Thursday, 2 November 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் சுராஹ் 97அல் கத்ர் 03112023 வெள்ளி

 




இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சுராஹ் 97அல் கத்ர்
03112023 வெள்ளி
31 , திருமறை 15
குரான் சூராக்கள் பற்றி எளிய விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்
அந்த வரிசையில் இன்றும் ஒரு மிக எளிய ,பெரும்பாலும் எல்லோருக்கும் விடை தெரிந்த வினா
புனித மிக்க இரவு பற்றி சொல்லும் சுராஹ் எது
விடை
சுராஹ் 97அல் கத்ர் (மகத்துவம் )-(மக்கத்து சூராஹ் )
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் -முதல் சரியான விடை
பாப்டி
மெஹராஜ்
சிராஜுதீன்
தல்லத்
ஷர்மதா &
ஹசன் அலி
திரு மறை குரான் அருளப்பட்ட இரவின் சிறப்பு பற்றிச் சொல்லும் இந்த சூராவில்
“ கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.” (97 :3)
என்று அந்த இரவை இறைவன் சிறப்பிக்கிறான்
ஒரு நீண்ட நெடிய காலத்தைக் குறிக்கவே 1000 என்று சொல்லப்பட்டிருகிறது
83 ஆண்டுகள் 4 மாதங்கள் என்று பொருள் அல்ல
97. Surah Al-Qadr
Bismillaahir Rahmaanir Raheem
97:1 إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
97:2 وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
97:3 لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
97:4 تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:5 سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.

Bismillaahir Rahmaanir Raheem 

1.    Innaa anzalnaahu fee lailatil qadr

2.    Wa maa adraaka ma lailatul qadr

3.    Lailatul qadri khairum min alfee shahr

4.    Tanaz zalul malaa-ikatu war roohu feeha bi izni-rab bihim min kulli amr

5.    Salaamun hiya hattaa mat la'il fajr

இறைவன் நாடினால்
நாளை சிந்திப்போம்
18 ரபியுல் ஆகிர் (4) 1445
03 112023 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment