Tuesday, 7 November 2023

சொந்த ஊர் 3 டோன்டாக்கு 081123 புதன்





 சொந்த ஊர்

3 டோன்டாக்கு
081123 புதன்
காலச்சக்க ரம் அப்படியே 60 ஆண்டுகள் பின்னால் சுழன்று என்னைப் பள்ளிச் சிறுவனாக ஆக்கி விடுகிறது
துள்ளித் திரியும் காலம்,
வரவில்லாமல் செலவுகள்
பசுமையான நினைவுகள்
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அத்தாவுக்கு பணி இட மாறுதல் அதுவும் 6 மாதம் ஒரு சிறப்புப் பணி மதுரையில்
எனவே நானும் உடன் பிறப்புகள் மெஹராஜ் ஜோதியும் திருவில் பெரியத்தா வீட்டில் தங்கி அங்கு நாகப்பா மருதப்பா பள்ளியில் படித்தோம் சுராஜ் கொஞ்ச நாளில் மதுரைக்குப் போய்விட்டது
பெரியத்தா மகன் அஜ்மலும் நானும் ஒரே வகுப்பு ,ஒரே பிரிவு
வாச்சா பெரியத்தா மகன் சய்யது (ராஜா ) வேறு பிரிவு
மாமா மகன் சக்ரவர்த்தி வேறு வகுப்பு
அத்தா அம்மாவைப் பிரிந்து வேறு வீட்டில் தங்கிய முதல் அனுபவம் எங்களுக்கு
அந்த வேறுபாடு சிறிதும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் பெரியத்தா பெரியம்மா , பிள்ளைகள்
அஜம்ல் என் வகுப்பு, நல்ல நண்பன் , தல்லத் ரம்ஜான் இருவரும் சிறுவர்கள்
கமால் அண்ணன் பணிக்காக தினமும் காரைக்குடி போய் வரும்
சரிவண்ணன் , ஜமாலண்ணன் இருவரும் மிகப் பிரியமாகப் பழகுவார்கள்
ஜமாலண்ணனுக்கு நாங்கள் அங்கு இருக்கும்போது விமானப் படையில் பணி கிடைத்தது
காத்தூன் அக்கா பாசத்துடன் கவனித்துக் கொள்ளும்
பரிமளா அக்கா திருமணமாகி போய் விட்டது
இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வீட்டில் குளியலறை இதெல்லாம் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே தெரியவில்லை
இனி அப்படியே பள்ளிக்குப் போவோம்
நாகப்பா மருதப்பா பள்ளி
எழாம் வகுப்பு
சமூகவியல் ஆசிரியர்
அந்தக் காலத்து ஆசிரியருக்கே உரிய தோற்றம் – சுமாரான வேட்டி , தொளதொளவென்ற முழுக்கை சட்டை மேலே ஒரு துண்டு கையில் பிரம்பு பொடி போடுவார் என்று நினைவு
வகுப்பில் மாணவர்கள் பேசும் சலசலப்பு ஓசை கேட்டால்
Don ‘talk என்று உரத்த குரலில் சொல்வார்
இப்படி அடிக்கடி சொல்வதனால் அதுவே அவர் பட்டப் பேராக
பேச்சுத் தமிழில் , வட்டார வழக்கில் டோன்டாக்(கு) என்றாகி விட்டது
இது பற்றிய வினாவுக்கு சரியான விடை சொன்ன சகோ தல்லத்துக்கு பாராட்டுகள்
1 ½ குட்டு கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
இதுவும் டோன்டாக்கின் மற்றொரு சிறப்பு
மாணவன் ஏதும் தவறு செய்தால் அருகில் உள்ள மாணவனிடம்
:” அவன ஓங்கி ஒன்ற கொட்டு கொட்டுடா “ என்பார்
முதலில் பலமாகக் குட்ட வேண்டும் .அடுத்த சற்று மெதுவாக குட்ட வேண்டும் 1+ ½ =1 ½ குட்டு
சரியாகக் குட்டா விட்டால் குட்டியவனுக்கும் குட்டு விழும்
எதற்கு வம்பு என்று இரண்டையுமே பலமாகக் குட்டி விடுவார்கள்
தமிழாசிரியர் (பெயர் நாச்சியப்பன் என நினவு ) – அவர் தண்டிப்பதில் தனி வழி ஒன்றைக் கையாண்டார்
கையில் நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் ஒரு பேனாவை நுழைத்து திருகுவார் . நன்றாக வலிக்கும் . நம்பமுடியாவிட்டால் செய்து பாருங்கள்
வகுப்பாசிரியர் ஆங்கிலப் பாடம் நடத்துவார் . அஜமலுக்கும் எனக்கும் 3 மாதம் பயிற்சி கொடுத்தா;ல் பள்ளி நிறைவுத் தேர்வு தரத்துக்கு ஆங்கிலத்தில் தேறி விடலாம் என்று சொல்லுவார் அவரே( ACC) மாணவர் துணைப்படை பயிற்சிக்கும் பொறுப்பாளராக இருந்தார்
இன்னொரு ஆசிரியர் பெயர் ப்ரின்ஸ்
அதை தமிழில் இளவரசு என்று மொழி பெயர்த்து ள வை சிறப்பு ழகரமாக்கி பகடி செய்வார்கள் மாணவர்கள்
பகடி, கிண்டல் பட்டப் பெயர் வைப்பதில் எங்கள் ஊர் மக்கள் சிறப்பானவர்கள் ,அந்த அளவுக்கு அறிவு இலக்கிய நயம் உடையவர்கள்
கல்லூரி அப்போது கிடையாது
ஏட்டுப் பள்ளிக்கூடம் என்பது ஓராசிரியர் பள்ளி
அந்த ஆசிரியர் ஒரு ஞானி , எறும்புகளிடம் பேசுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்
புலவர் ஸ்கூல் அரசு நிதி உதவி பெறும் பள்ளி அதனால் மிகக் குறைந்த கட்டணம் – மாதம் 4 அணா (1/4 ரூபாய் )
முத்தமிழ் பள்ளி – கொஞ்சம் கட்டணம் அதிகம் அதனாலேயே அங்கு அடிப்பது பெருமையாகக் கருதப்பட்டது
அரசு துவக்கப் பள்ளி ஒன்றும் இருந்தது
பெரும்பாலோனோர் இந்த எல்லாப் பள்ளிகளிலும் படித்து
பிறகு நா மா பள்ளிக்கு மேல் வகுப்புகளுக்கு வருவார்கள்
ஏட்டுப் பள்ளிக்கூடக் கல்வி தமிழ் இலக்கணம் , கணக்கு இரண்டுக்கும் வலுவான அடித்தளமாக இருக்கும் என்பார்கள்
இப்படி ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சிறப்பு
பாத்திமா RC பள்ளி SM மருத்துவமனை வளாகத்துக்குள்ளே இருந்தது
இப்போது எது எது இருக்கிறது என்று தெரியவில்லை
அப்போதில்லாத கல்லூரி இப்போது இருக்கிறது
திரு ஆறுமுகம் அவரகள் தங்கள் குடும்பதுக்காக துவக்கிய கல்வி நிறுவனங்கள் ---
மழலையர் வகுப்பு முதல் கல்லூரி வரை –
நம்மூர் மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கி சேவை செய்கின்றன
கல்லூரியின் பெயர் “ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி “ சுருக்கமாக APSA அப்சா
இந்தக் கல்லூரிதுவங்கிய ஆண்டின் முதல் புகுமுக வகுப்பில் முதல் குழு (First Group ) வில் சேர்ந்து , வருகைப் பதிவேட்டில் முதல் பெயராக இருந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெருமை பெரியத்தா மகன் அஜ்மல் கானுக்கு
கல்லூரி வந்தவுடன் ஊரின் முகம் (மிகச் ) சிறிய அளவில் மாறியது
கல்லூரியை ஒட்டி மாணவர்கள் , ஆசிரியர்கள் தேவைகளுக்கு ஏற்ப சில கடைகள் முளைத்தன .
அந்தப்பகுதியில் ஓரளவு வீடுகளும் வந்தன
பெரிய பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இயங்கும் லிம்ரா மேல் நிலைப் பள்ளி ,தராமான உலகக் கல்வியும் மார்க்கக் கல்வியும் அளிக்கிறது இங்கும் மிகக் குறைந்த கட்டணம்
எப்படியோ டோன்டாக்கில் துவங்கி ஊரின் கல்வி பற்றி ஓரளவு பார்த்தோம்
சிந்திக்க ஒரு வினா
ஸ்ரீதேவி , சீதேவி , சீதளி என்று பலபெயர் கொண்ட அந்தக் குளத்தின் சரியான பெயர் எது ?
விடை சரியாகத் தெரியவில்லை
தெரிந்தவர்கள் சொல்லவும்
இறைவன் நாடினால் அடுத்த வாரம் சொந்த ஊரில்
சீதேவிக் குளத்தில் சிந்திப்போம்
08112023 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment