இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
20 102023 வெள்ளி
28 , திருமறை 12
குரான் சூராக்கள் பற்றி எளிய விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்
சென்ற பதிவில் சூராஹ் 110 அந்நஸ்ர் பற்றிப் பார்த்தோம்.
அதன் நிறைவு வினா
மிக மிக எளிய வினா
குளிர் காலம் என்ற பொருள்படும் பெயருள்ள சூராஹ் எது ?
விடை
சூராஹ் 106 குறைஷ்/குளிர்காலம்( மக்கா சுராஹ் )
நான்கே வசனங்கள் உள்ள இந்த சிறிய சூராவின் சிறப்புகள்
4 வசனங்கள் கொண்ட 2 சூராகளில் இது ஓன்று
மற்றது சூராஹ் 112 அல் இக்லாஸ் –குல்கு வல்லாகு
சூராஹ் 105 இறைவன் காபாவை யானைப் படையிடமிருந்து காப்பாற்றியது பற்றிச்சொல்கிறது
அதற்கடுத்த இந்த சூராவில் அது பற்றி இறைவன் குறைஷிக்களுக்கு நினைவூட்டுவது போல் அமைந்துள்ளது
இந்த சூராவின் முதல் வசனத்தில் வரும் قُرَيْشٍ
குறைஷ் என்ற சொல் ,
இரண்டாம் வசனத்தில் வரும்
الشِّتَاءِ
Ashshita-I அஷ்ஷிதா குளிர் காலம்
என்ற சொல்
இரண்டும் இந்த சூராவுக்குப் பெயராக அமைந்துள்ளன
இறை இல்லமான காபா ,மக்கா வாசிகளான குறைஷிகளுக்கு
பல வணிக வாய்ப்புகளையும் நலன்களையும் அளிக்கிறது
மேலும்
Caliph (al-Khilafah) எனும் தலைமைப் பதவி
(al-Hijabah) எனும் காபாவின் பாதுகாவலர் பதவி
(al-Siqayah) எனும் புனிதப் பயணிகளுக்கு தண்ணீர் வழங்கும் உரிமை
இவையெல்லாம் குறைஷி குலத்துக்கே உரியவை
அந்தக் குலத்தில் நபிகள் தோன்றியதும்
குறைஷ் என்ற பெயரில் சூராஹ் இருப்பதும் இன்னும் கூடுதல் சிறப்புகள்
இவ்வளவையும் அள்ளி வழங்கிய இறைவன் தன்னையே வணங்குமாறு அவர்களுக்கு கட்டளை இடுகிறான்
Winter surah in Quran
என்று கூகுளில் தேடினால் இந்த சூரா வருகிறது
விடை அனுப்ப முயற்சித்த சகோ சிராஜூதீனுக்கு நன்றி
106. Surah Quraysh ﷽
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
106:1 لِإِيلَافِ قُرَيْشٍ
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
106:2 إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
106:3 فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ
இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
106:4 الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
சூராஹ் 106 குறைஷ்
லீ இலாபி குறைஷின்
ஈலாபிஹீம் ரிஹ்ள தஷ்ஷிதாயி வஸ்ஸய்ப்
பயக்புதூ ரப்பஹாதல் பய்தில்லாதி
அத்அமஹும் மின் ஜூஇன் வ ஆமனஹும்மின் கல்ப்
இன்றைய
மிக மிக எளிய வினா
பழத்தின் பெயரில் அமைந்த சூராஹ் எது ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் அடுத்த வாரமும்
நாளை தமிழிலும் சிந்திப்போம்
04 ரபியுல் ஆகிர் (4) 1445
20 102023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment