருந்தார்கள்.
:
சகோ அலியார் 12 படித்துறை 7 பெண்கள், 5 ஆண்கள்(
சகோ தல்லத்
சகோ பீர் பீயன்னாமன்னிக்கவும் மொத்தம் -8 என்பதாக நினைவு.
சகோ சிராஜுதீன்
: சீதளி குளம் நான்கு பக்கம் உடைய சதுர வடிவ அமைப்பிலானது, ஒரு பக்கத்திற்கு மூன்று படித்துறை விதம் மொத்தம் 12 படித்துறைகள் உள்ளன.
இவற்றில் நான்கு மூலையிலும் இருபுறம் இருக்கக்கூடிய 8 படித்துறைகள் பெண்கள் குளிப்பதற்கு உரியது, மீதி ஆண்களுக்கானது.
குளத்தின் கீழ்த்திசையில் உள்ள மூன்று படித்துறைகளில் நடுவில் உள்ளது மண்டப படித்துறை, இது மற்ற படித்துறைகளை விட அளவில் பெரியது. விழா காலங்களில் சாமி தரிசனம் அங்குள்ள மண்டபத்தில் நடைபெறும். மேலும் கோவில் யானையை குளிப்பாட்டுவது, தெப்பம் விடுவது இறந்தோருக்கு சாங்கியம் செய்வது முதலான செயல்கள் அனைத்தும் இந்த படித்துறையில் தான் நடைபெறும்.
மண்டப படித்துறைக்கு நேர் எதிர் திசையில் உள்ள ஆண்கள் குளிக்கும் படித்துறை பள்ளிவாசல் படித்துறை என்று அழைக்கப்படுகிறது.
சீதளி குளம் என்பது அதன் கரைகளை ஒட்டி குடியிருந்த எங்களைப் போன்றோருக்கு அன்றாட வாழ்க்கையில் இணைந்த ஒன்றாக இருந்தது
. வீட்டு புழக்கத்திற்கான தண்ணீர் எடுப்பது, குளிப்பது மற்றும் நீச்சல் அடிப்பது அதில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று திரும்பும் சாகசம் முதலானவை இனிமையான அனுபவங்கள், அவை திரும்பக் கிடைக்க பெறாத இனிமையானவை.
என் கருத்து
சொல்லத் தேவை இல்லாத அளவுக்கு மற்றவர்கள் சொல்லி விட்டார்கள்
.
அனைவருக்கும் நன்றி
சென்ற பகுதியில் பாத்திமா ஆர் சீ பள்ளி எஸ் எம் மருத்துவ மனை வளாகத்துக்குள் இருப்பதாய் சொல்லியிருந்தது தவறு
அது பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கிறது
தவறைச் சுட்டிகாட்டிய சகோ அஜ்மலுக்கும் அதை உறுதிப்படுத்திய சகோ தல்லத்துக்கும் நன்றி
நிறைவாக நம்மூராருக்கு ஒரு வினா
“ஆலவடி “ (சகோ சிர்ஜுதீனுக்கு நன்றி )
என்றால் என்ன
இறைவன் நாடினல்
அடுத்த வாரம் விடையுடன் சொந்த ஊரில்
சீதேவிக் குளத்தின் வடகரையில்
சிந்திப்போம்
15112023 புதன்
சர்புதீன் பீ

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் 33 , திருமறை 16 சூராஹ் 96 அல் அலக் 16112023 வியாழன்

 



இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
33 , திருமறை 16


சூராஹ் 96 அல் அலக்
16112023 வியாழன்
குரான் சூராக்கள் பற்றி எளிய விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்
அந்த வரிசையில் இன்றும் எளிய , வினா ஓன்று
உதிரக் கட்டி என்ற பொருளுடைய சொல்லைத் தலைப்பாகக் கொண்ட சுராஹ் எது ?
விடை சூராஹ் 96 அல் அலக் (Al Alq) மக்கா சூராஹ்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை
ஷிரீன் பாருக்
சிராஜுதீன்
ஷர்மதா
நெய்வேலி ராஜா
மெஹராஜ் &
கதிப மாமுனா லப்பை
சூரவைப் பார்க்குமுன் அதன் சிறப்புகள் சில
முதன் முதலில் அருளப்பட்ட இந்த சூரா கல்வியின் –படிப்பு எழுத்தின் மேன்மையை வலியுருத்துகிறது
மேலும் சஜ்தா சூராக்கள் வரிசையை நிறைவு செய்வதோடு
19வசனங்கள் கொண்ட சூர்ரவின் 19 ஆவது வசனம் சஜ்தா வசனமாக் அமைந்துள்ளது
மற்ற எல்லா சஜ்தா சூராக்களிலும் சூராவின் இடையில் சஜ்தா வசனமாக வரும்
இது ஒரு சிறிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது
சூராவுவுக்குப்பின் அது பற்றிப் பர்ர்ப்போம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
இரத்தக்கட்டி سورة العلق Al-Alaqٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ﴿96:1﴾
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ﴿96:2﴾
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
.
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ﴿96:3﴾
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
-
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ﴿96:4﴾
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ﴿96:5﴾
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ﴿96:6﴾
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ﴿96:7﴾
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ﴿96:8﴾
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ﴿96:9﴾
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
عَبْدًا إِذَا صَلَّىٰٓ﴿96:10﴾
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ﴿96:11﴾
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ﴿96:12﴾
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ﴿96:13﴾
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ﴿96:14﴾
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ﴿96:15﴾
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ﴿96:16﴾
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெ
ற்றி ரோமத்தை,
فَلْيَدْعُ نَادِيَهُۥ﴿96:17﴾
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ﴿96:18﴾
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩﴿96:19﴾
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை)
Bismillaahir Rahmaanir Raheem
1. Iqra bismi rab bikal lazee khalaq
2. Khalaqal insaana min 'alaq
3. Iqra wa rab bukal akram
4. Al lazee 'allama bil qalam
5. 'Al lamal insaana ma lam y'alam
6. Kallaa innal insaana layatghaa
7. Ar-ra aahus taghnaa
8. Innna ilaa rabbikar ruj'aa
9. Ara-aital lazee yanhaa
10. 'Abdan iza sallaa
11. Ara-aita in kana 'alal hudaa
12. Au amara bit taqwaa
13. Ara-aita in kaz zaba wa ta walla
14. Alam y'alam bi-an nal lahaa yaraa
15. Kalla la illam yantahi la nasfa'am bin nasiyah
16. Nasiyatin kazi batin khaatiah
17. Fal yad'u naadiyah
18. Sanad 'uz zabaaniyah
19. Kalla; la tuti'hu wasjud waqtarib (make sajda)
சஜ்தா பற்றி சகோ நெய்வேலிராஜாவுக்கும் எனக்கும் இடையே ஒரு கருத்துப் பரிமாற்றம்
[12:18, 11/9/2023] NeyveliRaja Bahadhur Khan: இந்த ஸுராவில் எனக்கு ஒரு சந்தேகம்..( எனக்கு ஒரு உம்(ண்)மை தெரிஞ்சாகனும் )
ஸஜ்தா ஆயத்து வந்தவுடன் உடனே ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது தெரிந்ததுதான்.
எனவே நம் தொழுகையில் இந்த ஸுரா ஓதினால் உடனேயே ஸஜ்தா செய்து விடுகிறோம். எழுந்த உடன் இன்னொரு ஸுரா ஓதி விட்டுத்தான் ருக்உ செல்ல வேண்டுமா..அல்லது ஓதாமலேயே ருக்உ சென்று தொழுகையைத் தொடரலாமா ?
[12:33, 11/9/2023] SHERFUDDIN P: கொஞ்சம் தலை சுற்றுவது போல் தெரிகிறது
பொறுமையாக படித்து விடை சொல்ல முயற்சிக்கிறேன் இறைவன் நாடினால்
[14:27, 11/9/2023] SHERFUDDIN P: என் சிற்றறிவுக்கு எட்டியது
வேறு சூரா ஓத வேண்டியதில்லை
எதற்கும் பேரறிவாளிகளிடம் கேட்க வேண்டும்
அவர்கள் மாறுபாடாக சொன்னால் எனக்கும் சொல்லவும்
[09:14, 11/10/2023] NeyveliRaja Bahadhur Khan: என் குறுஞ் சிற்றறிவுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது‌.
மதுரையில் மதரஸாவில் படிக்கும் என் பேரனிடம் கேட்டேன் . அவன் இன்னும் ஒரு சிறு ஸுராவையோ அல்லது சில ஆயத்துகளையோ ஓதி விட்டுத்தான் ருக்உ செல்ல வேண்டும் என்கிறான். இருந்தாலும் தங்கள் கருத்துப்படி இன்னும் சில பேரறிவாளர்களைக் கலந்து கொள்வதே உசிதமாகப் படுகிறது ! தங்கள் முகநூலில் கேட்டால் நம்மோடு மற்றவர்களும் பயன் பெறலாம்!
[09:18, 11/10/2023] SHERFUDDIN P: முகநூல் பயனில்லை
இறைவன் நாடினால் கட்செவி ---whatdapp பில் விரைவில் கேட்கிறேன்[15:07, 11/11/2023] SHERFUDDIN P
: என் பேரனும் மதுரையார் கருத்தை வழி மொழிகிறார்
ஒரு சிறிய மாறுதல்
அடுத்து ஏதோ ஒரு சூரா ஓதக்கூடாது
அடுத்த சூரா அல்கத்ர் தான் ஓத வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லுகிறார்
எல்லாப் புகழும் இறைவனுக்கே
[18:43, 11/11/2023] NeyveliRaja Bahadhur Khan: அல்ஹம்துலில்லாஹ் ! விவரமான பேரன்மார் !!
சகோ ஹசன் அலி தொலை பேசியில்
“இந்த சூராவில் மட்டும் சஜ்தா வசனம் ஓதியதும் சஜ்தா வுக்குப் போகாமல் குனித்து ருக்கு செய்து நிமிர்ந்து பிறகு இருப்பில் அமர்ந்த்ஹு அத்தஹியாது , இப்ராகிம் சலவாத் போன்றவற்றை வழக்கம்போல் ஓதி வழக்கமான இரண்டு சஜ்தா செய்து விட்டு சலாம் கொடுக்கு முன் சஜ்தா சூராவுக்கு உரிய சிறப்பு (ஒரு) சஜ்தா செய்து பி சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்
ஆக நான்கு வேறு பட்ட கருத்துக்கள் .
எது சரி ?
இதுவே இன்றைய வினாவாகிறது
இது பற்றிய உங்கள் கருத்துக்களை முடிந்தால் சான்றுகளுடன் எழுதவும்
இறைவன் நாடினால்
அடுத்த வாரமோ , அதன் பின்னரோ சிந்திப்போம்
02 ஜமா அத்துல் அவ்வல் (5) 1445
1ர் 112023 வியாழன்
சர்புதீன் பீ

சொந்த ஊர் 5 சீதேவி வடகரை 221123 புதன்





 சொந்த ஊர் 5

சீதேவி வடகரை
221123 புதன்
நீர் நிலைகளைப் பார்த்தபடி வாழுவோருக்கு மனதில் ஒரு அமைதி நிலவி அதனால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் எனஅண்மையில் முகநூல் பதிவு ஓன்று படித்தேன்
அந்த அரிய வாய்ப்பை அடைந்தவர்கள் சீதேவி வடகரை வாசிகள்
குளம் என்றால் 4 கரைகளில் இருப்பவர்களுக்கும் இப்படித்தானே இதில் வடகரைக்கு என்ன சிறப்பு ?
மேல்கரையில் கடைத்தெரு ,பெரிய பள்ளிவாசல் இருப்பதால் குடியிருப்புகள் அதிகம் இல்லை
தென் கரைக்கு எதிரே பேருந்து நிலையம் , அதையொட்டிய கடைகள்
கீழ் கரையில் பெரிய கோயில்
அதனால் அதிக அளவில் வீடுகள் இருப்பது வடகரையில்தான்
அதுவும் தெருவின் ஒரு பக்கம் குளத்துக்கு எதிர் புறமாக
இந்தச் சிறப்பு மிக்க வட கரையில் இருந்த/ இருக்கும் சீர் பெரு மக்கள் (VIPs)வீடுகள் – என் நினைவில் இருப்பவை
ஊருக்கு நீதி வழங்கும் நிலையில் இருந்த எங்கள் ஐயா காதர் அம்பலம் வீடு
பேச்சு வழக்கில் அம்பலார் வீடு என்றே அறியப்பட்டது
அதற்கு எதிரில் உள்ள சீதேவி படித்துறைக்கும் அதே பெயர்
ஐயா காலத்துக்குப்பின் எங்கள் அத்தா கமிஷனர் பீர் முகமது ,
பெரியத்தா சாகுல் ஹமீது , சச்சா சையது அம்பலம் கைக்கு மாறியது
எங்கள் அத்தாவின் பகுதியை மைத்துனர் சிராஜுதீன் அவர் அம்மா (எங்கள் அத்தாவின் உடன் பிறப்பு / என் துணைவியின் தாய்) விருப்பப்படி வாங்கிக் கொண்டார்
அம்பலார் வீட்டுக்கு அடுத்து காதர் அம்பலம் ஐயாவின் தம்பி சின்னவர் என்ற மைமீரா (முகமது மீரான் ) அம்பலம் வீடு .
இப்போது அந்த இடத்தில் அவர் மகள் வழிப் பேரன்அஜீஸ் பெரிய வீடு கட்டி வசிக்கிறார்
M P சச்சா என்ற பீர் சச்சா சின்னவரின் மகன்
அம்பலார் வீட்டை அடுத்து கட்(டி)டடம் என்று அறியப்படும்
S I Manzil .
இனா என்று அழைக்கப்படும் இப்ராகிம் மாமா கட்டிய வீடு – மாளிகை என்று சொல்லலாம்
60 ஆண்டுகள் கடந்தும் புதுப்பொலிவு மாறாமல் கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறது அழகான மொசைக் தரை
அங்கேயும் மனிதர்கள் யாரும் இல்லை .
முன்பெல்லாம் ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் குடும்பதினர் அனைவரும் இனா மாமாவின் நினைவு நாளை ஒட்டி அங்கு ஓன்று கூடி கொஞ்ச நாள் தங்கி இருப்பார்கள் . அந்தப் பகுதியே கலகலப்பாக இருக்கும்
ரம்சான் மாதத்தில் ஒரு நாள் பள்ளி வாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சவும் வருவார்கள்
இனா வீட்டுக் கஞ்சி என்றால் அதற்கு தனியாக ஒரு பெருங்கூட்டம் கஞ்சி வாங்க பள்ளி வாசலுக்கு வரும்
அதெல்லாம் இப்போது கனவுகள் , நினைவுகளாகி விட்டன
மூத்தவர்கள் மறைந்தது போக இருப்பவர்கள் வர முடியாத தள்ளாமை
இளையவர்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை
திருமணம் போன்ற பல நிகழ்வுகள் நடந்த இடம் ,தம்பி சஹா .
என் திருமணம் கூட அங்கேதான்
இனா மாமாவும் , அவர் மூத்த மகன் SI சம்சுதீன் அண்ணனும் எங்கள் அத்தாவுக்கு ஸ,பந்திகள்
அப்படியே மேற்கு நோக்கிப் போனால் சின்னதுரை அம்பலார் பெரியத்தா வீடு – ரஹ்மத் அலி அண்ணனின் பூர்விக வீடு
அதுவும் பெரிய வீடுதான் ஆனால் காலத்தால் சிதிலமடைந்து , இடிக்கப்பட்டு விட்டது
அதை அடுத்து தாசில்தார் பெரியத்தா பீர்முகமது வீடு
கிழக்கே போனால் எங்கள் ஜமிலா குப்பி ,பீயன்ன மூனா என்ற பீ முகமது இப்ராஹீம் மாமா( என் துணைவியின் பெற்றோர் )வீடு
அதுவும் இப்போது இடிக்கபட்ட நிலையில் ..
சிதிலமடைந்த கோட்டைகள் மட்டுமல்ல , சிதிலமடைந்த , இடிக்கப்பட்ட வீடுகளும் ஆளில்லாத மாளிகைகளும் பல வரலாறுகளை .பாடங்களைச் சொல்கின்றன
நாம் அதை எல்லாம் உணர்ந்து கொள்ள மறுக்கிறோம்
வடகரையை ஒட்டியிருக்கும் உள் தெருக்களில் சரிவு மாமா வீடு,
எங்கள் அம்மாவின் அத்தா பீர்முகமது ஐயா வீடு,
கருப்புத் தொப்பி அப்துல் ரஹீம் மாமா வீடு,( இவர் எங்கள் அத்தாவுக்கு மைத்துனர் ,கோட்டைஇருப்பு குப்பிக்கு,ம் ,MP சச்சாவுக்கும் ச்ம்பநதி )
ஜென்னத் அக்காள் மகள் பாப்பா மாமனார் காசி ராவுத்தர் வீடு,
ஆசாப் பெரியம்மா (இனா மாமாவின் உடன் பிறப்பு)வீடு
என எல்லாம் மிக நெருங்கிய உறவினர்கள்
இவை எல்லாம் என் நினைவில் இருந்துதான் எழுதுகிறேன்
எனவே ,விடுதல்கள் பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் , எனக்குத் தெரிவியுங்கள்
நல்ல ஒரு முச்சந்தியில் அந்தப் பகுதியின் பேரங்காடி – பீரண்ணன் கடை பெட்டிக்கடை பழக்கடை . மளிகைக் கடை எல்லாம் இணைந்த அது பேரங்காடிதான்
வடகரை வீடுகள் பற்றிப் பார்தோம் , அங்கு உருவான சீர் பெரு மக்கள் பற்றி பின்பொரு பகுதியில்
சென்ற பகுதி வினா
“ஆலவடி “ (சகோ சிர்ஜுதீனுக்கு நன்றி )
என்றால் என்ன
விடை
குளத்துப் படித்துறையின் வலது இடது இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் ஆழமாக இருக்கும்
தண்ணீர் குளம் நிறைய இருக்கும்போது அந்தப்பகுதிக்குப் போய்விட்டால் நீரோட்டம் இழுத்துச் சென்று விடும்
இந்த ஆழமான பகுதிதான் ஆலவடி (ஆழப்படியின் திரிபு )
எனப்படும்
சீதேவியின் உள்பக்கத்தில் இரண்டு மூன்று பேர் நடக்கும் அளவுக்கு ஒரு சுற்றுச் சுவர் இருக்கும்
அதில் இருந்து ஆண்கள் ஆலவடிப் பகுதியில் குதித்து (dive அடித்து ) விளயாடுவார்கள்
பல ஆயிரங்கள் செலவு செய்து நகரத்தில் வசிப்போர் கற்றுக்கொள்ளும் நீச்சல், நீரில் குதித்தல் (Diving) எல்லாம் எங்கள் ஊரில் இலவசமாய்
அங்கு பிறந்து வளர்ந்த பெரும்பலானோருக்கு நீச்சல் நன்றாகத் தெரியும்
ஒரு கரையிலிருந்து எதிர் கரைக்கு நீந்திப் போய் நீந்தியே திரும்பி வருவார்கள்
சரியான விடை அனுப்பிய சகோ
ஷர்மதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
ஆலவடி பற்றி சொன்ன சகோ சிராசுதீனுக்கும் ,
விடை சொல்லாவிட்டாலும் தகவல்கள் அளித்த சகோ
தல்லத்துக்கும் நன்றி
ஆலவடியிலிருந்து அப்படியே மற்ற நீர்நிலைகள் பற்றி சுருக்கமாக
சாமாங் குளம்- சாமானிய மக்களுக்கு குடி நீர்
மருத நாடி , கல்வெட்டு மேடு - சற்று உயர்நிலை குடி நீர்கள்
சுவையாலும் , விலையாலும்
இப்போது குழாய்களில் காவிரி நீர் வருகின்றதாம்- சிலபல குறை பாடுகளுடன்
பெரிய கண்மாய் ஓன்று மதுரை சாலையில் –
. விவசாயத்துக்கு பெரிதும் பயன்படும்
அது வற்றும்போது நிறைய மீன்கள், விரால், கெளுத்தி போன்ற நாட்டு மீன்கள் விலை மலிவாகக் கிடைக்கும்
இப்போது கண்மாயும் இல்லை, விவசாயாமும் இல்லை மீன்களும் இல்லை
இன்னொரு மறக்க முடியாத நீர் ஆதாரம் இனா வீட்டு பம்ப்செட்
அவர்கள் தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச தோண்டிய கிணற்று நீர் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் பெரிய தொட்டி யில் அந்த நீரை நிரப்பி குளிக்கத் தோதாக அமைத்துக் கொடுத்தார் இனா மாமா
,இப்போது அது இல்லை
எங்கள் ஊரில் தண்ணீர் பற்றாக்குறை என்று சொல்லுவார்கள்
எனக்கென்னவோ நீர் நிலைகளை பராமரித்து , மழை நீரை சேகரித்து . நல்லபடி நீர் மேலாண்மை செய்தால் போதும் போதும் எனும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று தோன்றுகிறது
நிறைவாக
சொந்த ஊர் பற்றி எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன்
இதுவரை சகோ ஷர்மதா ,ஜோதி இருவர்தான் அனுப்ப்பியிருக்கிறார்கள் இருவருக்கும் நன்றி
:” எனக்கு நிறைய செய்திகள் தெரியும் ஆனால் typing வராது “
என்பவர்களுக்கு
கைப்பேசியில் Tamil Voice Typing “ என்று ஒரு செயலி(app_) இருக்கிறது
அதில் நீங்கள் அழகான தமிழில் தெளிவான குரலில் பேசினால் மிக அழகாக பிழை இன்றி type செய்து விடும்
செயலியை எப்படி செயல்படுத்துவது என்றுதெரியாவிட்டால் உங்கள் வீட்டிலோ அக்கம் பக்கத்திலோ இருக்கும் இளையோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
இறை வன் நாடினல்
அடுத்த வாரம் சிந்திப்போம்
சகோ ஷர்மதா அறிந்த திருப்பத்தூரில் .
PS
செய்திகளை திரும்பத் திரும்ப எழுதுவது போல் ஒரு உணர்வு
என்ன செய்வது இருப்பது ஒரு சொந்த ஊர்தானே !
அதற்காக வாணியம்பாடி திருப்பத்தூர் பற்றியா எழுத முடியும் !!
22 112023 புதன்
சர்புதீன் பீ