Saturday, 7 October 2023

இனிய இஸ்லாம் எ த இ இ சூரா 105 அல்பில் 29092023 வெள்ளி




 இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சூரா 105 அல்பில்
29092023 வெள்ளி
22, திருமறை 6
நேற்றைய வினா
நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது
ஒரு குர்ஆன் சூராவின் பெயர்
நபி பெருமான் பிறந்த ஆண்டைக் குறிப்பிடுகிறது
அது எந்த சூரா?
விடை
சூரா 105அல்பில் (யானை)
. Surah Al-Fil
-
105:1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:2 أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3 وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:4 تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
இந்த சூரா சொல்லும் வரலாறு
சுருக்கமாக
பக்தித் தலமான
புனித காபா பக்கமா நகரின் வணிக வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தது
எமன்நாட்டு ஆட்சிப் பொறுப்பு அதிகாரி அப்ரகா என்பவர்
காபாவுக்குப் போட்டியாக மிகப்பெரும் ஆலயம் ஒன்றை நிறுவி காபா போல அங்கு நிறைய மக்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்க. அது நிறைவேறவில்லை
இதற்கிடையில் அந்த ஆலையத்தை யாரோ அசுத்தம செய்து விட இது மக்காவாசிகள் செயல் என்று எண்ணிய அப்ரகா காபாவை அழிப்பேன் என்று சூளுரைத்து
யானைப் படையுடன் மக்கா நோக்கி அணி வகுத்தார்
இது வரை யானையைப் பார்த்து அறியாத மக்கா மக்கள் வாசிகள் திகைத்து நின்றனர்
இந்த நிகழ்வு நடந்தது கி பி 570 ஆம் ஆண்டு
இது யானை ஆண்டு (Year of the Elephant, அரபு மொழி: عام الفيل‎, ʿஆமு இ-ஃபில்) என்று இசுலாமிய வரலாற்றில் பேசப்படுகிறது
. இசுலாமிய மரபின் படி இவ்வாண்டிலேயே
அண்ணல் முகம்மது நபி ஸல் பிறந்தார்கள்
இறைவன் எப்படி புனித காபாவை காப்பாற்றினான்
என்பதை மிகச் சுருக்கமாக சொல்கிறது சூரா 105
அதை சற்று விரிவாகப் பார்ப்போம்
, தலைமை தாங்கிச் சென்ற யானை,] மக்கா எல்லையைத் தாண்டிச் செல்ல மறுத்து நின்று விட்டது.
இருளத் தொடங்கியதும் விசித்திரமான பயங்கரமான ஒலி படையினரின் காதுகளை துளைத்து அதிகரித்துக்கொண்டே வந்தது.
பார்வைக்கெட்டிய தொலைவு வரை வானம் முழுக்க மேகக் கூட்டம் யோலசிறு. பறவைகள்
அவை கொண்டு வந்த சிறிய கூழாங்கற்களை விசியடிக்க. அக்கற்கள் பட்டவுடன் படை வீரர்களும் யானைகளும் மென்று தின்ற வைக்கோல் போல் ஆகிவிட
அச்சத்தினால் நிலை குலைந்த படையினரும், அப்ரஹாவும் நாடு திரும்பினர். வழியில் படையினரில் பலரும்
இறந்து போயினர்.
அப்ரஹாவும் நாடு போய்ச் சேர்ந்ததும் இறந்து விட்டார்.
இச்சம்பவம் நடைபெற்றபோது அப்த்-அல்-முத்தலிபின் மகன் அப்த்-அல்லாஹ் வர்த்தகம் செய்வதற்காக சிரியா, பலஸ்தீன் பிரதேசங்களுக்குச் சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில் யத்ரிப் (மெதீனா) நகரில் சுகவீனமுற்று மரணமானார். அதேநேரம் கர்ப்பமாக இருந்த அப்த்-அல்லாஹ்வின் மனைவி ஆமினாவுக்கு சில வாரங்களின் பின்னர் முகம்மது நபி பிறந்தார். அதன் காரணமாகவே முகம்மது நபி பிறந்த ஆண்டுக்கு யானை ஆண்டு என்ற பெயர் வழங்கலாயிற்று.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக்
முதல் சரியான விடை
சிராஜுதீன
தல்லத்
ஹசன் அலி
கதீப் மாமுனா லப்பை
(ஒரு அன்பான வேண்டுகோள்
Please avoid irrelevant answers)
இன்றைய வினா
அல்கவுதர் என்ற சிறிய சூரா நபி பெருமானார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அருளியது என்று பார்த்தோம்
இன்னொரு ஓரளவு பெரிய முழு சூராவின் மூலமும் இப்படி ஆறுதல் சொல்கிறான்
இறைவன்
என்பது அறிஞர்கள் கருத்து
இது எந்த சூரா?
இறைவன் நாடினால்
விடை விளக்கத்துடன் அடுத்த வாரமும்
தமிழில் நாளையும் சிந்திப்போம்
13ரபியுல் அவ்வல் (3) 1445
2909 2023 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment