Saturday, 4 November 2023

தமிழ்( மொழி) அறிவோம் சீர் பெருமக்கள் 051123 ஞாயிறு





 தமிழ்( மொழி) அறிவோம்

சீர் பெருமக்கள்
051123 ஞாயிறு
“சீர் பெருமக்கள்”
பொருள் என்ன ?
விடை
“தமிழ் “ சொல்லுக்கு விடை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை
Very Important Persons (VIP)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் முதல் சரியான விடை
கணேச சுப்பிரமணியம் –விளக்கத்துக்கு நன்றி
ஹசன் அலி
விளக்கம்
சென்னை விமான நிலையம்
VIP lounge என்பதற்கு தமிழில்
“சீர் பெருமக்கள் ஒய்வு அறை “
என்று போட்டிருக்கிறார்கள் (18062023 தினமணிக் கதிர் )
விமான நிலையத்துக்கு தனியாக ஒரு தமிழ் போலும்
“மெய்ப்புல அறைகூவலர் “ உடல் ஊனமுற்றோரைக் குறிக்க
Physically challenged என்பதன் மொழி பெயர்ப்பு
இப்போது கூகிள் மொழிபெயர்ப்பு தமிழ் ஓன்று வேகமாக பரவி வருகிறது
கூகிள் மொழிபெயர்ப்பு ஒரு பயனுள்ள நல்ல செயலி
ஆனால் மொழி பெயர்ப்பை அப்டியே போடாமல் ஒரு முறை படித்துப் பார்த்து தேவையான திருத்தங்கள் செய்யலாம்
இல்லயேல் தமிழில் and வரும் இடத்தில் எல்லாம் மற்றும் எனபது கட்டாயமானது போல் கூகிள் தமிழ்தான் சரி என்ற நிலை உருவாகும்
சீர் பெருமக்கள் சகோ கணேச சுப்ரமணியம் அனுப்பிய விளக்கம்
சீர் குலைந்த சமுதாயத்தை சீர் செய்ய பாடுபட்ட அறிஞர்கள்/எழுத்தாளர்கள்/ சமத்துவத்தை வலியுறுத்தி யவர்கள்... *..இன்றைய தேதியில் VIP களை இப்படி மொழி பெயர்த்துள்ளார்கள்.(நகைமுரண்)
நன்றி சகோ
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
என்று ? தெரியவில்லை
என் பதிவுகளுக்கு கொஞ்சம் ஒய்வு தேவைப் படுகிறது
முழு ஓய்வா இல்லை பகுதி ஓய்வா ? அதுவும் தெளிவாகவில்லை
௦௫௧௧௨௦௨௩
05112023 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment