Tuesday, 31 October 2023

சொந்த ஊர் 2நுழைவுரை ௦11123 புதன்







 சொந்த ஊர்

2நுழைவுரை
௦11123 புதன்
சொந்த வீட்டில் துவங்கி இன்று சொந்த ஊருக்கு வந்து விட்டேன் 9 ஆண்டு வாழக்கையில் பயணித்து
இதுவும் இறைவன் நாட்டமே
என்ன இருக்கிறது இந்த ஊரைப்பற்றி எழுத ,அதுவும் ஒரு புதினம் எழுத ?
இது பலர் எண்ணத்தில் உதித்த ,சிலர் சொல்லிய கருத்து
என்ன இல்லை ?
அலை அலையாய் வரும் எண்ணங்கள், தகவல்கள் , நிகழ்வுகள்
கல்விக்கு கல்லூரி
வீரத்துக்கு மருது பாண்டியர்கள்
மருத்துவத்துக்கு எஸ் எம் ம மனை
புலமைக்கு புலவர் பரம்பரை- புலவர் பள்ளி ---
இப்படி நீண்டு கொண்டே போகிறது
எப்படித் தொகுத்து அதுவும் இது வரை இல்லாத ஓரு புதுமையாக புதின வடிவில் கொண்டு வருவதுதான் என் பிரச்சினை
எல்லா சுமைகளையும் பொறுப்புகளையும் தாங்கிக் கொள்ளும் வல்லமை பொருந்திய இறைவன் துணையிருப்பான் என்ற நம்பிக்கையில் எழுதத் துவங்குகிறேன்
ஒரு எளிய வினா
சீதேவியில் எத்தனைபடித்துறை அதில் ஆண்களுக்கு எத்தனை
பெண்களுக்கு எத்தனை ?
என்று கேட்டிருந்தேன்
வந்த முதல் விடையே ஒரு எதிர் வினாவாக இருந்தது
“படித்துறை என்றால் என்ன ?”
படத்தோடு விளக்கம் அனுப்பினேன் அவருக்கு
அதற்கப்புறம் 5 பேர் அனுப்பிய 3 விதமான விடைகள்
–மிக விரிவான விளக்கமான விடைகள்
படித்துறை எத்தனை என்பது எனக்கு சரியாகத் தெரியாது
எனவே அங்கேயே நீண்ட நாள் இருந்தவர்கள், இன்றும் இருப்பவர்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கும் என்று
எடுத்துக்கொண்டேன் .பின்னொரு பதிவில் அது பற்றி பார்ப்போம்
பிறகு முக நூல் நண்பர் ஒருவர் அருகில் உள்ள ஊர்காரர் முகநூல் அழைப்பில் பேசினார்
நிறைய தகவல்கள் சொன்னார்
நிறைய ஊக்கம் கொடுத்தார்
கதைக்களம் ,கரு எல்லாம் உருவாகி விட்டது
இப்போது நான் எழுத முற்பட வேண்டும்
நம்மூராருக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்
தெரிந்தவற்றை தெரிவியுங்கள் தயக்கமின்றி சொல்லுங்கள்
ஒரு சிறிய வினா இதுவும் நம்மூராருக்கே
“ குடகு மலை”
எங்கே இருக்கிறது ?
இறைவன் நாடினால் நாளைவழக்கமான பதிவிலும்
அடுத்த வாரம் இதே நாளில்
சொந்த ஊரில்
டோன்டாக்கையும்
சிந்திப்போம்
01112023 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment