Sunday, 29 October 2023

தமிழ் (மொழி) அறிவோம் இலஞ்சி 291023 ஞாயிறு

 



தமிழ் (மொழி) அறிவோம்

இலஞ்சி
291023 ஞாயிறு
நான்கெழுத்துகள்
முதல் எழுத்து உயிரெழுத்து
மற்ற மூன்றில் வல்லினம் ,மெல்லினம் ,இடையினம், மெய்யெழுத்து எல்லாம் உண்டு
மதில், நீர்நிலை மாமரம் என பல பொருள்கள்
சங்க இலக்கியச் சொல்
இன்றும் பேச்சு, எழுத்து வழக்கில் உள்ளது
ஓர் எழுத்து நீங்கினால் குரங்கை நினைவூட்டும்
இ யில் துவங்கும் அந்தச் சொல் எது ?
விடை
இலஞ்சி
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் –முதல் சரியான விடை
ஹசன் அலி
செல்வகுமார்
சிராஜுதீன்
தல்லத்
கணேச சுப்பிரமணியம்
குற்றாலம் செங்கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு ஊரின் பெயரான இந்தச் சொல்லுக்கு பொருள்கள்
வாவி, நீர்நிலை, நீர் தேக்கம் 2. கோட்டைச் சுவர், மதில், 3. மாமரம், மகிழ மரம்
மகிழம் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும். இது வகுளம், இலஞ்சி, மகிழ் என்றும் அழைக்கப்படும்
அகநானூறு ,புற நானூறு ,மலைபடு கடாம் குறுந்தொகை போன்ற பல சங்க இலக்கியங்களில் இலஞ்சி என்ற சொல் இடம் பெற்றுள்ளது
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௨௯௧௦௨௦௨௩
29102023 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment