சொந்த ஊர் 6
உங்கள் பார்வையில்
சகோ ஷர்மதா
241123 வெள்ளி
ஒரு மாறுதலாக அவ்வப்போது உங்கள் கருத்துக்கள், எண்ணங்கள் , உணர்வுகள் ---அந்த வரிசையில் முதலில்
சகோ ஷரமதா
நான் அறிந்த திருப்பத்தூர். ஷர்மதா
(291023)
திருப்பத்தூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சிறு வயதுப்பிள்ளையாய் இருக்கும்போது பள்ளிக்குச் செல்வது வீட்டருகில் உள்ள அங்காளம்மன் கோயிலில் இருந்த பரந்த வெற்றிடத்தில்தெருவில் உள்ள பிள்ளைகளுடன் விளையாடுவது இப்படித்தான் கழிந்தது.
உயர்நிலைப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளி என்று வந்தவுடன் பள்ளியைத்தவிர வேறு எங்கும் அவ்வளவாக
சுற்றுவதற்கு வாய்ப்புகிடைக்கவில்லை.
வருடந்தோறும் வரும் திருவிழாக்களை ஆசையுடன் சுற்றியதுண்டு.
பூத்திருவிழாவில் பூமாரிஅம்மன் கோவிலில் பூச்சொறிதலை பார்த்துவிட்டு ராட்டினம் சுற்றுவது வகைவகையான மாம்பழங்களை ஒவ்வொன்றிலும் சுவைப்பதற்காக வாங்கிவருவது இப்படியாக திருவிழாவை கண்டு கழிப்போம்.
இதையடுத்து தேர்த்திருவிழாவும் முன்றாவது நாளாக சீதேவியில் தெப்பம் இழுக்கும் விழா நடைபெறும்.கண்கொள்ளாகாட்சியாக இருக்கும் தெப்பம் நீரில் அசைந்து சொல்லும்போது.
புரவி எடுபபின்போதுசிறிய குதிரைகள் வாங்கி அதைசில நாட்கள் வரை உடையாமல் பாதுகாத்தால் மட்டற்ற
மகிச்சியடையும் அந்த
நாட்கள்.பொங்கலின் போது தவறாமல் சிறு வீடு கட்டுவோம். இவைசிறுவயதில் ஆனந்தமான இனிய நினைவுகள்.
பெருநாள் தொழுகை தொழுவதற்காக அத்தாவுடன் கைப்பிடித்து சென்றதும்
போகும் வழிமுழுவதும் அல்லாஹு அக்பர் அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் ஓதிக்கொண்டே செல்வதும், தொழுகையைமுடித்துத் திரும்பும்போது அச்சுக்கட்டில் உள்ள பெரிய பெரியத்தா வீட்டிற்குச் செல்வோம்.அங்கு சின்னா அண்ணனை பார்த்து நோன்புக்காசு , புதுத்துணிகள் கொடுத்துவிட்டு வருவோம்.
சாமான்குளத்துப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது இடி விழுந்த அதிர்வில் பள்ளியில் சுற்றி உள்ள சிலைகள் சிதைவடைந்தன. என்னை பீர் அண்ணன்
சைக்கிளில் வந்து கூட்டிச்சென்றது.
தங்கமணி தியேட்டர்
போகும் வழியில் சரிபு சச்சா வீடு இருந்ததால்
தியேட்டருக்குப் படம் பார்க்க போபவர்களை வேடிக்கை பார்த்தபடி இருக்கலாம்.
மஞ்சுளா தியேட்டர் தூரமாக இருந்ததால் அங்கு சென்று படம் பார்க்க யாரும் அழைத்துச்செல்லமாட்டார்கள்.
சீதேவி வற்றி தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருந்தபொழுது ஈனா பெரியத்தா அவர்கள் பம்ப் செட்டில்
குளிப்பதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நேரம் குறித்து அனுமதித்திருந்தார்கள்.
அப்போதுதான் மருத நாடி,கல்வெட்டு மேட்டுத்
தண்ணீர் என்று அண்ணன்கள் ஒவ்வொருவரும் குடத்தை சைக்கிளில் கட்டிக்கொண்டு நிரப்பி வருவார்கள்.
பிரான்மலை அப்துல்லா சாஹிபு அவர்களுக்கு நேர்ந்து கொண்டு நேர்ச்சை நிறைவேற்ற போகும் அனுபவம் மிக நன்றாக இருக்கும்.காலையில் உண்பதற்கு வடித்த சோற்றை அண்டாவில் போட்டு தண்ணீர் ஊற்றி தொட்டுக்கொள்வதற்கு
மொச்சை கருவாடு கத்தரிக்காய் போட்டு கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள தயார் செய்து போவார்கள் .அது மிகுந்த சுவையாக இருக்கும்.
திருப்பத்தூரில் உறவுகளை பட்டப்பெயர்வைப்பதில் மிகவும் திறமையானவர்கள்.
எங்கள் அம்மாவை அவர்கள் அய்யா முன்சீப்ஆக இருந்தார்கள் என்பதால் முன்சுவீட்டு ஜெமிலா என்றுதான் கூறுவார்கள். பல ஜெமிலாக்கள் இருப்பதால் இப்படி அடையாளமாக வைத்து அழைப்பார்கள்.இதே போல் பாத்து என்ற பெயர் கொண்டவர்களுக்கும்
மற்றும் முன்னோர்கள் பெயரைச்சேர்த்து இன்னார் பேத்தி,பேரன்
என்றும் சொல்வார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திர்க்கும் ஒரு பெயர் இருக்கும் .இந்த வழக்கம் திருப்பத்தூருக்கே உள்ள."!*.... தனித்துவமானது.
திருப்பத்தூர் மக்களின் இறைவழிபாடு,கல்வி,பண்பாடு,புத்திக்கூர்மை,தைரியம்,பாசம்,நேசம் எல்லாம் அதிகமாக இருப்பதால் இன்றும் ஊர் செல்லும் போது,எல்லோரையும் பார்க்கும் பொழுது சொந்த மண்ணின்
மணம் இதயத்தை நிரப்பிச் செல்லும்.
என்னுரை
இது போல் சொந்தஊரில் பிறந்து வளர்ந்தோர் , வாழ்ந்தோர் வாழ்வோர் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்தால் தொடர் சுவை கூடி சிறப்பாகும்
“சொந்த ஊர் “
இந்தப் பதிவோடு முற்றுப் பெறவில்லை
இடை நிறுத்தம் செய்யப்படுகிறது
வழக்கமான என்பதிவுகள் எல்லாவற்றிற்கும் ஒரு முக்கால் புள்ளி
முகநூல் நினைவு பகிர்வு, சிறு சிறு பதிவுகள் தொடரலாம்
இறைவன் நாடும்போது மீண்டும் சிந்திப்போம்
நன்றி
24112023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment