குற்றாலச் சாரலில் 33/24 நாட்கள்
270923 புதன்
செங்கோட்டை தொடரி நிலையத்தில் இறங்கியது முதல் திரும்ப தொடரியில ஏறும் வரை ஒவ்வொரு நொடியும்
மனமுவந்த உபசரிப்பு
சிறப்பான வசதிகள்
சுவையான விருந்து
எனத் திக்குமுக்காட வைத்து விட்டார்
வெங்காயச் செல்வன் ஜனாப் இஸ்மாயில்
சுல்தான் மாமா மகள் மெகராஜ் மகன் திருமணம் இலஞ்சியில்
தொலை பேசி அழைப்பில்
சந்தனம் மணக்கும் அழைப்பிதழில்
தொடரி நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல வண்டியில்
தங்கும் அறையில்
ஒவ்வொரு வேளை உணவிலும் அவர்கள் அன்பும் பண்பும் பாசமும் அக்கரையும்
வெளிப்பட்டது
மிகப்பெரிய அழகான மணக்கூடம் மேலும் அழகாய் அலங்கரிக்கப்பட்டு மிளிர்ந்தது
நிகழ்ச்சி மேலாளர்கள் ஆண்களும் பெண்களும் அழகான சீருடையில்
ஆயிரக் கணக்கில் கூட்டம்
நல்ல சுவையான பிரியாணி பக்க உணவுகள்
இரவு பார்டர் புரோட்டா உணவகத்திலிருந்து அவர்கள் சிறப்பு பக்க உணவான கன் சிக்கனுடன் பரோட்டா
அடுத்த நாள் குற்றாலம் செல்ல வண்டி
இறைவன் அருளால் நல்ல பருவநிலை அருவிகளில் கொட்டும் நீர்
பழைய அருவி புலி அருவி பெரிய அருவியில் சுகமான குளியல் உடனே பசியாற சுடச்சுட பஜ்ஜி பக்கோடா தேநீர்
நெருங்கிய. சுற்றங்கள் சிராஜ்
தல்லத் (நாசர்) பீர் குடும்பங்களுடன் குற்றாலப் பயணம் மிக இனிமையாக இருந்தது
மகன் பைசலுக்கு இது குற்றாலம் முதல் வருகை
நன்கு அனுபவித்துக் குளித்தார்
மதிய உணவு ஜனாப் இஸ்மாயில் வீட்டில்
அங்கும் கனிவான கவனிப்பு
வெங்காயச் செல்வன்
சிறு விளக்கம்
பள்ளிப் பருவத்தில் உழைக்கத் துவங்கினார் இஸ்மாயில்
அரை நூற்றாண்டு காலம் இடைவிடாத கடும் உழைப்பில்
உருவானது மிகப் பெரிய வணிக நிறுவனம்
வெங்காயம் பூண்டு உள்நாட்டில் மொத்த வணிகம்
ஏற்றுமதியாளர்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் போகிறது
அந்தப் பகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ச்சி
வங்கி வாடிக்கையாளர்கள் சிலர் இல்லத் திருமணம் சிறப்பாக பிரமாண்டமாக நடப்பதை பார்த்திருக்கிறேன்
ஆனால் நம் நெருங்கிய சுற்றங்களில் இது சிறப்பான நிகழ்வுகளில் ஒன்றாக கூடுதல் சிறப்புடன் நினைவில் பதிந்து நிற்கிறது
இஸ்மாயில் குடும்பத்தினர்
புதுமணமக்கள்
என அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் துவாக்கள்
நிறைவாக
ஒரு மலரும் நினைவு
பல ஆண்டுகள் முன்பு
மெகராஜ் இஸ்மாயில் திருமணம் நெல்லையில்
வரவேற்பு செங்கோட்டை பகுதியில்
அப்போது குற்றாலத்தில் குளித்தது
அதன்பின் இப்போதுதான்.....
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
27092023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment