சொந்த ஊர் 5
சீதேவி வடகரை
221123 புதன்
நீர் நிலைகளைப் பார்த்தபடி வாழுவோருக்கு மனதில் ஒரு அமைதி நிலவி அதனால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் எனஅண்மையில் முகநூல் பதிவு ஓன்று படித்தேன்
குளம் என்றால் 4 கரைகளில் இருப்பவர்களுக்கும் இப்படித்தானே இதில் வடகரைக்கு என்ன சிறப்பு ?
மேல்கரையில் கடைத்தெரு ,பெரிய பள்ளிவாசல் இருப்பதால் குடியிருப்புகள் அதிகம் இல்லை
தென் கரைக்கு எதிரே பேருந்து நிலையம் , அதையொட்டிய கடைகள்
கீழ் கரையில் பெரிய கோயில்
அதனால் அதிக அளவில் வீடுகள் இருப்பது வடகரையில்தான்
அதுவும் தெருவின் ஒரு பக்கம் குளத்துக்கு எதிர் புறமாக
இந்தச் சிறப்பு மிக்க வட கரையில் இருந்த/ இருக்கும் சீர் பெரு மக்கள் (VIPs)வீடுகள் – என் நினைவில் இருப்பவை
ஊருக்கு நீதி வழங்கும் நிலையில் இருந்த எங்கள் ஐயா காதர் அம்பலம் வீடு
பேச்சு வழக்கில் அம்பலார் வீடு என்றே அறியப்பட்டது
அதற்கு எதிரில் உள்ள சீதேவி படித்துறைக்கும் அதே பெயர்
ஐயா காலத்துக்குப்பின் எங்கள் அத்தா கமிஷனர் பீர் முகமது ,
பெரியத்தா சாகுல் ஹமீது , சச்சா சையது அம்பலம் கைக்கு மாறியது
எங்கள் அத்தாவின் பகுதியை மைத்துனர் சிராஜுதீன் அவர் அம்மா (எங்கள் அத்தாவின் உடன் பிறப்பு / என் துணைவியின் தாய்) விருப்பப்படி வாங்கிக் கொண்டார்
அம்பலார் வீட்டுக்கு அடுத்து காதர் அம்பலம் ஐயாவின் தம்பி சின்னவர் என்ற மைமீரா (முகமது மீரான் ) அம்பலம் வீடு .
இப்போது அந்த இடத்தில் அவர் மகள் வழிப் பேரன்அஜீஸ் பெரிய வீடு கட்டி வசிக்கிறார்
M P சச்சா என்ற பீர் சச்சா சின்னவரின் மகன்
அம்பலார் வீட்டை அடுத்து கட்(டி)டடம் என்று அறியப்படும்
S I Manzil .
இனா என்று அழைக்கப்படும் இப்ராகிம் மாமா கட்டிய வீடு – மாளிகை என்று சொல்லலாம்
60 ஆண்டுகள் கடந்தும் புதுப்பொலிவு மாறாமல் கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறது அழகான மொசைக் தரை
அங்கேயும் மனிதர்கள் யாரும் இல்லை .
முன்பெல்லாம் ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் குடும்பதினர் அனைவரும் இனா மாமாவின் நினைவு நாளை ஒட்டி அங்கு ஓன்று கூடி கொஞ்ச நாள் தங்கி இருப்பார்கள் . அந்தப் பகுதியே கலகலப்பாக இருக்கும்
ரம்சான் மாதத்தில் ஒரு நாள் பள்ளி வாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சவும் வருவார்கள்
இனா வீட்டுக் கஞ்சி என்றால் அதற்கு தனியாக ஒரு பெருங்கூட்டம் கஞ்சி வாங்க பள்ளி வாசலுக்கு வரும்
அதெல்லாம் இப்போது கனவுகள் , நினைவுகளாகி விட்டன
மூத்தவர்கள் மறைந்தது போக இருப்பவர்கள் வர முடியாத தள்ளாமை
இளையவர்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை
திருமணம் போன்ற பல நிகழ்வுகள் நடந்த இடம் ,தம்பி சஹா .
என் திருமணம் கூட அங்கேதான்
இனா மாமாவும் , அவர் மூத்த மகன் SI சம்சுதீன் அண்ணனும் எங்கள் அத்தாவுக்கு ஸ,பந்திகள்
அப்படியே மேற்கு நோக்கிப் போனால் சின்னதுரை அம்பலார் பெரியத்தா வீடு – ரஹ்மத் அலி அண்ணனின் பூர்விக வீடு
அதுவும் பெரிய வீடுதான் ஆனால் காலத்தால் சிதிலமடைந்து , இடிக்கப்பட்டு விட்டது
அதை அடுத்து தாசில்தார் பெரியத்தா பீர்முகமது வீடு
கிழக்கே போனால் எங்கள் ஜமிலா குப்பி ,பீயன்ன மூனா என்ற பீ முகமது இப்ராஹீம் மாமா( என் துணைவியின் பெற்றோர் )வீடு
அதுவும் இப்போது இடிக்கபட்ட நிலையில் ..
சிதிலமடைந்த கோட்டைகள் மட்டுமல்ல , சிதிலமடைந்த , இடிக்கப்பட்ட வீடுகளும் ஆளில்லாத மாளிகைகளும் பல வரலாறுகளை .பாடங்களைச் சொல்கின்றன
நாம் அதை எல்லாம் உணர்ந்து கொள்ள மறுக்கிறோம்
வடகரையை ஒட்டியிருக்கும் உள் தெருக்களில் சரிவு மாமா வீடு,
எங்கள் அம்மாவின் அத்தா பீர்முகமது ஐயா வீடு,
கருப்புத் தொப்பி அப்துல் ரஹீம் மாமா வீடு,( இவர் எங்கள் அத்தாவுக்கு மைத்துனர் ,கோட்டைஇருப்பு குப்பிக்கு,ம் ,MP சச்சாவுக்கும் ச்ம்பநதி )
ஜென்னத் அக்காள் மகள் பாப்பா மாமனார் காசி ராவுத்தர் வீடு,
ஆசாப் பெரியம்மா (இனா மாமாவின் உடன் பிறப்பு)வீடு
என எல்லாம் மிக நெருங்கிய உறவினர்கள்
இவை எல்லாம் என் நினைவில் இருந்துதான் எழுதுகிறேன்
எனவே ,விடுதல்கள் பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் , எனக்குத் தெரிவியுங்கள்
நல்ல ஒரு முச்சந்தியில் அந்தப் பகுதியின் பேரங்காடி – பீரண்ணன் கடை பெட்டிக்கடை பழக்கடை . மளிகைக் கடை எல்லாம் இணைந்த அது பேரங்காடிதான்
வடகரை வீடுகள் பற்றிப் பார்தோம் , அங்கு உருவான சீர் பெரு மக்கள் பற்றி பின்பொரு பகுதியில்
சென்ற பகுதி வினா
“ஆலவடி “ (சகோ சிர்ஜுதீனுக்கு நன்றி )
என்றால் என்ன
விடை
குளத்துப் படித்துறையின் வலது இடது இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் ஆழமாக இருக்கும்
தண்ணீர் குளம் நிறைய இருக்கும்போது அந்தப்பகுதிக்குப் போய்விட்டால் நீரோட்டம் இழுத்துச் சென்று விடும்
இந்த ஆழமான பகுதிதான் ஆலவடி (ஆழப்படியின் திரிபு )
எனப்படும்
சீதேவியின் உள்பக்கத்தில் இரண்டு மூன்று பேர் நடக்கும் அளவுக்கு ஒரு சுற்றுச் சுவர் இருக்கும்
அதில் இருந்து ஆண்கள் ஆலவடிப் பகுதியில் குதித்து (dive அடித்து ) விளயாடுவார்கள்
பல ஆயிரங்கள் செலவு செய்து நகரத்தில் வசிப்போர் கற்றுக்கொள்ளும் நீச்சல், நீரில் குதித்தல் (Diving) எல்லாம் எங்கள் ஊரில் இலவசமாய்
அங்கு பிறந்து வளர்ந்த பெரும்பலானோருக்கு நீச்சல் நன்றாகத் தெரியும்
ஒரு கரையிலிருந்து எதிர் கரைக்கு நீந்திப் போய் நீந்தியே திரும்பி வருவார்கள்
சரியான விடை அனுப்பிய சகோ
ஷர்மதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
ஆலவடி பற்றி சொன்ன சகோ சிராசுதீனுக்கும் ,
விடை சொல்லாவிட்டாலும் தகவல்கள் அளித்த சகோ
தல்லத்துக்கும் நன்றி
ஆலவடியிலிருந்து அப்படியே மற்ற நீர்நிலைகள் பற்றி சுருக்கமாக
சாமாங் குளம்- சாமானிய மக்களுக்கு குடி நீர்
மருத நாடி , கல்வெட்டு மேடு - சற்று உயர்நிலை குடி நீர்கள்
சுவையாலும் , விலையாலும்
இப்போது குழாய்களில் காவிரி நீர் வருகின்றதாம்- சிலபல குறை பாடுகளுடன்
பெரிய கண்மாய் ஓன்று மதுரை சாலையில் –
. விவசாயத்துக்கு பெரிதும் பயன்படும்
அது வற்றும்போது நிறைய மீன்கள், விரால், கெளுத்தி போன்ற நாட்டு மீன்கள் விலை மலிவாகக் கிடைக்கும்
இப்போது கண்மாயும் இல்லை, விவசாயாமும் இல்லை மீன்களும் இல்லை
இன்னொரு மறக்க முடியாத நீர் ஆதாரம் இனா வீட்டு பம்ப்செட்
அவர்கள் தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச தோண்டிய கிணற்று நீர் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் பெரிய தொட்டி யில் அந்த நீரை நிரப்பி குளிக்கத் தோதாக அமைத்துக் கொடுத்தார் இனா மாமா
,இப்போது அது இல்லை
எங்கள் ஊரில் தண்ணீர் பற்றாக்குறை என்று சொல்லுவார்கள்
எனக்கென்னவோ நீர் நிலைகளை பராமரித்து , மழை நீரை சேகரித்து . நல்லபடி நீர் மேலாண்மை செய்தால் போதும் போதும் எனும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று தோன்றுகிறது
நிறைவாக
சொந்த ஊர் பற்றி எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன்
இதுவரை சகோ ஷர்மதா ,ஜோதி இருவர்தான் அனுப்ப்பியிருக்கிறார்கள் இருவருக்கும் நன்றி
:” எனக்கு நிறைய செய்திகள் தெரியும் ஆனால் typing வராது “
என்பவர்களுக்கு
கைப்பேசியில் Tamil Voice Typing “ என்று ஒரு செயலி(app_) இருக்கிறது
அதில் நீங்கள் அழகான தமிழில் தெளிவான குரலில் பேசினால் மிக அழகாக பிழை இன்றி type செய்து விடும்
செயலியை எப்படி செயல்படுத்துவது என்றுதெரியாவிட்டால் உங்கள் வீட்டிலோ அக்கம் பக்கத்திலோ இருக்கும் இளையோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
இறை வன் நாடினல்
அடுத்த வாரம் சிந்திப்போம்
சகோ ஷர்மதா அறிந்த திருப்பத்தூரில் .
PS
செய்திகளை திரும்பத் திரும்ப எழுதுவது போல் ஒரு உணர்வு
என்ன செய்வது இருப்பது ஒரு சொந்த ஊர்தானே !
அதற்காக வாணியம்பாடி திருப்பத்தூர் பற்றியா எழுத முடியும் !!
22 112023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment