Thursday, 5 October 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் சூரா 12 யூசுப் ( பகுதிஇரண்டு ) 06102023 வெள்ளி







 இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சூரா 12 யூசுப் ( பகுதிஇரண்டு )
06102023 வெள்ளி
24 , திருமறை 8
நேற்றைய வினா
நபி யூசுப் புக்கும்
சூரா யூசுப் புக்கும்
மிகப் பல சிறப்புகள் உண்டு
அவை என்ன?
விடை
சரியான விளக்கமான விடைஅனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா
முதல் சரியான விடை ( கொஞ்சம் சுருக்கமாக எழுதிப் பழகினால் நலம் )
ஷிரீன் பாரூக்(தமிழ் வினாக்களுக்கு தமிழ் விடைஅனுப்பலாம்)
தல்லத்
அவர்கள் அனுப்பிய விடைகளைப் பார்க்குமுன் என் சிறு விளக்கம்
“மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம்” –
(12 :3)
.
என்ற இறைவன் மொழியுடன் துவங்கும் இந்த சூராஹ் முழுதும் யூசுப் நபி பற்றியே பேசுகிறது
இது மற்ற சூராகளுக்குக்கு இல்லாத ஒரு சிறப்பு
யூசுப் நபிக்கும் இறைவன் அளித்த ஒரு சிறப்பு
மிகப் பொருத்தமான தலைப்பு இருப்பது, முழு சூராவும் ஒரே நேரத்தில் இறக்கப்ட்டது இவை மற்ற சிறப்புகளாகும்
நான்கு தலைமுறை நபி என்பது யூசுப் நபியின் தனிச் சிறப்பு
நபி யூசுபின் தந்தை யாகூப் நபி
நபி யகூபின் தந்தை நபி இஸ்ஹாக்
நபி இஸ்ஹாக்கின் தந்தை நபி இப்ராகிம்
உலகில் உள்ள அழகில் பாதியை இறைவன் நபி யுசுபுக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள பாதியைத்தான் உலக மக்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான் என்பது நபி மொழி
“அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி). (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்; "அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.” இது இறைவன் சொல்வது
(12:31)
மற்ற விடைகள் விளக்கமாக இருப்பதால் இது போதும் என நினைக்கிறேன்
மேலும் அழகின் ஈர்ப்பு என்ற தலைப்பிலும் வேறு சில தலைப்புகளிலும் யூசுப் நபி, யூசுப் சூரா பற்றி விரிவாக பல முறை எழுதியிருக்கிறேன்
நல்ல செய்திகளைத் திரும்பத் திரும்ப எழுதுவது, படிப்பது நல்லதுதானே
சகோ தல்லத்
அல்லாஹுத்தஆலா இந்த சூரா யூசுபில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு யூசுப் நபியின் முழு சரித்திரத்தை கூறுவதன் மூலம் ,நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு ஆறுதல் கூறுகிறான். மேலும் தெரியாத ஒரு சரித்திரத்தை சொல்வதன் மூலம் இவ்வேதம் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்டது என்பதையும் உறுதி கூறுகிறான். இந்த சூராவில், பொறாமை கொள்ளக்கூடாது ஏழ்மையிலும் நன்மையை செய்ய வேண்டும், துன்பத்திலும் பொறுமையை கையாள வேண்டும் ,நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது என்பது போன்ற பல படிப்பினைகளை அறிவுரைகளாக அல்லாஹுத்தஆலா நமக்கு அளித்திருக்கிறான். துன்பத்திற்கு பின் நன்மை வந்தே தீரும் ,எந்த நிலையிலும் அல்லாஹ் விடமே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளும் சொல்லப்பட்டுள்ளது .
நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழகிய தோற்றமுடையவர்களாக இருந்தார்கள் ,பொறுமை நேர்மை, ஒழுக்கம், அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணியும் தன்மை ,தந்தை மற்றும் சகோதரர்களிடம் அன்பு வைத்தல், நிர்வாகத் திறமை கனவுக்கு பொருள் கூறும் வல்லமை ஆகிய குணங்களைக் கொண்டிருந்தார்கள்.
சகோ ஷர்மதா
[13:04, 5/10/2023]
: இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
(அல்குர்ஆன் : 12:6)
[13:04, 5/10/2023] Ayub Sharmatha: (இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
(அல்குர்ஆன் : 12:15)
[13:08, 5/10/2023] Ayub Sharmatha: யூசுஃப் நபி அவர்களுக்கு கனவுகளின் விளக்கத்தைக் கற்றுக்கொடுத்தான்.
அவருக்கு நேர்ந்த துயரங்கள் பற்றி அல்லாஹ் யூசுஃப் நபிக்கு முன் கூட்டியே வஹி முலம் அறிவித்திருந்தான்
[13:15, 5/10/2023] Ayub Sharmatha: எந்த நபிக்கும் சொல்லாத அவர்கள் வாழ்வின் முழுச்சரிதையும் சூராவாக இறக்கி அல்லாஹ் யூசுப் நபியைச்சிறப்பித்துள்ளான்.இவ்வாறுகுரானில் அல்லாஹ் தனிப்பட்ட சிறப்பைக் கொடுத்திருக்கிறான் [17:31,
ஷிரீன் பாருக்
5/10/2023]: Yusuf surah is full of meaningful messages of patience, reliance on Allah and how to overcome hardship and betrayal
[17:32, 5/10/2023] Farook Nellai Shireen: Prophet yusuf alaihisallam is the son of the other prophet
He is the most handsome person
Most patient
Most obedient
Most dedicative
வரும் பகுதிகளில் குரானின் மற்ற சூராக்கள் பற்றி ஓரளவு சுருக்கமான விளக்கங்களைப் பார்ப்போம்
இன்றைய (மிக எளிய) வினா
“உங்கள் வழி உங்களுக்கு
என் வழி எனக்கு “
மிக நன்றாகத் தெரிந்த குரான் வசனம்
இது எந்த சூராவில் வருகிறது ?
இறைவன் நாடினால் விடையுடன் அடுத்த பகுதியிலும்
தமிழில் நாளையும் சிந்திப்போம்
20 ரபியுல் அவ்வல்(3) 1445
06 10 20 23 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment