Tuesday, 17 October 2023

கடலை மிட்டாய் 18 10 23 புதன்

 




கடலை மிட்டாய்

18 10 23 புதன்
அண்மையில் மைத்துனர் பீர் மகன் நாமிக் திருமணம்
மூன்று நாள் விருந்து, நல்ல ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பு
காரைக்குடி திருமண மண்டபத்தில்
திருமண நிகழ்விடம் என்ற பெயர் புதுமை
மண்டபம் கொள்ளாத அளவுக்குக் கூட்டம்
அனைவரும் சாப்பிடும் அளவுக்கு சமையல்
அடுத்த நாள் புதுகோட்டையில் மணமகன் வீட்டு விருந்தில் கடலை மிட்டாய் இலையில் வைத்திருந்தார்கள்
அந்தக் குடும்பத்தின் கடைசிக் கல்யாணம் அது என்பதால்
எல்லாப் பிள்ளைகளுக்கும் நல்ல முறையில் மண வாழ்வு அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் முகமாக கடலை உருண்டை / க மி இடம் பெறுகிறதாம்
கடைசிக் கல்யாணம் , கடலை , கடவுள் என்று சொல்ல இனிமையாக எளிமையாக இருப்பதும் கூடுதல் காரணமாக இருக்கலாம்
எனக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஓன்று
கடலை மிட்டாய்
கோவில்பட்டி கடலை மிட்டாய் உலக அளவில் பெயரும் புகழும் பரவியது , புவிசார் குறியீடு பெற்றது என்றெலாம் கேள்விப் ப்ட்டிருக்க்கிறேன்
ஆனால் அதை விட மிகச் சுவையும் மணமும் கொண்ட க மி திருச்சியில் இருந்து ஒரு உறவினர் பாளம் பாளமாக உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து குறைந்த விலையில் வாங்கி வருவார்
ஒரு விதமான சிவப்பு நிறம் , இடையிடையே வறுத்த தேங்காய்ப்பூ துகள்கள் , ஒரு இனிய மணம்
உறவினர் யார் என்பது மறந்து விட்டது
வாயில் போட்டால் நீண்ட நேரம் அந்த சுவையும் மணமும் நாவிலும் மனதிலும் ஒட்டிக்கொண்டு இருக்கும் ,
இன்னும் நினைவில் நிற்கிறது
“கடலை உடலுக்கு நல்லது, இதயத்துக்கு வலிமை தரும், புரதச் சத்து நிறைந்தது .
க மி யில் உள்ள கருப்பட்டி /வெல்லம் கடலையில் உள்ள பித்தம் , அதனால் உண்டாகும் மயக்கத்தை நீக்கி விடும்
எனவே க மி இரட்டிப்பு நன்மை பயக்கும் “
என்ற மருத்துவக் கருத்து ஒருபுறம் ,
இதற்கு நேர்மாறாக
“ கடலை உடல் நலத்துக்கும் குறிப்பாக இதயத்துக்கும் ஆகாது
கடலை சாப்பிட்டால் சிறு நீரகம் பழுதாகும்
க மி யில் இனிப்பு சேர்வதால் அது நீரிழிவை உண்டாக்கும்
என இரட்டைத் தீமை “
என்று மற்றொரு புறம் முழுமையான எதிர்மறைக் கருத்து
இதுவும் மருத்துவக் கருத்துதான்
இதெல்லாம் இப்போது படிப்பது ,காதில் விழுவது
அப்போதும்சரி இப்போதும் சரி பிடித்ததை சாப்பிட்டுத்தான் பழக்கம்
நல்லதா கெட்டதா , இதில் கொழுப்பு எவ்வளவு, சர்க்கரை எவ்வளவு என்றெல்லாம் நினைத்துப் பார்த்து சாப்பிட்டதில்லை
கொழுப்பு ,சர்க்கரை பற்றி குடிக்கும் தண்ணீரில் கூட ஆராய்ச்சி செய்வது இன்றைய தலை முறையின் அறிவு சார்ந்த நாகரீகம்
இதனால் அவர்கள் ஒதுக்கி வைப்பது தேங்காய் ,இனிப்பு, பனிக்கூழ்,நெய் , பால்,அரிசி என இன்னும் பல நல்ல சுவைகள் நலம் தரும் உணவுகள்
சிலரின் உணவு முறைகள் பற்றி அறிந்தால் ---
ஆடை இல்லாத பால் ( மானங்கெட்ட பால் என்றார் ஒரு அறிஞர்)
பச்சைக் காய்கறிகள் , கொதிக்க் வைத்து ஆற வைத்து சத்துகள் இல்லாத தண்ணீர் –
இதை எப்படி சாப்பிட்டு வாழ்கிறார்கள் என்று வியப்புண்டாகும்
அப்படி சாப்பிட்டும் 100 % நலமுடன் இருப்பதாகத் தெரியவில்லை
நிறைவாக
மூன்று நாளும் நல்ல அலைச்சல்
சாப்பாடும் சற்று அதி கம்தான்
இருத்தாலும் பெரிதாக அலுப்புத் தெரியவில்லை
காரணம் நான் பல முறை உணர்ந்து எழுதியிருக்கிறேன் –
மண்ணின் மனம்
சொந்த ஊர் இல்லை என்றாலும் அந்தப் பகுதிக்குப் போனதுமே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
எல்லாவற்றிற்கும் நன்றி இறைவனுக்கு
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
1810 20 23 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment